search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈவிகேஎஸ் இளங்கோவன்"

    • கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தற்போது சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இன்னும் ஓரிரு நாட்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவருக்கு தற்போது சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனா தொற்றில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.
    • உடல் நலம் தேறி வருவதால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.

    சென்னை:

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது.

    இதனால் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று பிற்பகலில் திடீரென்று லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். இதை தொடர்ந்து இரவில் உடல் நிலை சீரானது.

    இப்போது அவருக்கு உடல் நிலை தேறி விட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கொரோனா தொற்றில் இருந்தும் மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதையடுத்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நாசே ராமச்சந்திரன், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.சிவராமன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் நல்ல நிலையில் பேசிக் கொண்டிருந்தார். வெளியே வந்ததும் அவர்கள் கூறியதாவது:-

    இளங்கோவன் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தார். அவரது உடல் நலம் தொடர்பாக நேரிலும், தொலைபேசி மூலமும், விசாரித்த காங்கிரஸ் தோழர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

    அவர் பூரண நலத்துடன் அவருக்கே உரிய பாணியில் விரைவில் எல்லோரையும் சந்திப்பார் என்றனர்.

    • ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இளங்கோவனின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இளங்கோவனின் உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
    • சட்டசபையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு 177-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    இந்த நிலையில் சட்டசபையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு 177-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2-வது வரிசையில் சிந்தனை செல்வனுக்கு பின்புறம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

    • வயதில் என்னை விட சிறியவராக இருந்தாலும் என்னைவிட தியாகத்திலும், உழைப்பிலும் பெரியவர்.
    • மக்களிடம் இருந்து தி.மு.க.வை பிரிக்க முடியாது என்பதால் டெல்லி சர்க்கார் இடையூறு செய்ய நினைக்கிறது.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. ஆனதும் முதல் கூட்டத்தில் பேசியதாவது:

    இன்று முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலினை குழந்தை பருவத்தில் இருந்தே அறிவேன். அவரை பார்க்கும் போது பிரமாண்டமாக தெரிகிறார். வயதில் என்னை விட சிறியவராக இருந்தாலும் என்னைவிட தியாகத்திலும், உழைப்பிலும் பெரியவர்.

    தமிழ் மக்களுக்காக உழைக்கும் உத்தம தலைவர். மக்களிடம் இருந்து தி.மு.க.வை பிரிக்க முடியாது என்பதால் டெல்லி சர்க்கார் இடையூறு செய்ய நினைக்கிறது.

    மக்களை ஏமாற்றுவதற்காக இரண்டு பேரை அனுப்பி இருக்கிறார்கள். ஒருவர் கவர்னர் ரவி. இன்னொரு வர் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை. அவர்களுக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள்.

    • அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தற்போது சீராக உள்ளது. மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று மாலை சென்னை திரும்பினார். ஏற்கனவே இதய நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதால் அவ்வப்போது மூச்சுவிடுவதில் அவருக்கு சிரமம் ஏற்படுவது வழக்கம்.
    • ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி ஈரோடு கிழக்கு தொகுதியிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த 10-ந் தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார்.

    எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை டெல்லியில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    டெல்லியில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு, விமானம் மூலம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று மாலை சென்னை திரும்பினார். ஏற்கனவே இதய நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதால் அவ்வப்போது மூச்சுவிடுவதில் அவருக்கு சிரமம் ஏற்படுவது வழக்கம். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால் கடுமையான உடல் சோர்வுடன் காணப்பட்டு வந்தார்.

    இதற்கிடையே டெல்லிக்கு சென்று திரும்பிய பயண களைப்பும் அவரை வாட்டி வதைத்தது. இந்தநிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய சில மணி நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மூச்சு விடுவதிலும் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. அவரது மனைவி வரலட்சுமி உடன் இருந்து கவனித்து வருகிறார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி ஈரோடு கிழக்கு தொகுதியிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளங்கோவன் பதவி ஏற்பு விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வை தவிர எந்த எம்.எல்.ஏ.வும் கலந்து கொள்ளவில்லை.
    • ஒருவேளை மீண்டும் பதவி ஏற்கும் சந்தர்ப்பம் வந்தால் முதன்மையாக அந்த அம்மையாரை தனியாக சென்று கூப்பிடுவேன்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்பு விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வை தவிர எந்த எம்.எல்.ஏ.வும் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி விஜயதரணி எம்.எல்.ஏ. பரபரப்பான கருத்தை கூறியிருந்தார். இது பற்றி இளங்கோவன் கூறியதாவது:-

    விஜயதரணிக்கு தனியாக அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும். தவறு செய்துவிட்டேன். அவரை நேரில் சந்தித்து வருத்தத்தை தெரிவித்து, ஒருவேளை மீண்டும் பதவி ஏற்கும் சந்தர்ப்பம் வந்தால் முதன்மையாக அந்த அம்மையாரை தனியாக சென்று கூப்பிடுவேன் என்று நக்கலுடன் பதிலளித்தார்.

    • சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டசபை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்றுக்கொண்டார்.
    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டார். இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.

    இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டசபை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.

    சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார்.
    • தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதி்க்கு கடந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டார்.

    இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.

    இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டசபை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்றுக் கொண்டார்.

    அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டனர்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.

    பதவி ஏற்ற பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 20 மாத ஆட்சிக்கு மக்கள் அளித்து உள்ள அங்கீகாரம் ஆகும். கூட்டணி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி எனக்கு வெற்றியை தேடித் தந்து இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பின்படி நடந்து கொள்வேன். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற உழைப்பேன்.

    தற்போது சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை உள்ளார். அவர் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக தொடர்ந்து செயல்படுவார். எனக்கு அந்த பதவிக்கு ஆசை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    தமிழக சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

    இந்நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதற்கான நிகழ்ச்சி இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடைபெற்றது.

    அங்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர முடியாது என்பதால் அவர்கள் பல்வேறு சதிகளை செய்து தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
    • ஈரோட்டில் உள்ள சட்டமன்ற அலுவலகம் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    10-ந்தேதி சென்னையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளேன். எனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது வெற்றிக்கு பாடுபட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஈரோடு கிழக்கு தொகுதி பொதுமக்கள் என்னிடம் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். மேலும் கழிவுநீர் பிரச்சனை, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

    மேலும் கழிவு நீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை வசதி போன்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சதி நடக்கிறது என்று கூறியுள்ளார். அவர் கூறியது உண்மைதான். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர முடியாது என்பதால் அவர்கள் பல்வேறு சதிகளை செய்து தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள். இல்லாத பிரச்சினைகளை புதிய பிரச்சினைகளாக அவர்கள் எழுப்பி தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

    வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்வதால் தொழில் நடத்துபவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. தமிழ்நாட்டில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. எனவே தமிழக மக்கள் பாரதிய ஜனதாவின் சதியை முறியடிப்பார்கள்.

    இதுபோன்ற பொய்யான வதந்திகளை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை. பாதுகாப்பாக உள்ளனர். அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    ஈரோட்டில் மேட்டூர் ரோடு வரை மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுவும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு கனி மார்க்கெட்டில் வியாபாரிகள் புதிய வளாகத்தில் வாடகை அதிகமாக உள்ளதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

    அமைச்சர் முத்துசாமியிடம் இது பற்றி கலந்து பேசி முடிவு செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏராளமான குடியிருப்புகள் பட்டா இல்லாமல் இருப்பதாக கூறினார்கள். எனது வீட்டுக்கு கூட பட்டா இல்லை. எனவே பட்டா இல்லாதவர்களுக்கு விரைவில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோட்டில் உள்ள சட்டமன்ற அலுவலகம் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த பணி நிறைவேற்றப்பட்டதும் எம்.எல்.ஏ அலுவலகம் அங்கு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    ×