என் மலர்

  தொழில்நுட்பம்

  அந்த விஷயத்திற்கு பிக்சல் 3-யை விட பிக்சல் 3ஏ தான் சிறந்தது
  X

  அந்த விஷயத்திற்கு பிக்சல் 3-யை விட பிக்சல் 3ஏ தான் சிறந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் தான் அதற்கு சரியானதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை கூகுளின் விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன. 

  புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன்களில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிய காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் (iFixit) தெரிவித்துள்ளனர். iFixit விமர்சகர்கள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL மாடல்களுக்கு சரி செய்யக்கூடிய வசதிகள் நிறைந்த விஷயத்திற்கு 6/10 புள்ளிகளை வழங்கியிருக்கின்றனர்.   2019 விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் உபகரணங்கள் அதிநவீனமாக இருப்பதால், இவற்றை எளிதில் சரி செய்திட முடியும் என தெரிவித்திருக்கின்றனர். புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே மட்டுமே கடினமாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

  மேலும் சோதனையின் போது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான வைப்ரேட்டர் மோட்டார் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் பேட்டரியை மாற்றுவது எளிமையான காரியமாகவே இருக்கிறது.

  பிளாஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கும் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.39,999 மற்றும் ரூ.44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×