search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்பேஸ் கோ 3"

    பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டதற்கு கூகுள் நிறுவனம் பத்து புதிய ஸ்மார்ட்போன்களை அனுப்பியிருக்கிறது. #Pixel3



    பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் பிழை ஏற்பட்டதற்கு பணத்தை திரும்ப கேட்டவருக்கு கூகுள் நிறுவனம் பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பியதாக தகவல் வெளியகியுள்ளது.

    ரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் அறியப்படும் நபர் தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட பிழைக்கு பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இவருக்கு கூகுள் தரப்பில் இருந்து 80 டாலர்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும், மீதித் தொகைக்கு பதிலாக கூகுள் நிறுவனம் பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பியிருக்கிறது.



    பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மதிப்பு 9000 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டிருப்பதை ரெடிட் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர் கூகுள் மீதித் தொகையை கொடுத்தால், ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்.

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் பிக்சல் சாதனங்களை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். எனினும், கூகுள் நிறுவனம் பிழை ஏற்பட்ட சாதனத்திற்கு வெறும் 80 டாலர்களை மட்டுமே கொடுத்திருக்கிறது. இத்துடன் சீடோஸ் பின்க் நிற பிக்சல் போன் ஒன்றை முன்பதிவு செய்திருக்கிறார்.

    ஒரு போன் முன்பதிவு செய்ததற்கு கூகுள் பத்து புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அவருக்கு விநியோகம் செய்திருக்கிறது.
    ராகவா லாரன்ஸ் இயக்கி, அவருடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி நடிப்பில் வெளியாகி இருக்கும் `காஞ்சனா 3' படத்தின் விமர்சனம். #Kanchana3 #Kanchana3Review #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீமன், தாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இவர்களது மகள் என அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்கிறார்கள்.

    போகும் வழியில் மரம் ஒன்றில் அடிக்கப்பட்ட ஆணி ஒன்றை லாரன்ஸ் பிடுங்கி விடுகிறார். அதன்பின்னர் அதில் இருக்கும் பேய், அவர்களுடன் சேர்ந்து வருகிறது.



    தாத்தா வீட்டிற்கு ராகவா லாரன்சின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸ் மீது காதலலுடன் அவரையே சுற்றி வருகிறார்கள். அவரும் மூன்று பேரிடமும் நெருக்கமாக பழகி வருகிறார்.

    பேய் அந்த வீட்டிற்கு வந்த பிறகு சில விரும்பத் தகாத விஷயங்கள் அங்கு நடக்க ஆரம்பிக்கிறது. மேலும் வீட்டில் இருக்கும் அனைவரும் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறார்கள். இதையடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை போட செல்ல அங்குள்ள அகோரி ஒருவர், அவர்கள் வீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறி, சில சோதனைகளை செய்யச் சொல்கிறார். அவர்களும் அதனை செய்ய, வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பது உறுதியாகிறது.



    ஒரு கட்டத்தில் அந்த பேய் லாரன்சின் உடலை பயன்படுத்திக் கொள்ள, வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரிய வருகிறது. 
    கடைசியில், லாரன்ஸ் உடலில் பேயாய் வந்தவரின் முன்கதை என்ன? எதற்காக லாரன்ஸ் உடலில் புகுந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே காமெடி கலந்த திகிலான மீதிக்கதை.

    இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் தனது வழக்கமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ஆக்‌ஷன், நடனம், மாஸ் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். காஞ்சனா முதல் பாகத்திற்கு பிறகு கோவை சரளா - தேவதர்ஷினி கூட்டணி இதிலும் கலக்கியிருக்கிறது. கோவை சரளா தனது பாதி ஆங்கிலம் கலந்த பேச்சால் அனைவரையும் கவர்கிறார். அதேபோல் கணவன், மனைவியாக வரும் ஸ்ரீமன் - தேவதர்ஷினி கூட்டணியின் வழக்கமான காமெடியால் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.



    வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகிய மூன்று நாயகிகளுக்கும் லாரன்சை காதலிப்பது மட்டுமே வேலை. கவர்ச்சியுடன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். டெல்லி கணேஷ், அனுபமா குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, சூரி தான் வரும் காட்சிகளில் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார். சாய் தீனா, கபீர் துஹான் சிங் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒரு இயக்குநராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா முதல் பாகத்தை போலவே இந்த பாகத்தையும் இயக்கியிருப்பது பெரிய பலம். படத்தில் எந்த அளவுக்கு திகில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு காமெடியையும் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார். காஞ்சனா 2-க்கு ஓரளவுக்கு மட்டுமே வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படம் காஞ்சனா முதல் பாகத்தை நியாபகப்படுத்தும்படி உருவாகி இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனலாம்.



    திரைக்கதையின் வேகத்திற்கு படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் வேகத்தடையாக அமைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் சென்டிமெண்ட் காட்சிகளும் போரடிக்க வைக்கிறது. மற்றபடி படம் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக உருவாகி இருக்கிறது. படத்தின் முடிவில் காஞ்சனா 4-ஆம் வரும் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

    தமனின் பின்னணி இசையும், வெற்றியின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

    மொத்தத்தில் `காஞ்சனா 3' கலகல பேய் கதை. #Kanchana3 #Kanchana3Review #RaghavaLawrence #Vedhika #Oviya #NikkiTamboli #KovaiSarala

    தற்போது காஞ்சனா 3 படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்திருக்கும் வேதிகா, இணைய தொடரில் நடிக்க நிபந்தனை போட்டிருக்கிறார். #Vedhika
    வேதிகா லாரன்சுக்கு ஜோடியாக நடித்துள்ள முனி 4 படம் இந்த வாரம் வெளியாகிறது. வேதிகா அளித்துள்ள பேட்டி:

    தமிழில் சில காலம் பார்க்க முடியவில்லையே?

    ஆமாம். கன்னடம் மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்து அமைந்த வெற்றிப் படங்கள்தான் என்னை வேறு எங்கும் செல்லவிடாமல் செய்தன. ‘சிவலிங்கா’ கன்னட படம் பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பெற்றதும் அங்கேயே தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டிய சூழலுக்கு சென்றேன். அதேமாதிரி மலையாளத்தில் திலீப், பிருத்விராஜ் படம் என்று அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தன. மற்றபடி எந்தக் காரணமும் இல்லை. இதோ இப்போது ‘காஞ்சனா 3’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து 2 நேரடி தமிழ் படங்கள் நடிக்க உள்ளேன்.

    இந்தி அனுபவம் எப்படி இருக்கிறது?

    மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்தியில் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்த படத்தில்தான் நானும் நாயகியாக அறிமுகமாகிறேன். திரில்லர் களம். பிடித்த கதை. உடனே சம்மதித்தேன். இவற்றை எல்லாம்விட பாலிவுட் உலகம் எனக்கு புதிது. அங்கே உள்ள சினிமா வாழ்வியலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகவும் காத்திருக்கிறேன்.



    கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் எப்போது பார்க்கலாம்?

    கதாநாயகியை மையமாக கொண்ட கதைகளில் நடித்தால்தான் ஒரு நடிகை கவனம் ஈர்க்கப்படுவார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கதாநாயகன் படங்களில் கூட நான் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த படங்களும் இங்கே உண்டு. ஹீரோயினை மையமாக கொண்ட படத்தில் நிச்சயம் நானும் நடிப்பேன். எனக்கு சர்வதேச அளவில் வெப் சீரியலில் நடக்க ஆர்வம்.

    அடுத்து இயக்குனரா?

    இப்போது பாலிவுட்டில் தடம் பதித்து விட்டேன். அங்கே தொடர்ந்து நடிப்புக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இப்போதைக்கு நடிப்பை தவிர வேறு எந்தக் களத்திலும் கவனம் செலுத்தப் போவதில்லை.
    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் அந்நிறுவன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #Google



    கூகுள் ஸ்டோர் வலைதளத்தில் அந்நிறுவனம் பதிவிட்டிருக்கும் டீசரில் மே 7 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதே நாளில் அந்நிறுவனத்தின் I/O 2019 நிகழ்வும் துவங்குகிறது.

    கடந்த சில வாரங்களாக கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி பிக்சல் 3ஏ, பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போன்களை இந்நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் சமீபத்தில் கூகுள் வலைதளத்திலேயே லீக் ஆனது. புதிய ஸ்மார்ட்போன்கள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL மாடல்களின் குறைந்த விலை சாதனங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புதிய ஸ்மார்ட்போன்களில் ஒரே மாதிரியான கேமரா அம்சங்கள் மற்றும் செயல்திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.



    இவைதவிர ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ரெசல்யூஷன், மிட்-ரேன்ஜ் பிராசஸர் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படலாம் என தெரிகிறது. இவற்றுடன் ஸ்டோர் பக்கத்தில் அவெஞ்சர்ஸ் என்ட் கேம் திரைப்படத்தை சுட்டிக்காட்டும் “help is on the way” எனும் வாசகம் இடம்பெற்றிருக்கிறது. 

    இதனால் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்யேகமாக வார் மெஷின், தார், பிளாக் விடோ, ராகெட், கேப்டன் மார்வெல் உள்ளிட்டவற்றின் ஏ.ஆர். எமோஜி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் பிக்சல் போன்களில் ஐயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், நெபுளா, ஒகேய் உள்ளிட்டவற்றின் எமோஜிக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    சமீபத்தில் வெளியான தகவல்களில் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதன்படி பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் 1080x2160 பிக்சல், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ரா்யடு 9 பை இயங்குதளம் வழங்கப்படலாம். பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது. 
    சியோமி நிறுவனத்தின் 32 எம்.பி. கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய ரெட்மி வை3 ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.



    அறிமுக தேதியுடன் ஸ்மார்ட்போனின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் டாட் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்னதாக சியோமி அறிமுகம் செய்த ரெட்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதே போன்ற டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்தது.



    இந்தியாவில் ரெட்மி  வை3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்படுகிறது. 



    இதுதவிர புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் P2i நானோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், இரண்டு நாட்கள் பேக்கப் வழங்கும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.
    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க அவருடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி ஆகியோர் நாயகியாக நடித்துள்ள காஞ்சனா 3 படத்தின் முன்னோட்டம். #Kanchana3 #RaghavaLawrence
    சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `காஞ்சனா 3'.

    ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடித்திருக்கிறார்கள். சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - வெற்றி பழனிச்சாமி, சர்வேஷ் முராரி, இசை - டூபாடு, பின்னணி இசை - எஸ்.தமன், படத்தொகுப்பு - ரூபன், கலை - ஆர்.ஜனார்த்தன், ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன், நடனம் - ராகவா லாரன்ஸ், பாடல்கள் - விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன், 
    தயாரிப்பு மேற்பார்வை - விமல்.ஜி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராகவா லாரன்ஸ்.



    நடிகை ஓவியா அளித்த பேட்டியில், ’எனக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், என் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். என்னோட அடுத்த படமான ‘காஞ்சனா 3’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முற்றிலும் வேறமாதிரி இருக்கும்’ என்றார்.

    படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    காஞ்சனா 3 டிரைலர்:

    நுபியா நிறுவனம் தனது ரெட் மேஜிக் 3, ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #Nubia



    நுபியா நிறுவனம் இந்தியாவில் மூன்று சாதனங்களை மே மாதத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய நுபியா சாதனங்களின் அறிமுக தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இவை மே 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நுபியா ரெட் மேஜிக் 3, வளையக்கூடிய நுபியா ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் இயர்போன் என மூன்று சாதனங்கள் மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    நுபியா தனது ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் சாதனத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை அந்நிறுவன பொது மேலாளர் தனது வெய்போவில் தெரிவித்தார்.



    அந்த வகையில் புதிய ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரேசர் போன் 2 போட்டியாக அமைந்திருக்கிறது. 

    ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் ஏர் மற்றும் லிக்விட் டூயல்-கூலிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது உயர் ரக கேம்களை விளையாடும் போது ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும். இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் 4D ஷாக் வைப்ரேஷன் மோட்டார், டி.டி.எஸ். 7.1 3D சரவுண்ட் சவுண்ட் வழங்கப்படுகிறது. 

    ரெட் மேஜிக் 3 மட்டுமின்றி ஸ்மார்ட்வாட்ச் சாதனமும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனத்தில் 4.0 இன்ச் வளையக்கூடிய OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் வியர் 2100 சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. நுபியா ஆல்ஃபா சாதனம் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    காஞ்சனா 3 படத்தில் DooPaaDoo தளம் மூலம் திறமையான இளைஞர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருப்பதாக மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். #DooPaaDoo #MadhanKarky
    சுயாதீன இசை கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது DooPaaDoo. ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. 

    பாடலாசிரியரும், DooPaaDoo-வின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, "இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017-ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டூடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார். 



    காஞ்சனா 3-ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDoo-வை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது." என்றார். #DooPaaDoo #MadhanKarky #Kanchana3 #RaghavaLawrence

    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் கூகுள் பிளே தளத்தில் வெளியாகியிருக்கிறது. #Pixel3a



    கூகுள் பிளே டெவலப்பர் கன்சோல் தளத்தில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் 2220x1080 பிக்சல் FHD+ 440 PPI ரக டிஸ்ப்ளே, பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 2160x1080 பிக்சல் FHD+ 440 PPI டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன்களில் முறையே 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் இதே அளவு ஸ்கிரீன் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னதாக பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் சார்கோ மற்றும் பொனிட்டோ என்ற பெயர்களில் உருவாக்கப்படுவதாக கூறப்பட்டது.

    கடந்த வாரம் வெளியான ஆண்ட்ராய்டு கியூ பீட்டாவில் புதிய ஸ்மார்ட்போன் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில் தற்சமயம் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் வெளியாகி்யிருக்கிறது.



    இதில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 670 பிராசஸரும், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களிலும் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. அல்லது 64 ஜி.பி. மெமரி, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி, வைடு-ஆங்கிள் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் பின்புறம் கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ் அம்சங்கள் மற்றும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை.



    கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - பிக்சல் 3ஏ: 5.6 இன்ச் 2220x1080 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 440 PPI
    - பிக்சல் 3ஏ XL: 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே, 400 PPI
    - பிக்சல் 3ஏ: ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 615 GPU
    - பிக்சல் 3ஏ XL: ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. வைடு-ஆங்கிள் செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - ஆக்டிவ் எட்ஜ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: OnLeaks | 91mobiles
    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.

    அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. இது இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Pixel3a



    கூகுள் நிறுவன பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கூகுள் வலைதளத்திலேயே பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டது.

    பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் பிக்சல் 3 மாடலின் சிறிய ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. கூகுள் ஸ்டோர் வலைதளத்தில் பிக்சல் 3ஏ என்ற பெயரில் ஸ்மார்ட்போன் தவறுதலாக பட்டியலிடப்பட்டு, பின் நீக்கப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் ஸ்டோரின் போன்ஸ் (Phones) பிரிவின் கம்பேர் போன்ஸ் (Compare Phones) பிரிவில் காணப்பட்டது.

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் கோடை காலத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் கூகுள் I/O 2019 நிகழ்வில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    கூகுள் நிறுவனம் 2019 I/O நிகழ்வை மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் பலமுறை வெளியானது. அதன்படி பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இருவித பதிப்புகளில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    இவற்றில் ஸ்னாப்டிராகன் 670 ரக பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் OLED டிஸ்ப்ளே, 12 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் மீண்டும் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Google



    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன் விவரங்கள் ஆண்ட்ராய்டு கோட் மூலம் வெளியானது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கூகுளின் மிட்-ரேஞ் ஸ்மார்ட்போன்கள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக இதே பெயர்கள் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்புக்கான கோடிங்கில் காணப்பட்டது. இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் 64 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. ஜெர்மனியில் இத்தகைய மெமரி வழங்கப்படும் என கூறப்படும் நிலையில், மற்ற சந்தைகளில் எவ்வளவு மெமரி வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.



    இத்துடன் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் வைட், பிளாக் மற்றும் ஐரிஸ் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஐரிஸ் நிறம் புளு-வைலட்டில் இருந்து வைலட் நிறங்களில் கிடைக்கும் ஷேட் ஆகும். பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் விலை 450 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.36,600) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 4 ஜி.பி. ரேம், 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்படுகிறது. பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களை கூகுள் எப்போது அறிமுகம் செய்யும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    புகைப்படம் நன்றி: SlashLeaks | 91Mobiles
    ×