அந்தியூர் போலீஸ் ஏட்டு தூக்குபோட்டு தற்கொலை

ராஜா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் போலீஸ் ஏட்டு தூக்குபோட்டு தற்கொலை
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் போலீஸ் நிலை யத்தில் ராஜா (40). என்பவர் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உளளனர். இவர் பவானி காவலர் குடி யிருப்பில் குடும்பத்துடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

பவானி காவலர் குடியிருப்பில் குடி இருந்து வரும் ராஜா கடந்த 3 மாத ங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இதையடுத்து கடந்த 3 மாதங்களாக பணி விடுப்பில் அவர் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜா பவானி காவலர் குடி இருப்பில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட அந்த பகுதியில் உள்ள மற்ற போலீசார் அவரது உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com