ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஏட்டு மாரடைப்பால் மரணம்

நேற்று இரவு வழக்கம்போல் பணிய முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் தனகொடி வீட்டுக்கு வந்துள்ளார். அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தனகொடி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஏட்டு மாரடைப்பால் மரணம்
Published on

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் தனகொடி (59). இவர் சேலம் மகுடஞ்சாவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணிய முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் தனகொடி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்து தூங்க சென்றார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தனகொடி பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கு போலீஸ் உயரதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com