search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் பலி"

    • கடந்த 24-ந் தேதி இனாமுல் ஹசன் வேலை நிமித்தமாக பீளமேடு சென்றார்.
    • 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்தவர் இனாமுல் ஹசன்(27). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இனாமுல் ஹசன் வேலை நிமித்தமாக பீளமேடு சென்றார்.

    காளப்பட்டி ரோட்டில் கட்டிட பணி நடைபெறும் பகுதியில் கட்டிட உரிமையாளர் அருண் என்பவரிடம் மார்க்கெட்டிங் சம்பந்தமாக பேசி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிட பணியின் போது கல் ஒன்று அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இனாமுல் ஹசன் மயங்கி சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக இனாமுல் ஹசனின் தந்தை ஷாகீல் ஹமீத் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விதியை பின்பற்றாமல் கட்டிட பணியை மேற்கொண்ட கட்டிட ஒப்பந்ததாரர் ரஞ்சித் மற்றும் கட்டிட உரிமையாளர் அருண் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேளி சென்ற ரெயில் மணி மீது மோதியது.
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் வாகையடி குலாலர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 55). ரெயில்வேயில் ட்ராக் மேனாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை வீட்டிலிருந்து மணி வேலைக்கு சென்றார். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து டவுன் ரெயில் நிலையம் நோக்கி அவர் பணியில் ஈடுபட்டார். ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேளி சென்ற ரெயில் மணி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக இருந்தார்.

    இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மணி இறந்தது பற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினரும் அங்கு வந்தனர். மணியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மணிக்கு மதி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.

    • டீ குடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார்.
    • தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள விருத்தாசலம் சாலை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர். இவர் இன்று அதிகாலை டீகுடிப்பதற்கு அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக ந்த சுற்றுலா பஸ் பெரியசாமி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்தார்.விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வீராசாமி ( வயது 23). இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள தனியார் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
    • தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டி ருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் வீராசாமி ( வயது 23). இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள தனியார் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு, பரமத்தி வேலூரில் இருந்து சேந்தமங்கலத்திற்கு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டி ருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதினார்.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வீராசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீராசாமி உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டிவனம் அருகே வாகன விபத்தில் தனியார் வங்கி ஊழியர் பலியானார்.
    • குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே சாரம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (வயது35). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை சாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் மூலமாக தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பலமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டீபன் ராஜ் சம்பவ இடத்தில் பலியானார் .

    இது குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் அங்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள்.

    • ஷேர் ஆட்டோ டிரைவர் சீட்டில் பயணித்த நூலக ஊழியர் பலியானார்.
    • விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சி பட்டியை அடுத்துள்ள வாடி கருப்பு கோவில்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 32). இவர் உசிலம்பட்டியில் உள்ள நூலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். தினமும் அரசு பஸ் மற்றும் ஷேர்ஆட்டோக்களில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று மாலை வேலைமுடிந்து தங்கபாண்டி ஊருக்கு புறப்பட்டார். இதற்காக உசிலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த வாசிநாதன் என்ப வர் ஓட்டி வந்த ஷேர் ஆட்டோ அங்கு வந்தது. அளவுக்கு மீறி அதில் பயணிகள் பயணித்தனர். இருப்பினும் இதனை பொருட்படுத்தாமல் தங்கபாண்டி டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு பயணித்தார்.

    உசிலம்பட்டி ரோடு, மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது ஷேர் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. அப்போது டிரைவர் சீட்டில் பயணித்த தங்கபாண்டி தவறி ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சுமன் பெண் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டார்.
    • பிரேத பரிசோதனைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுமன் (வயது 38) இவர் புதுவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் சுமன் ஆலப்பாக்கத்தில் இருந்து புதுவையில் உள்ள தனியார் கம்பெனிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ஆலப்பா க்கம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது சாலையின் குறுக்கே ஒரு பெண் கடந்து சென்றார். அப்போது சுமன் பெண் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டார். அப்போது எதிர்பாராதமாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் வேகமாக இவரின் மீது மோதியது.

    இந்த விபத்தில் சுமன் சம்பவ இடத்திலே பரிதாப மாக உயிரிழந்தார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து மரக்காணம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறுமுகம் (20). இவர் வசந்தபுரம் ஒத்தக்கடை அருகே மேட்டூரில் உள்ள ஆருத்ரா பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
    • ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிராந்தகம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆறுமுகம் (20). இவர் வசந்தபுரம் ஒத்தக்கடை அருகே மேட்டூரில் உள்ள ஆருத்ரா பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில், சம்ப வத்தன்று இருட்டனையில் இருந்து காட்டூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி, ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆறுமுகம் நிலை தடுமாறி மோட்டார் பைக்குடன் சாலையில் விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஆறுமுகத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனி யார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆறுமுகத்தின் தந்தை முருகேசன் நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சித்தோடு அருகே உள்ள கருப்புராயன் கோவில் அருகில் இருந்த சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    பவானி:

    ஈரோடு சம்பத் நகர் அருணாச்சலம் வீதி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (35). இவர் வேளாண்மைத்துறையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் காரில் நசியனூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    அப்பொழுது திடீரென கார் சித்தோடு அருகே உள்ள கருப்புராயன் கோவில் அருகில் இருந்த சுமார் 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கார் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் இடிப்பாடிகளில் சிக்கி இறந்த ஜெயக்குமார் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாலாஜாபாத்தில் உள்ள மதுக்கடை அருகே உள்ள மின் கம்பம் மீது லாரி மோதியதில் சேதம் அடைந்தது.
    • பலியான மோகன்ராஜீக்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 46). இவர் வாலாஜாபாத்தில் துணை மின்நிலையத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வாலாஜாபாத்தில் உள்ள மதுக்கடை அருகே உள்ள மின் கம்பம் மீது லாரி மோதியதில் சேதம் அடைந்தது. அதில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் மோகன்ராஜ் ஈடுபட்டார்.

    அவர் மின் கம்பத்தில் ஏறி பணி செய்து கொண்டு இருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் மின் கம்பியில் தொங்கிய நிலையில் மோகன்ராஜ் பலியானார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் பலியான மோகன்ராஜின் உடலை மின் கம்பத்தில் ஏறி மீட்டனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பலியான மோகன்ராஜீக்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    பணியின்போது மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.
    • சென்னை கூரியர் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    மணவாளக்குறிச்சி:

    சென்னை மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48).இவர் சென்னையில் ஒரு கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் குடும்பத்துடன் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.நேற்று அவர் குடும்பத்துடன் கடியபட்டணம் வள்ளியாற்றில் குளிப்பதற்கு சென்றார். மனைவி மற்றும் 2 பிள்ளைகளும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது குளித்து கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் மூச்சு திணறி நீரில் மூழ்கினார்.உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்க்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார். இது குறித்து அவரது மனைவி அனந்த செல்வி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×