search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை"

    • உடுமலை அடுத்த போடிபட்டியில் மாநிலம் தழுவிய தொடர் கபடி போட்டி நடைபெற்றது.
    • நேற்று முன்தினம் தொடங்கிய போட்டி நேற்று இரவு வரையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த போடிபட்டியில் மாநிலம் தழுவிய தொடர் கபடி போட்டி நடைபெற்றது. போட்டிகளை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொடக்கி வைத்தனர்.நேற்று முன்தினம் தொடங்கிய போட்டி நேற்று இரவு வரையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது.போட்டியில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் வருகை தந்திருந்தனர். மழை வருவது போல் இருந்ததால் கொட்டகை அமைக்கப்பட்டு செயற்கை ஆடுகளத்தில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வீரர்கள் ஆக்ரோசத்துடன் சீறிப்பாய்ந்து சென்று எதிர் அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர். பார்வையாளர்கள் விசில் அடித்தும் கைதட்டியும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் பரிசாக ரூ. 20ஆயிரம் 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம் , 3-ம் பரிசாக 10 ஆயிரம், 4-ம் பரிசாக 7ஆயிரமும் வழங்கப்பட்டது. அத்துடன் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.போட்டிக்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து இருந்தனர். உடுமலை சுற்று ப்புற பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் கபடி போட்டி நடைபெற்ற வருவதால் விளையாட்டுக்கள் மீதான ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    • பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் விடுதி கட்டப்பட்டு உள்ளது.
    • வளாகம் முழுவதும் பாலித்தீன் செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரி அருகே கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி கட்டப்பட்டு உள்ளது.அதில் தங்கி இருந்து ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    ஆனால் அந்தக் கட்டிடம் மற்றும் அதன் வளாகம் முறையாக பராமரிப்பு செய்வதில்லை.இதனால் வளாகத்தை சுற்றி செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதுடன் கட்டிடத்திலும் அரசமரம், ஆலமரம் முளைத்து அதன் கட்டுமா னத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் விடுதி கட்டப்பட்டு உள்ளது.அதன் மூலமாக மாணவர்கள் பயன் அடைந்தும் வருகின்றனர். ஆனால் கட்டிடமும் வளாகமும் முறையாக பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் வளாகம் முழுவதும் பாலித்தீன் செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளது.இதன் காரணமாக அங்கு தங்கி உள்ள மாணவர்களுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படும் சூழல் உள்ளது. அத்துடன் கட்டிடத்தின் மேல் பகுதியில் அரசமரம் ஆலமரம் உள்ளிட்டவை முளைத்து அதன் கட்டுமானத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.

    இதனால் நாளடைவில் கட்டிடம் பழுதடையும் சூழலும் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி கட்டிடத்தையும் அதன் வளாகத்தையும் முறையாக பராமரிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கோடை காலத்தில் கம்பங்கூழ் உட்பட கம்பு சார்ந்த உணவுப்பொருட்களுக்கு கிராக்கி அதிகரித்து நல்ல விலை கிடைக்கும்.
    • கம்பு குறைந்த நீர் மற்றும் மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரும்.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் பரவலாக சிறுதானிய சாகுபடி இறவை பாசனத்துக்கு மாசி மற்றும் சித்திரை பட்டத்தில், சாகுபடி செய்யப்படுகிறது.கோடை காலத்தில் கம்பங்கூழ் உட்பட கம்பு சார்ந்த உணவுப்பொருட்களுக்கு கிராக்கி அதிகரித்து நல்ல விலை கிடைக்கும். அதை அடிப்படையாக கொண்டு உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கம்பு பரவலாக சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராகி வருகிறது.

    இது குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:- கிணற்றுப்பாசன சாகுபடியில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் வீரிய ஒட்டு ரக விதைகளே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கம்பு குறைந்த நீர் மற்றும் மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரும். மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப்பொருள்களை பெற்றுள்ளது.கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தலாம். எனவே இடைபட்டத்திலும் இச்சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர் என்றனர்.   

    • தேர்த்திருவிழாவுக்கு மார்ச் 28-ந் தேதி நோன்பு சாட்டப்பட்டது.
    • அம்பாள் ரிஷப வாகனத்தில், புஷ்ப அலங்காரத்துடன் வலம் வந்தார்.

    உடுமலை :

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவி ழாவுக்கு மார்ச் 28-ந்தேதி நோன்பு சாட்டப்பட்டது. கடந்த 4ந்தேதி, கோவில் வளாகத்தில் திருக்கம்பம் நடப்பட்டது.நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.அதன்படி நேற்று முன் தினம் அம்பாள் ரிஷப வாகனத்தில், புஷ்ப அலங்காரத்துடன் வலம் வந்தார். இன்றுடன் பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. வருகிற 12-ந்தேதி மாவிளக்கு எடுத்த லும் மாலை 3மணிக்கு அம்மன் திருக்க ல்யாணம் நடைபெ றுகிறது.உடுமலை நகர வீதிகள் அனைத்தும் விழாக்கோலத்தில், காட்சியளிக்கிறது. மக்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சி களில் பங்கேற்று வருகின்ற னர். 

    • ரேணுகாதேவி அம்மனுக்கு நிர்வாகிகள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
    • வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக நடனமாடிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்கா கவர நாயுடு சமூக நலச் சங்கம் சார்பில் 10-ம் ஆண்டு யுகாதி பெரு விழா பொள்ளாச்சி சாலையில் உள்ள லயன்ஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .முதலில் அலங்கரிக்கப்பட்ட ரேணுகாதேவி அம்மனுக்கு நிர்வாகிகள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. குறிப்பாக மண் பானையில் மீது சிறுமிகள் நடனம், பாம்பு நடனம், மயில் நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பல்வேறு விதமான போட்டிகள்நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக நடனமாடிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    நீலகிரி மாவட்ட நாயுடு மகா சங்கம், லஜபதி நாயுடு, கோவை டீம் 3 அசோசிேயட்ஸ் சம்பத்குமார் , கவர நாயுடு மகாஜன கூட்டமைப்பு தலைவர் திருப்பதி, கல்வி அறக்கட்டளை கவர நாயுடு மகாஜன சங்கம் தலைவர் ஆனந்தகுமாரி, ஆனந்த பத்மநாபன், கவர சமூக நல அறக்கட்டளை சிவக்குமார், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்கா கவர நாயுடு சங்க தலைவர் அரிமா லோகநாதன்,செயலாளர் அரிமா ராமதுரை, பொருளாளர் ஜெக நாதன் ,துணை செய லாளர் சிவக்குமார் ,தலைமையிடத்து செயலாளர் முருகே சன், ஆலோசகர் சுப்பு ராமன், துணைத் தலை வர்கள் துரைசாமி, வெங்கட்ராமானுஜம், சட்ட ஆலோசர்கள் ஜோதி நாகராஜன் , சீனி வாசன் , சரவணகுமார், கொழுமம் தாமோதரன், குறிச்சிக்கோட்டை கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொ ண்டனர்.

    • உடுமலை ரெயில் நிலையம் வழியாக கோவை, திருச்செந்தூர், திருவனந்தபுரம், சென்னை ஆகிய ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • கோடை காலத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை :

    திண்டுக்கல் - பாலக்காடு வழித்தடம் அகல ெரயில்பாதையாக மாற்றப்பட்டு 2015ல் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் மின்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படு த்தப்பட்டது.தற்போது உடுமலை ரெயில் நிலையம் வழியாக கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்தூர், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாதத்துடன், பள்ளிதேர்வுகள் முடிவடைய உள்ளன. கோடை விடுமுறை துவங்கி யவுடன் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில்களை அதிக அளவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது செல்லும் ெரெயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

    எனவே கோடை காலத்தில் தென்மாவட்டங்க ளுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • பெண்களுக்கான மருத்துவ வசதி, உளவியல் ஆலோசனை, சட்ட உதவிகள் வழங்குவதற்கு ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படுகிறது.
    • கிளை மையம் துவங்குவதற்கு உடுமலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை :

    பெண்கள் மற்றும் முதியவர்களுக்கான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவ வசதி, உளவியல் ஆலோசனை, சட்ட உதவிகள் வழங்குவதற்கு 'ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படுகிறது.

    மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கிளை மையம் துவங்குவதற்கு உடுமலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மையம் அமைப்பதற்கு தகுதியான இடங்கள் ஆய்வு செய்யப்படுவதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பழனி - ஆனைமலை பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
    • குடிநீர் குழாய் உடைப்பின் காரணமாக சாலை சேதம் அடைந்து வருகிறது.

    உடுமலை :

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா வண்டி வாய்க்கால் பிரிவில் இருந்து நெய்க்காரப்பட்டி, கொழுமம், கொமரலிங்கம், குறிச்சிக்கோட்டை, தளி, எரிசனம்பட்டி, நா.மு.சுங்கம் வழியாக ஆனைமலைக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக ஆனைமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் ஆழியாறு, திருமூர்த்திமலை, அமராவதி, மூணாறுக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலா பயணிகளும் சென்று வருகின்றனர். அத்துடன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இடுபொருட்கள் மற்றும் விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகளும் பழனி- ஆனைமலை பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலையில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது. இந்த சூழலில் குறிச்சிக்கோட்டை குளத்துபுதூருக்கு இடைப்பட்ட பகுதியில் குருவப்ப நாயக்கனூர் பிரிவுக்கு அருகே ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பின் காரணமாக சாலை சேதம் அடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில்:-

    சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொது மக்களுக்கு பழனி-ஆனைமலை சாலை வரப்பிரசாதமாகும். இதன் மூலமாக பல்வேறு தேவைகளை தொய்வின்றி பூர்த்தி செய்து வருகின்றோம். ஆனால் குருப்பநாயக்கனூர் பிரிவிற்கு மேற்குபுறம் உள்ள வளைவிலும் மற்றும் கிழக்கு புறமாகவும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏராளமான குடிநீர் வீணாகி வருவதுடன் சாலையும் படிப்படியாக சேதம் அடைந்து பகுதி அளவுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் உடைப்பின் வழியாக அங்கு தேங்கி உள்ள கழிவுநீர் குடிநீருடன் கலந்து சென்று பொது மக்களுக்கு தொற்று நோய்களையும் ஏற்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தும் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஓராண்டாக குழாய் உடைப்பையும் சேதமடைந்த சாலையையும் சீரமைக்கக் கோரி போராடி வருகிறோம். மேலும் தண்ணீர் வீணாவதால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இந்த வழியாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் சென்று வருகின்றனர்.ஆனால் அந்த உடைப்பை சீரமைத்து பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே பழனி - ஆனைமலை பிரதான சாலையில் குறிச்சிக்கோட்டை - குளத்துப்புதூருக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட குடிநீர் குழாயை உடைப்பை சீரமைத்து சேதமடைந்த சாலையையும் புதுப்பித்து தருவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்துபேரணியைதுவக்கிவைத்தார். உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் உடுமலை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கம் ,உடுமலை இருசக்கரம் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் சங்கம் ,உடுமலை புதிய இருசக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணி உடுமலை தளி ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட சென்று பைபாஸ் ரோடு, ராஜேந்திரா சாலை, ராமசாமி நகர் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலும் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
    • வெறும் அறிக்கை அளவிலேயே சுற்றுலாவுக்கான திட்டங்கள் உள்ளன.

    உடுமலை :

    மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்திமலை மற்றும் அமராவதி அணை உடுமலை பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்த இரு முக்கிய சுற்றுலா தலங்களிலும் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் வெறும் அறிக்கை அளவிலேயே சுற்றுலாவுக்கான திட்டங்கள் உள்ளன. இருப்பினும் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் ஆண்டு முழுவதும் சீராக விழும் தண்ணீரில் குளிக்கவும், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அணைகளின் அழகை ரசிக்கவும் முதலை பண்ணையை பார்வையிடவும் மக்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தவும், மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதி, அணைகள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படவும், கோடை விடுமுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.அரசு நடத்தும் கோடை விழா வாயிலாக மாநிலத்தின் பல்வேறு பகுதி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதுடன் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். வருவாயில் இரு பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ளலாம்.குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதி உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.

    இதனால் கேரள மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை திருமூர்த்திமலைக்கு எளிதாக ஈர்க்க முடியும்.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதும் டாலர் சிட்டியில் உழைக்கும் மக்களுக்காக கிரீன் சிட்டி சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில் சில ஆண்டுகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா நடத்தப்பட்டது. விழாவுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அவ்விழாவும் தற்போது நடத்தப்படுவதில்லை. இந்தாண்டு பள்ளி விடுமுறை நாட்களை மையமாக வைத்து கோடை விழா நடத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.இவ்விழாவை நடத்தியாவது திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா துறை செயல்பட்டு வருகிறது என மக்களுக்கு தெரியப்படுத்தலாம்.

    அமராவதி அணை அருகே வனத்துறை சார்பில் முதலை பண்ணை பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த முதலை பண்ணையில் முதலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முதலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரவழைக்கப்பட்டு, முதலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த விழாவுக்கு வரவேற்பும் கிடைத்தது. எனவே இந்த விழாவை மீண்டும் நடத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

    • ஜீவா நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
    • வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் தனி தீவாக மாறி உள்ளது. உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகர் ,ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதியான இந்த குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

    சரியான வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் குப்பைக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் வர முடியாத நிலை உள்ளதோடு பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் நான்கு நாட்களாக வடியாமல் உள்ளதால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    எனவே தேங்கியுள்ள நீரை அகற்றவும் உரிய மழை நீர் வடிகால் வசதிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி துங்காவி முழுவதும் அனைத்து வீதிகளிலும் நடத்தப்பட்டது.
    • தூண்டுப் பிரசுரமும் யோகா விழிப்புணர்வு பற்றிய கோஷங்களும் எழுப்பப்பட்டு பேரணி நடத்தப்பட்டது.

    உடுமலை :

    யோகா விழிப்புணர்வு பேரணியை முன்னாள் எம். எல். ஏ., இரா. ஜெய ராமகிருஷ்ணன் துவங்கி வைத்தார் . துங்காவிஅரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய யோகா விழிப்புணர்வு பேரணியில் உடுமலை அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை யோகா ஆசிரியர்கள் மற்றும் ஸ்ரீஜீவிஜி விசாலாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள், மற்றும் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் முனைவர் பா. சிரஞ்சீவி நாட்டு நலப் பணித்திட்ட துணை அலுவலர் ம. மாலினி கலந்துஆகியோர் கொண்ட னர். இப்பேரணியானது உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி துங்காவி முழுவதும் அனைத்து வீதிகளிலும் நடத்தப்பட்டது. பேரணியின் போது பொதுமக்களுக்கு யோகா விழிப்புணர்வு பற்றிய தூண்டுப் பிரசுரமும் யோகா விழிப்புணர்வு பற்றிய கோஷங்களும் எழுப்பப்பட்டு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    மேலும் ஸ்ரீ ஜீவிஜி விசாலாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியின் கடந்த ஆண்டு நாட்டு நலப்பணிதிட்ட தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு களை எடுத்தும் தண்ணீர் ஊற்றியும் தூய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி கல்லூரி மாணவிகள் துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் பொது அறிவு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×