search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dinesh karthick"

    • ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக கே.எல் ராகுலை எச்சரிக்கும் வகையில் தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
    • 35 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரு துவக்க வீரரின் சராசரி 30-க்கு கீழ் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.

    இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது காயமடைந்த ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட்டார்.

    ஒரு கேப்டனாக இந்த டெஸ்ட் தொடரில் ராகுல் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் அவர் சோபிக்க தவறிவிட்டார். வங்கதேச அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 57 ரன்களை மட்டுமே அவர் அடித்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.

    ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பேட்டிங் ஃபார்மை இழந்து தவித்து வரும் அவரின் தொடர்ச்சியான செயல்பாடுகள் தற்போது அவரது இடத்தின் மீது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளன.

    ஏனெனில் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்று வரும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் கே.எல் ராகுலின் இந்த தொடர் சொதப்பல் அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கதேச தொடரிலும் கே.எல் ராகுல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அடுத்து வரும் ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கே.எல் ராகுலை எச்சரிக்கும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ராகுல் கண்டிப்பாக இடம் பிடிப்பார்.

    ஆனால் அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் தனது சராசரியை 30-க்கு உள்ளே தான் வைத்திருக்கிறார்.

    இப்படி 35 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரு துவக்க வீரரின் சராசரி 30-க்கு கீழ் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டாக வேண்டியது அவசியம். அந்த தொடரிலும் அவர் சொதப்பினால் நிச்சயம் அவரது இடம் சுப்மன் கில்லிடம் பறிபோக வாய்ப்புள்ளது என்று தினேஷ் கார்த்திக் அவரை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மனைவி இல்லாமல் சதம் அடித்ததை எப்படி உணர்கிறீர்கள்? என தினேஷ் கார்த்திக் கேள்விக்கு ரோகித் சர்மா பதிலளித்துள்ளார்.

    இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கு என்பதால், இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகவே நின்றது.

    ஆனால், ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இந்தியா எளிதாகவே வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா, டி20 போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெயரையும் பெற்றார். 

    போட்டி முடிந்த பின்னர், இந்திய வீரர் தினேஷ் கார்திக், ரோகித் சர்மாவிடம் விளையாட்டாக பேட்டி எடுத்தார். அப்போது, 3 சதம் மற்றும் தொடரை வென்றது எப்படி இருக்கிறது? என்று தினேஷ் கார்திக் கேட்டார். 

    அதற்கு பதிலளித்த ரோகித் ஷர்மா, ‘தொடரை வென்றது மகிழச்சி அளிக்கிறது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் அணியுடன் இணைந்து எப்படி விளையாடி வெற்றியை பெறலாம் என்பதே எண்ணமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் சிறப்பாக ஆடவேண்டும் என்று என்பதை விட அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்கலாம் என்றே விளையாடினேன்’ என்றார்.

    ‘உங்களது மனைவி மைதானத்தில் இருந்திருந்தால் சிறப்பாக பேட்டிங் செய்வீர்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால், மனைவி இல்லாமல் நீங்கள் இம்முறை சதம் அடித்துள்ளீகள் எப்படி உணர்கிறீர்கள்’ என தினேஷ் கார்த்திக் கேட்டார்.

    அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, ‘கண்டிப்பாக எனது மனைவி இந்த ஆட்டத்தை டிவியில் பார்த்திருப்பார். இன்னும் சில நாட்களில் அவர் இங்கு வருவார். எனது சதத்தின் போது அவர் இங்கு இல்லாமல் போய்விட்டது. அது சற்று வருத்தத்தை தருகிறது. ஆனால் பரவாயில்லை, இனிவரும் போட்டிகளில் ரிதிகா இங்கு இருப்பார்’ என கூறினார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த விருத்திமான் சாஹா காயம் காரணமாக விலகியுள்ளதால், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார். #INDvAFG #DineshKarthick
    மும்பை:

    வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது. 

    இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் மருத்துவரின் பரிந்துரையின் படி சிகிச்சை பெற்று வரும் சகா, ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் சகா விற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

    மேலும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக்கே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தொடர்வார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
    ×