என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
32 எம்.பி. கேமராவுடன் அறிமுகமாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்16 April 2019 6:19 AM GMT (Updated: 16 April 2019 6:19 AM GMT)
சியோமி நிறுவனத்தின் 32 எம்.பி. கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Xiaomi
சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய ரெட்மி வை3 ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
அறிமுக தேதியுடன் ஸ்மார்ட்போனின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் டாட் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்னதாக சியோமி அறிமுகம் செய்த ரெட்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதே போன்ற டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்தது.
Y should selfies be less detailed? Y can’t we change the way we look at them?
— Redmi India (@RedmiIndia) April 15, 2019
Y wait? The #32MPSuperSelfie is coming your way soon. Revealing on 24-04-2019.
RT and guess what’s coming with #32MPSuperSelfie. pic.twitter.com/KbZqMg8vuV
இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்படுகிறது.
இதுதவிர புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் P2i நானோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், இரண்டு நாட்கள் பேக்கப் வழங்கும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.
Next Story
×