search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தற்கொலை"

    • கடந்த ஒரு வாரமாக இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தாக தெரிகிறது.
    • ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொளத்தூர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். கார் மெக்கானிக். இவரது மனைவி ஜோதிலட்சுமி (வயது35). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் கடந்த ஒரு வாரமாக இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஜோதிலட்சுமி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈஸ்வரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
    • தான் இறந்து விட்டால் குழந்தைகள் அநாதையாகி விடுமே என்று கருதிய பாண்டீஸ்வரி, அவர்களையும் கொல்ல திட்டமிட்டார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன், விவசாயி. இவரது மனைவி பாண்டீஸ்வரி(வயது35). இவர்களுக்கு வைத்தீஸ்வரி (16), காளீஸ்வரி(11) என்ற 2 மகள்களும், 1 வயதில் விக்னேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இதில் வைத்தீஸ்வரி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பும், காளீஸ்வரி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஈஸ்வரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் கடும் அவதியடைந்தார். பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதன் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது மனைவி பாண்டீஸ்வரி மற்றும் மகள்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    ஈஸ்வரனின் இழப்பை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவினர்கள் இறுதி சடங்குகளை முடித்து விட்டு சென்றபின் வீட்டில் பாண்டீஸ்வரி தனது மகள்கள் மற்றும் மகனுடன் தனியாக இருந்தார். கணவர் இறந்தபின் வாழ விருப்பமில்லாத அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டதாக தெரிகிறது.

    தான் இறந்து விட்டால் குழந்தைகள் அநாதையாகி விடுமே என்று கருதிய பாண்டீஸ்வரி, அவர்களையும் கொல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று இரவு கோட்டையூரில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு மகள்கள் மற்றும் மகனை அழைத்துச் சென்ற பாண்டீஸ்வரி அங்குள்ள கிணற்றில் முதலில் 2 மகள்களை தள்ளிவிட்டும், பின்னர் மகனை கிணற்றில் போட்டும் கொன்றார். அதன் பின் அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.

    இன்று காலை வீட்டில் பாண்டீஸ்வரி மற்றும் குழந்தைகள் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் அவர்கள் தோட்டத்து வீட்டில் பிணமாக மிதந்தது தெரியவந்தது.

    ஒரே கிணற்றில் 4 பேர் இறந்து கிடப்பது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவர் இறந்த 3 நாளில் தனது 2 மகள்கள், மகனுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கோமளா குளியல் அறைக்கு சென்றார்.
    • கோமளா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மேல் தெரு பி.வி.களத்தூரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் கோமளா என்ற அஸ்வினி (வயது22). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழில்சாலையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர் குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது அங்கு அஸ்வினி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீர்த்தனா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
    • மனமுடைந்த கீர்த்தனா கடந்த 5-ந்தேதி, வீட்டை விட்டு வெளியேறினார்.

    ஆப்பக்கூடல்:

    கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் (28). இவரது மனைவி கீர்த்தனா (24). இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானி, ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி தாளக்குட்டை புதூரில் ஒரு தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர், கீர்த்தனாவின் சகோதரரும் இந்த தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கீர்த்தனா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை அவரது சகோதரன் கண்டித்தார். ஆனால் அதை கேட்காமல் கீர்த்தனா தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார். இதையடுத்து அவரது சகோதரர் சிம் கார்டை பிடுங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த கீர்த்தனா கடந்த 5-ந்தேதி, வீட்டை விட்டு வெளியேறினார், கீர்த்தனாவை காணவில்லை என்று அவரது தாய் ஜெயமாளுக்கு, கணவர் வீரபத்திரன் தகவல் கொடுத்தார். இதையடுத்து மாயமான கீர்த்தனாவை உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கீர்த்தனா பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது கணவர் வீரபத்திரன் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிணமாக கிடப்பது கீர்த்தனாதான் என்று உறுதி செய்தனர்.

    இதையடுத்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிம்கார்டை பிடுங்கியதால் மனம் உடைந்து கீர்த்தனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் எப்படி இறந்தார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே திருமணமான 2 ஆண்டுகளில் கீர்த்தனா இறந்ததால் இதுகுறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்துகிறார்.

    செல்போனில் பேசியதை கண்டித்ததால் வீட்டை விட்டு மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஐஸ்வர்யாவின் தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தங்கை இறந்ததால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது23). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கை இறந்ததில் இருந்து ஐஸ்வர்யா மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    மேலும் அவர் இறந்த துக்கம் தாங்காமல் வேதனைப்பட்டார். சம்பவத்தன்று ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

    • மறுநாள் அதிகாலையில் ரித்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கண்ணனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ரித்திகா (வயது23). இவரும் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பொத்தை சுத்தி, இந்திரா காலனியை சேர்ந்த அஜித்குமாரும் காதலித்து வந்தனர்.

    இவர்களது காதலுக்கு ரித்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரித்திகாவும், அஜித்குமாரும் கடந்த 30.4.2021-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனால் ரித்திகாவின் பெற்றோர்கள் ரித்திகாவுடன் பேசாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் சமாதானம் அடைந்த ரித்திகாவின் தாயார் தமிழரசி கடந்த 2 மாதமாக, ரித்திகாவுடன் பேசி வந்துள்ளார். கடந்த 29-ந்தேதி இரவில் ரித்திகா தனது தாயார் தமிழரசிக்கு போனில் தொடர்பு கொண்டு தனக்கும், தனது கணவர் அஜித்குமாருக்கும் தகராறு என்றும், காலையில் ஊருக்கு புறப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே மறுநாள் அதிகாலையில் ரித்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தமிழரசி களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் மனைவி தீக்குளித்து இறந்ததன் காரணமாக ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
    • இளம்பெண் சாவிற்கு காரணமான அவரது கணவர் முருகேசனை பாலக்கோடு டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்ல முடியை சேர்ந்தவர் முருகேசன் (வயது28) லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு நவநீதா (20), என்ற மனைவியும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

    கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து நவநீதா மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்துக் கொண்டார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நவநீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது தொடர்பாக ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் மனைவி தீக்குளித்து இறந்ததன் காரணமாக ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை, இளம்பெண் சாவிற்கு காரணமான அவரது கணவர் முருகேசனை பாலக்கோடு டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் கைது செய்தனர்

    • மீனாட்சி மயிலாடுதுறையில் உள்ள தனியார் துணிக்க டையில் வேலை செய்து வருகிறார்.
    • ஸ்ரீமதியை பொறுப்பு இல்லாமல் இருக்கிறாயே என சாதாரணமாக மகளை திட்டி உள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி நாகதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஸ்ரீமதி (வயது18), மோனிகா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர். பாலமுருகன் கோயம்புத்தூரில் தங்கி வேலை செய்து வருகிறார். மீனாட்சி மயிலாடுதுறையில் உள்ள தனியார் துணிக்க டையில் வேலை செய்து வருகிறார். மீனாட்சி தனது மகளிடம் சமையல் செய்யச்சொல்லி விட்டு வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஸ்ரீமதி டி.வி. பார்த்துகொண்டே சமையல் செய்ததால், பொறியல் கருகியது.

    இதைத்தொடர்ந்து, ஸ்ரீமதியை பொறுப்பு இல்லாமல் இருக்கிறாயே என சாதாரணமாக மகளை திட்டிவிட்டு, மீனாட்சி வேலைக்கு சென்று விட்டார். வேலைக்கு சென்ற மீனாட்சி வரும் நேரத்தில், ஸ்ரீமதி வீட்டில் புடவையில் தூக்கு போட்டு கொண்டுள்ளார். இதை பார்த்த மீனாட்சி சத்தம் போடவே, அருகில் இருந்த உறவினர்கள் ஓடிச் சென்று ஸ்ரீமதியை தூக்கிலிருந்து இறக்கி, அருகில் இருந்த நிரவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசேதித்த டாக்டர், ஸ்ரீமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மீனாட்சி, நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மது அருந்தி விட்டு வந்த கணேசனுக்கும் அவரது மனைவிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனைவியுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் , பின்னர் மனைவிக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.

    திருப்பூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் மாரப்பூர் மேலபுலவன் காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 30). இவர் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அதே நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்த வசந்தாமணி (23) என்ற பெண்ணை கணேசன் காதலித்து வந்தார்.

    2 பேரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு 15 வேலம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் கணேசன் தினமும் குடித்து விட்டு வந்து வசந்தாமணியை அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

    நேற்று இரவும் மது அருந்தி விட்டு வந்த கணேசனுக்கும் அவரது மனைவிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மனைவியுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் , பின்னர் மனைவிக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு வசந்தாமணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வசந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுபாஷினி குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
    • கண்இமைக்கும் நேரத்தில் சுபாஷினி உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள வையாபுரி நகரை சேர்ந்தவர் வைகுந்தன்.

    இவரது மனைவி சுபாஷினி (வயது 28). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. மேலும் வைகுந்தன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து சுபாஷினியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதன் காரணமாக மனவேதனை அடைந்த அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். சுபாஷினியை அவரது உறவினர்கள் காப்பாற்றினர்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.

    கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சுபாஷினியை மீட்டனர்.

    பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுபாஷினி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது.
    • தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அந்தக் குட்டை பகுதியில் ஒரு பெண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார். தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார். அது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், தீக்குளித்த அந்த பெண், பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி கலா(47) என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டுக்கு கட்டட வேலை செய்ய வந்த பெரும்பாலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(46) என்ற தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சிறிது காலம் பேசிப் பழகிய பாலசுப்பிரமணியன் கடந்த சில மாதங்களாக கலாவுடன் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் வசிக்கும் பெரும்பாலி வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயன்றுள்ளார். அப்போது எனக்கு குடும்பம் உள்ளது. இனிமேல் நீ என்னை சந்திக்க வர வேண்டாம் என பாலசுப்பிரமணியன் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த கலா தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியனை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி பிள்ளையார் கோவில் ஏரிமுனையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 34), லாரிக்கு பாடி கட்டும் தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி இளவரசி (31). தம்பதிக்கு தனுஷ் (11), சிவகார்த்திக் (9) என இரண்டு மகன்கள் உள்ளனர். ரஞ்சித் குமார் கடந்த 14-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் காட்பாடி ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    கணவர் இறந்த துக்கம் தாளாமல் இளவரசி மன வேதனை அடைந்தார்.யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

    நேற்று இரவு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவு எழுந்து பார்த்த போது இளவரசியை காணாததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இளவரசியின் உறவினர்கள் இரவு முழுவதும் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் இளவரசி பிணமாக மிதந்தார்.

    போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இளவரசியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இளவரசி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×