search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா இங்கிலாந்து"

    • கிரிக்கெட் விளையாட விண்ணப்பித்தது தெரிய வந்ததால் தந்தை திட்டினார்.
    • இருந்த போதிலும கிரிக்கெட் பேட் வாங்குவதற்காக 800 ரூபாய் கடன் வாங்கினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான 22 வயது த்ருவ் ஜுரேல் இடம் பிடித்துள்ளார். முதன்முறையாக இவர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    இவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். இவர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்தில் அவரது தந்தை 800 ரூபாய் கடன் வாங்கி பேட் வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    தனது கிரிக்கெட் விளையாட்டு குறித்து த்ருவ் ஜுரேல் கூறியதாவது:-

    நான் ராணுவ பள்ளியில் படித்தேன். அப்போது விடுமுறை காலத்தின்போது, ஆக்ராவில் உள்ள எக்லாவ்யா மைதானத்தின் கிரிக்கெட் முகாமில் கலந்து கொள்ள நினைத்தேன். அதற்காக விண்ணப்பித்தேன். ஆனால், எனது தந்தையிடம் அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    தந்தைக்கு தெரியவந்ததால் என்னை திட்டினார். என்றாலும் கிரிக்கெட் பேட் வாங்குவதற்காக 800 ரூபாய் கடன் வாங்கினார்.

    மேலும், தந்தையிடம் கிரிக்கெட் பேக் (cricket kit) வேண்டும் எனத் தெரிவித்தேன். அதற்கு அவர் எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய் தேவைப்படும் என்றேன். அப்போது என்னிடம் விளையாட வேண்டாம். விளையாட்டை நிறுத்து என்றார்.

    ஆனால், நான் அடம்பிடித்து, பாத்ரூம் சென்று கதவை பூட்டிக்கொண்டேன். பின்னர் எனது தாயார், அவரது தங்கத் செயினை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கிக் கொடுத்தார்.

    எனது நண்பர்கள் என்னிடம், இந்திய அணிக்கு தேர்வானது குறித்து தெரிவித்தார்கள். நான் தேர்வானதை அவர்களிடம் சொல்லும்போது, அவர்கள் எந்த இந்திய அணிக்கு என்று கேட்டார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடும் இந்திய அணிக்கு என்றேன். இதைக் கேட்டு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சி வசப்பட்டது.

    இவ்வாறு த்ருவ் ஜுரேல் தெரிவித்துள்ளார்.

    • கே.எல். ராகுல் உடன் மூன்று விக்கெட் கீப்பர்.
    • நான்கு சுழற்பந்து, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.எல். ராகுல், கே.எஸ். பரத், த்ருவ் ஜுரேல் (அறிமுகம்) என மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம பிடித்துள்ளனர்.

    பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    அஸ்வின், ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.

    முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி:-

    1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. கே.எல். ராகுல், 7. கே.எஸ். பரத், 8. த்ருவ் ஜுரேல் (அறிமுகம்), 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. அக்சார் பட்டேல், 12. குல்தீப் யாதவ், 13. முகமது சிராஜ், 14. முகேஷ் குமார், 15. பும்ரா, 16. ஆவேஷ் கான்.

    2-வது போட்டி பிப்ரவரி 2 முதல் 6-ந்தேதி வரை விசாகப்பட்டினத்திலும், 3-வது போட்டி பிப்ரவரி 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராஜ்கோட்டிலும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி முதல் மார்ச் 11-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடைபெறுகிறது.

    • இங்கிலாந்து அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • அதில் இரண்டு பேர் புதுமுக வீரரர்கள் ஆவார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ளது. அந்த அணி தென்ஆப்பிரிக்காவுடன் மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

    இரு அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் ஜனவரி 7-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி ஜனவரியில் இந்தியா வந்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 11 முதல் 17 வரை மொகாலி, இந்தூர், பெங்களூரில் போட்டிகள் நடக்கிறது. ஆப்கானிஸ்தான் தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 முதல் 29 வரை ஐதராபாத்தில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் (பிப். 2-6), 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டிலும் (பிப். 15-19), 4-வது டெஸ்ட் ராஞ்சியிலும் (பிப். 23-27), கடைசி டெஸ்ட் தர்மசாலாவிலும் (மார்ச் 7-11) நடக்கிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 சுழற்பந்து வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 3 புதுமுகங்கள் அணியில் இடம்பெற்று உள்ளனர். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, அட்கின்சன் ஆகிய அறிமுக வீரர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். 20 வயதான சோயப் பஷீர் கடந்த ஜூன் மாதம் சோமர்செட் அணிக்காக முதல் தர போட்டியில் அறிமுகமாகி 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    அட்கின்சன், ஹார்ட்லி ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடி உள்ளனர். தற்போது டெஸ்ட் அணியில் நுழைந்துள்ளனர். முன்னணி வேகப்பந்து வீரரான கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு உள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் வருமாறு:-

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரேஹான் அகமது, பேர்ஸ்டோவ், ஜோரூட், கிராவ்லி, ஆலிராபின்சன், பென் டக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன், அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஹார்ட்லி, ஜேக் லீச், பென் போக்ஸ், ஆலிபோப், மார்க்வுட்.

    • இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • இந்தியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

    இந்தியா- இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 76 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடியது.

    இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட்டின் போராட்டத்தால் ஒரு வழியாக மூன்று இலக்கத்தை கடந்தது. ஹீதர் நைட் 52 ரன்களில் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்கா இஷாக், ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 48 ரன்களும் (48 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களும் விளாசினர்.

    ஆனால் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை தனக்குரியதாக்கி விட்டது.

    அடுத்து இவ்விரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தொடங்குகிறது.

    • முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
    • இங்கிலாந்து 100 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ், தாவித் மலான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் இங்கிலாந்து 13 ரன்கள் எடுத்தது.

    4 ஓவரில் 26 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து நல்ல தொடக்கத்துடன் விளையாடியது. 5-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் தாவித் மலானை (16) வீழ்த்தினார். அடுத்த பந்தில் ஜோ ரூட்டை டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அதன்பின் இங்கிலாந்து அணி தடம் புரண்டது. பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முகமது ஷமி பந்தில் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், பேர்ஸ்டோவ் 14 ரன்னிலும் ஸ்டம்பை பறிகொடுத்தனர்.

    இதனால் இங்கிலாந்து 10 ஓவரில் 40 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. அதன்பின் இங்கிலாந்து அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஜாஸ் பட்லர் 10 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    மொயீன் அலியை (15) முகமது ஷமி வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸை (10) ஜடேஜா வீழ்த்தினார். ஒரு பக்கம் தாக்குப்பிடித்து விளையாடிய லிவிங்ஸ்டோன் 27 ரன் எடுத்த நிலையில் குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இங்கிலாந்து 100 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    தொடர்ந்து, டேவிட் வில்லே மற்றும் அடில் ராஷித் ஜோடி விளையாடியது. இதில், அடில் ராஷித் 13 ரன்களில் ஷமியின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.

    9வது விக்கெட் இழந்த நிலையில், டேவிட் வில்லேவுடன் மார்க் வுட் ஜோடி சேர்ந்தார். இதில், ஒரு ரன் கூட எடுக்காமல் மார்க் வுட்டும் அவுட்டானார்.

    இறுதியில், 34.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து தோல்வி அடைந்தது.

    இந்நிலையில், 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக விளையாடி இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.

    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
    • 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து, 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில், பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் நேரில் கண்டு ரசித்து வருகிறார்.

    இதன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முன்னாள் கேப்டன் வீராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
    • காயம் அடைந்த ஹர்த்திக் பாண்ட்யா நாளைய போட்டியிலும் இடம்பெற மாட்டார்.

    13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் வென்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும், அகமதாபாத்தில் நடந்த 3-வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 4-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடைபெற்ற 5-வது போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

    இந்திய அணி 6-வது போட்டியில் இங்கிலாந்துடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மோதுகிறது. லக்னோவில் பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    இந்திய அணியின் அதிரடி நாளையும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை வீழ்த்தி 6-வது வெற்றியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி மான்செஸ்டரில் மோதிய ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த 5 போட்டி தொடரில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் பலவீனமான இங்கிலாந்துக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

    முன்னாள் கேப்டன் வீராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    கோலி ஒரு சதம், 3 அரைசதத்துடன் 354 ரன்களும், ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 311 ரன்களும் எடுத்து உள்ளனர். கோலி இன்னும் ஒரு செஞ்சுரி அடித்தால் தெண்டுல்கரின் சாதனையை (49) சமன் செய்வார்.

    லோகேஷ் ராகுல் (177 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில்லும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பந்துவீச்சில் பும்ரா 11 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 8 விக்கெட்டும், ஜடேஜா7 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    காயம் அடைந்த ஹர்த்திக் பாண்ட்யா நாளைய போட்டியிலும் இடம்பெற மாட்டார்.

    கடந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்த முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவர் அணிக்கு முக்கியத்துவம் பெற்று விட்டார்.

    நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அஸ்வின் இடம்பெற்றால் குல்தீப் யாதவ் கழற்றிவிடப்படலாம்.

    இங்கிலாந்து அணியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. அந்த அணி 1 வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ளது.

    நடப்பு சாம்பியனான பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்தியா இங்கிலாந்து அணிக்களுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்துள்ளது. #ENGvIND
    லண்டன் :

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணிபுரிகிறார்.

    அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து ஜென்னிங்ஸ் உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் அரைசதம் அடித்தார். 43 ரன்னைத் தொடும்போது டெஸ்ட் போட்டியில் ஆறாயிரம் ரன்னைத் தொட்டர் ஜோ ரூட். அத்துடன் டெஸ்ட் போட்டியில் குறைந்த நாட்களில் (2058) 6 ஆயிரம் ரன்னை தொட்டு வேகமாக அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.


    அணியின் ஸ்கோர் 88 ஆக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்க்ஸ், முகமது ஷமி வீசிய 35-வது ஓவரின் முதல் பந்தில் க்ளீன் பௌல்டாகி பெவிலியன் திரும்பினார். அவர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த மாலன் 8 ரன்களில் ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 112 ரன்கள் அடித்திருந்தது.

    அடுத்து, ஜோ ரூட்டுடன், பய்ர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒரு கட்டத்தில் இவர்களை வீழ்த்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் தினறிய நிலையில் இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தனர்.



    ஜோ ரூட் 80 ரன்களில் விராட் கோலியிடம் ரன் அவுட் ஆக, பய்ர்ஸ்டோ, உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து, அடுத்து களமிறங்கிய பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும், பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களிலும் அஷ்வின் வீசிய சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர். 

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது, அந்த அணியில், கரன் 24 ரன்களுடனும், ஆண்டர்சன் ரன் ஏதும் அடிக்காமலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்

    இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார், ஷமி 2 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். #ENGvIND
    மனைவி இல்லாமல் சதம் அடித்ததை எப்படி உணர்கிறீர்கள்? என தினேஷ் கார்த்திக் கேள்விக்கு ரோகித் சர்மா பதிலளித்துள்ளார்.

    இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கு என்பதால், இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகவே நின்றது.

    ஆனால், ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இந்தியா எளிதாகவே வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா, டி20 போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெயரையும் பெற்றார். 

    போட்டி முடிந்த பின்னர், இந்திய வீரர் தினேஷ் கார்திக், ரோகித் சர்மாவிடம் விளையாட்டாக பேட்டி எடுத்தார். அப்போது, 3 சதம் மற்றும் தொடரை வென்றது எப்படி இருக்கிறது? என்று தினேஷ் கார்திக் கேட்டார். 

    அதற்கு பதிலளித்த ரோகித் ஷர்மா, ‘தொடரை வென்றது மகிழச்சி அளிக்கிறது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் அணியுடன் இணைந்து எப்படி விளையாடி வெற்றியை பெறலாம் என்பதே எண்ணமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் சிறப்பாக ஆடவேண்டும் என்று என்பதை விட அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்கலாம் என்றே விளையாடினேன்’ என்றார்.

    ‘உங்களது மனைவி மைதானத்தில் இருந்திருந்தால் சிறப்பாக பேட்டிங் செய்வீர்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால், மனைவி இல்லாமல் நீங்கள் இம்முறை சதம் அடித்துள்ளீகள் எப்படி உணர்கிறீர்கள்’ என தினேஷ் கார்த்திக் கேட்டார்.

    அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, ‘கண்டிப்பாக எனது மனைவி இந்த ஆட்டத்தை டிவியில் பார்த்திருப்பார். இன்னும் சில நாட்களில் அவர் இங்கு வருவார். எனது சதத்தின் போது அவர் இங்கு இல்லாமல் போய்விட்டது. அது சற்று வருத்தத்தை தருகிறது. ஆனால் பரவாயில்லை, இனிவரும் போட்டிகளில் ரிதிகா இங்கு இருப்பார்’ என கூறினார்.
    ×