search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்கவுண்டர்"

    • தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்.
    • பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி.

    ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில்  தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.

    இந்த என்கவுண்டரில் இர்ஷாத் அகமது பட் என்ற பயங்கரவாதியை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர், ஏகே ரக துப்பாக்கி மற்றும் குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இர்ஷாத் அகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் இன்று தேடுதல் வேட்டையின்போது ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். போலீஸ் துணை சூப்பிரண்ட் ஒருவரும் வீரமரணம் அடைந்தார். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
    ஜம்மு:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட டுரிகாம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு  பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் என்பவரும் வீரமரணம் அடைந்தார். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
    உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் என்கவுண்டர் செய்வதற்கு முன், பத்திரிகையாளர்களை வர வழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். #AligarhEncounter
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாக முஸ்டாக்கிம் மற்றும் நவ்சாத் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர். 

    இந்த நிலையில், நேற்று இவர்கள் 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை விரட்டி சென்ற போது அலிகாரில் உள்ள பழைய கட்டிடத்தில் மறைந்து கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். 

    இதனையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் மறைந்து இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகளை என்கவுண்டர் செய்தனர்.

    முன்னதாக சம்பவ இடத்திற்கு பத்திரிகையாளர்களை வரவழைத்து துப்பாக்கிச்சண்டையை படம் பிடித்து கொள்ளவும் அனுமதி வழங்கினர்.

    யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பு ஏற்தில் இருந்து மாநிலத்தில் உள்ள 60க்கு மேற்பட்ட ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இன்று காலை 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Kashmir #Anantnag
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை வெடித்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் அருகே இன்று பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kashmir #Batamaloo
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள பாடாமாலோ என்ற பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு ஆபரேஷனை பாதுகாப்பு படையினர் இன்று தொடங்கியுள்ளனர். சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக அம்மாநில போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார்.

    மேலும், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாராமுல்லா மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Kulgam
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றும் முகம்மது சலீம் என்பவர், விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று, அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர், அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    இந்நிலையில், குல்காம் பகுதியில் காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படைகளின் வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இன்னும் அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னையில் காவலரை வெட்டிய ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது வீட்டுக்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏ ரவி, ஆனந்தன் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் ரோந்து பணிக்குச் சென்ற காவலர் ராஜவேலுவை தாக்கிய ஆனந்தன் என்ற ரவுடி கடந்த 3ஆம் தேதி அடையாறு அருகே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த என்கவுண்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.


    அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி

    இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரவுடி ஆனந்தன் இல்லத்தில் இறுதி காரிய நிகழ்ச்சி நடந்தது. அதில், விருகம்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி கலந்து கொண்டு ஆனந்த் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன், ஆனந்தனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
    ×