என் மலர்
சினிமா

காஞ்சனா 3 - தணிக்கை சான்றிதழ் வெளியீடு
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.
அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#Kanchana3CensoredUA@offl_Lawrence@Vedhika4u@OviyaaSweetz@nikkitamboli@sooriofficial#KovaiSarala@ActorSriman@Kabirduhansingh@AntonyLRuben@vetrivisuals@doopaadoopic.twitter.com/mW7iFgFN59
— Sun Pictures (@sunpictures) April 8, 2019
படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa
Next Story






