search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன பிக்சல் 3ஏ சீரிஸ் விவரங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன பிக்சல் 3ஏ சீரிஸ் விவரங்கள்

    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் அந்நிறுவன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #Google



    கூகுள் ஸ்டோர் வலைதளத்தில் அந்நிறுவனம் பதிவிட்டிருக்கும் டீசரில் மே 7 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதே நாளில் அந்நிறுவனத்தின் I/O 2019 நிகழ்வும் துவங்குகிறது.

    கடந்த சில வாரங்களாக கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி பிக்சல் 3ஏ, பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போன்களை இந்நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் சமீபத்தில் கூகுள் வலைதளத்திலேயே லீக் ஆனது. புதிய ஸ்மார்ட்போன்கள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL மாடல்களின் குறைந்த விலை சாதனங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புதிய ஸ்மார்ட்போன்களில் ஒரே மாதிரியான கேமரா அம்சங்கள் மற்றும் செயல்திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.



    இவைதவிர ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ரெசல்யூஷன், மிட்-ரேன்ஜ் பிராசஸர் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படலாம் என தெரிகிறது. இவற்றுடன் ஸ்டோர் பக்கத்தில் அவெஞ்சர்ஸ் என்ட் கேம் திரைப்படத்தை சுட்டிக்காட்டும் “help is on the way” எனும் வாசகம் இடம்பெற்றிருக்கிறது. 

    இதனால் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்யேகமாக வார் மெஷின், தார், பிளாக் விடோ, ராகெட், கேப்டன் மார்வெல் உள்ளிட்டவற்றின் ஏ.ஆர். எமோஜி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் பிக்சல் போன்களில் ஐயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், நெபுளா, ஒகேய் உள்ளிட்டவற்றின் எமோஜிக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    சமீபத்தில் வெளியான தகவல்களில் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதன்படி பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் 1080x2160 பிக்சல், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ரா்யடு 9 பை இயங்குதளம் வழங்கப்படலாம். பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது. 
    Next Story
    ×