பொள்ளாச்சி அருகே இளம்பெண் தற்கொலை

ஐஸ்வர்யாவின் தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தங்கை இறந்ததால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.
பொள்ளாச்சி அருகே இளம்பெண் தற்கொலை
Published on

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது23). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கை இறந்ததில் இருந்து ஐஸ்வர்யா மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார்.

மேலும் அவர் இறந்த துக்கம் தாங்காமல் வேதனைப்பட்டார். சம்பவத்தன்று ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com