search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pixel 3"

    கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் தான் அதற்கு சரியானதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை கூகுளின் விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன. 

    புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன்களில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிய காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் (iFixit) தெரிவித்துள்ளனர். iFixit விமர்சகர்கள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL மாடல்களுக்கு சரி செய்யக்கூடிய வசதிகள் நிறைந்த விஷயத்திற்கு 6/10 புள்ளிகளை வழங்கியிருக்கின்றனர். 



    2019 விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் உபகரணங்கள் அதிநவீனமாக இருப்பதால், இவற்றை எளிதில் சரி செய்திட முடியும் என தெரிவித்திருக்கின்றனர். புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே மட்டுமே கடினமாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

    மேலும் சோதனையின் போது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான வைப்ரேட்டர் மோட்டார் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் பேட்டரியை மாற்றுவது எளிமையான காரியமாகவே இருக்கிறது.

    பிளாஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கும் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.39,999 மற்றும் ரூ.44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீக்கப்பட்டுள்ளது.
    பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டதற்கு கூகுள் நிறுவனம் பத்து புதிய ஸ்மார்ட்போன்களை அனுப்பியிருக்கிறது. #Pixel3



    பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் பிழை ஏற்பட்டதற்கு பணத்தை திரும்ப கேட்டவருக்கு கூகுள் நிறுவனம் பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பியதாக தகவல் வெளியகியுள்ளது.

    ரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் அறியப்படும் நபர் தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட பிழைக்கு பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இவருக்கு கூகுள் தரப்பில் இருந்து 80 டாலர்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும், மீதித் தொகைக்கு பதிலாக கூகுள் நிறுவனம் பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பியிருக்கிறது.



    பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மதிப்பு 9000 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டிருப்பதை ரெடிட் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர் கூகுள் மீதித் தொகையை கொடுத்தால், ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்.

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் பிக்சல் சாதனங்களை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். எனினும், கூகுள் நிறுவனம் பிழை ஏற்பட்ட சாதனத்திற்கு வெறும் 80 டாலர்களை மட்டுமே கொடுத்திருக்கிறது. இத்துடன் சீடோஸ் பின்க் நிற பிக்சல் போன் ஒன்றை முன்பதிவு செய்திருக்கிறார்.

    ஒரு போன் முன்பதிவு செய்ததற்கு கூகுள் பத்து புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அவருக்கு விநியோகம் செய்திருக்கிறது.
    கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை இந்தியாவில் துவங்கியது. #Pixel3 #Pixel3XL



    கூகுள் சமீபத்தில் அறிமுகம் செய்த 2018 பிக்சல் ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 11ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், இவற்றின் இந்திய விற்பனை துவங்கியது. புதிய பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    முதற்கட்டமாக பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் கிளியர்லி வைட் மற்றும் ஜஸ்ட் பிளாக் என இரண்டு நிறங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதன் நாட் பின்க் நிறங்களின் விற்பனை இன்னும் துவங்கவில்லை.

    நவம்பர் 7ம் தேதிக்குள் புதிய பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தங்களது பழைய பிக்சல் அல்லது நெக்சஸ் போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரை இலவசமாக பெற முடியும். இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வழங்கப்படுகிறது. 



    பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளேவும், பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் குவாட் ஹெச்.டி., 18:5:9 நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க இரண்டு பிக்சல் போன்களிலும் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், டூயல் பிக்சல் ஆட்டோஃபோக்கஸ், டூயல் 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் புதிய ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பிக்சல் 3 (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.71,000 என்றும், 128 ஜி.பி. பிக்சல் 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.80,000 என்றும் பிக்சல் 3 XL (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.83,000 என்றும் 128 ஜி.பி. பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் விலை ரூ.92,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது. #Pixel3



    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்படுகின்றன. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்ய விரும்புவோர் பிளிப்கார்ட் வலைதளம் சென்று தங்களுக்கான மொபைலை முன்பதிவு செய்யலாம்.

    பிளிப்கார்ட் தளத்தில் இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்கலுக்கும் அறிமுக சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் வட்டியில்லா மாத தவணை முறை வசதியாக மாதம் ரூ.5,917 மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து ரூ.14,200 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் சார்பில் ரூ.199 விலையில் பைபேகை கியாரன்டி சலுகை இரண்டு பிக்சல் போன்களுக்கும் வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் மட்டுமின்றி ஏர்டெல் நிறுவனமும் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவுகளை ஏற்கிறது.

    பயனர்கள் குறைந்தபட்சம் ரூ.17,000 முன்பணம் செலுத்தி தங்களுக்கான சாதனங்களை பெற முடியும். மீதித் தொகையை தவணை முறையில் செலுத்தலாம். மாத தவணையுடன் போஸ்ட்பெயிட் சலுகை வழங்கப்படுகிறது, இந்த சலுகையில் டேட்டா, அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால் மற்றும் பிரீமியம் தரவுகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், குவால்காம் உயர் ரக பிராசஸர் ஆன ஸ்னாப்டிராகன் 845, டூயல் செல்ஃபி கேமரா, 4 ஜி.பி. ரேம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. #GooglePixel3 #GooglePixel3XL



    கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. 

    பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளேவும், பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் குவாட் ஹெச்.டி., 18:5:9 நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க இரண்டு பிக்சல் போன்களிலும் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், டூயல் பிக்சல் ஆட்டோஃபோக்கஸ், டூயல் 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் புதிய ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய பிக்சல் போன்களின் முக்கிய அம்சங்கள்

    டாப் ஷாட் - ஏ.ஐ. சார்ந்த இயங்கும் இந்த அ்மசம் பல்வேறு ஷாட்களை எடுத்து அவற்றில் சிறந்த புகைப்படத்தை தேர்வு செய்யும்.
    சூப்பர் ரெஸ் சூம் - சூம் செய்யும் போதும் துல்லியமான தரம் வழங்கும்.
    நைட் சைட் - குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை அதிக துல்லியமாக எடுக்கலாம்.
    போட்டோபூத் மோட் - ஏ.ஐ. கொண்டு பயனர் சிரிப்பது, நகைச்சுவை பாவணைகளை வழங்குவது, செல்ஃபி எடுக்க தயாராவது போன்றவற்றை கண்டறியும்.

    இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டைட்டன் செக்யூரிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை லாக் செய்து தகவல்களை பாதுகாப்பதோடு, டிஸ்க் என்க்ரிப்ஷனை பலப்படுத்துகிறது.

    பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் பிக்சல் வரலாற்று சிறப்பு கொண்ட டூயல்-டோன் டிசைன், அலுமினியம் ஃபிரேம், ஹைப்ரிட் கோட்டிங், போனின் முன்புறம் மற்றும் பின்பக்கம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பிக்சல் போன்கள் முந்தைய மாடல்களை விட 40% அதிக சத்தமாக இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் இவற்றில் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.



    கூகுள் பிக்சல் 3 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1080x2160 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.8, டூயல் PD ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS, 4K
    - 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/1.8, 75° FOV
    - 8 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 97° FOV
    - கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்(IP68)
    - முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்



    கூகுள் பிக்சல் 3 XL சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + OLED 18:5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.8, டூயல் PD ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS, 4K
    - 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/1.8, 75° FOV
    - 8 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 97° FOV
    - கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்(IP68)
    - முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்

    பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் கிளியர்லி வைட், ஜஸ்ட் பிளாக் மற்றும் நாட் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிக்சல் யு.எஸ்.பி.-சி இயர்பட்களுடன் வருகிறது.

    இந்தியாவில் பிக்சல் 3 (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.71,000 என்றும், 128 ஜி.பி. பிக்சல் 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.80,000 என்றும் பிக்சல் 3 XL (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.83,000 என்றும் 128 ஜி.பி. பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் விலை ரூ.92,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    பிக்சல் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் ஸ்டான்ட் விலை ரூ.6,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு அக்டோபர் 11-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது. இத்துடன் இந்தியாவின் முன்னணி ஆஃப்லைன் விற்பனையகங்களில் நவம்பர் 1-ம் தேதி முதல் கிடைக்கும்.

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போதோ அல்லது நெட்பேங்கிங் பயன்படுத்தும் போது முறையே ரூ.5000 மற்றும் ரூ.4000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனத்தின் 2018 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களான பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL மாடல்கள் கனடா நாட்டு வலைதளத்தில் பட்டியலிடப்பட்டன. #Pixel3XL
    கூகுள் பிக்சல் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் கனடா நாட்டு வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்கள் வழக்கமான பிளாக் மற்றும் கிளியர்லி வைட் நிறங்களுடன் நாட் பின்க் எனும் புதிய நிறம் கொண்டிருக்கின்றன.

    புதிய நிறம் மட்டுமின்றி ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கூகுள் பிக்சல் ஸ்டான்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போனின் விலையும் இடம்பெற்றுள்ளது.



    கூகுள் பிக்சல் 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1080x2160 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS, EIS, 4K வீடியோ ரெக்கார்டிங்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
    - ஸ்டீரியோ முன்பக்க ஸ்பீக்கர்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்



    கூகுள் பிக்சல் 3 XL எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி.+ AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS, EIS, 4K வீடியோ ரெக்கார்டிங்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
    - ஸ்டீரியோ முன்பக்க ஸ்பீக்கர்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் விலையும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி பிக்சல் 3 (64 ஜி.பி.) விலை 771 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.57,115 என்றும் பிக்சல் 3 (128 ஜி.பி.) விலை 871 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.64,550 என்றும், பிக்சல் 3 XL (64 ஜி.பி.) விலை 871 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.64,550 என்றும் பிக்சல் 3 XL (128 ஜி.பி.) விலை 971 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.71,980 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இத்தகவல்கள் கூகுள் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அக்டோபர் 9-ம் தேதி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். #Pixel3XL
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #smartphone



    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL ஸ்மார்ட்போன் மாடல்கள் அக்டோபர் 9-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக பலமுறை பிக்சல் 3 சீரிஸ் படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

    அந்த வகையில், பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் பதிவிட்டு இருக்கும் ரென்டர்களில் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்புறம் காட்சியளிக்கிறது. இறுதியில் புதிய பிக்சல் மாடல்களுக்கென வயர்லெஸ் சார்ஜிங் டாக் ஒன்றை வழங்கவும் கூகுள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

    இம்முறறை வெளியாகி இருக்கும் விவரங்கள் ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் 15 வருடங்களாக டிப்ஸ்டராக இருக்கும் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூகுள் பிக்சல் 3XL மாடலின் லைவ் படங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

    அதன்படி புதிய பிக்சல் 3XL ஸ்மார்ட்போனில் சிறிய கைரேகை சென்சார், டிஸ்ப்ளே நாட்ச், பெரிய சின் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் ஃபிராஸ்ட் செய்யப்பட்ட கிளாஸ் பேக் மற்றும் பக்கவாட்டுகளில் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படலாம் என தெரிவித்திருக்கிறார்.



    புகைப்படம் நன்றி: 9to5Google

    இத்துடன் பிக்சல் 3 மாடல்களுக்கு என வயர்லெஸ் சார்ஜிங் டாக் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆன்ட்ராய்டு தளத்திற்கான கூகுள் செயலியில் இடம்பெற்று இருந்த குறியீடு மூலம் இந்த தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் போன் போர்டிரெயிட் வடிவில் டாக் செய்யப்படும் புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளது.

    கூகுள் போன்களில் வழக்கமாக டூயல்-டோன் கருப்பு வெள்ளை நிறங்களுக்கு மாற்றாக இம்முறை புதிதாக மின்ட் நிறம் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பிக்சல் 2 XL மாடலில் இருந்த ஆரஞ்சு நிற பவர் பட்டன் இம்முறை மின்ட் நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டுகளிலும் மின்ட் நிறம் கொண்ட பிக்சல் 3 புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகியிருந்தன.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிக்சல் 3 மாடலில் நாட்ச் இல்லாமல் 5.5 இன்ச் 2160x1080 பிக்சல் 18:9 டிஸ்ப்ளே, டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

    பிக்சல் 3XL மாடலில் 6.2 இன்ச் 1440x2960 பிக்சல் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச், டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் யு.எஸ்.பி. டைப்-சி ஹெட்போன்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் இன்னும் சில வாரங்களில் அறிமுகமாக இருக்கும் நிலையில், பிக்சல் 3 மாடல்கள் புதிய நிறங்களில் உருவாக்கப்படுவது தெரியவந்துள்ளது. #Pixel3 #smartphone



    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 9-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய கூகுள் ப்ரோமோ பக்கத்தில் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனக்ளின் நிறம் தெரியவந்துள்ளது.

    புதிய டீசர் withgoogle.com என்ற இணைய முகவரி கொண்ட கூகுள் வலைத்தளத்தில் மிகவிரைவில் (coming soon) என்ற வார்த்தையுடன் இடம்பெற்று இருந்தது. வழக்கமான டூயல்-டோன் கருப்பு வெள்ளை நிறங்கள் தவிர இம்முறை புதிதாக மின்ட் நிறம் இடம்பெற்றிருக்கிறது.

    கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பிக்சல் 2 XL மாடலில் இருந்த ஆரஞ்சு நிற பவர் பட்டன் இம்முறை மின்ட் நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டுகளிலும் மின்ட் நிறம் கொண்ட பிக்சல் 3 புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகியிருந்தன. டீசரில் உள்ள புகைப்படத்தின் படி பிக்சல் 3 மாடல்களிலும் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.



    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிக்சல் 3 மாடலில் நாட்ச் இல்லாமல் 5.5 இன்ச் 2160x1080 பிக்சல் 18:9 டிஸ்ப்ளே, டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

    பிக்சல் 3XL மாடலில் 6.2 இன்ச் 1440x2960 பிக்சல் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச், டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் யு.எஸ்.பி. டைப்-சி ஹெட்போன்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த மாதம் தெரியவரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் கூகுள் தனது ஹார்டுவேர் நிகழ்வினை யூடியூப் சேனலில் நேரலை செய்யும்.
    கூகுள் பிக்சல் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்பட இருக்கும் நிலையில் இதன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
    வாஷிங்டன்:

    கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. இதுவரை பிக்சல் ஸ்மாரட்போனின் வடிவமைப்பு மற்றும் இதர விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியான நிலையில், XDA தளத்தில் லைவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி கூகுள் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா சென்சார், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது.






    புகைப்படங்கள்: நன்றி XDA

    கிளாஸ் பேக் கொண்ட பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூகுள் நிறுவனம் சிங்கிள் கேமராவையே வழங்குகிறது.

    வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் முந்தைய பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களை போன்றே வழங்கப்பட்டிருக்கிறது. இதன் கைரேகை சென்சார் பின்புறமும், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 6-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் ரக வடிவமைப்பு கொண்டிருக்கிறது. அனைத்து புகைப்படங்களும் வெளியாகி இருக்கும் நிலையில், சிறிய பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் சார்ந்த தகவல்கள் இதுவரை வெளியாகாமல் உள்ளது.
    ×