search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடமாற்றம்"

    • திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.04.2023 அன்று காலை 10.30 மணிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

    • ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் பணியிட மாறுதல் கேட்டு விருப்பம்
    • போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவு

    ஈரோடு ஆனைக்கல் பாளையம் பிரிவில் மாவட்ட ஆயுதப்படை செயல்பட்டு வருகிறது. ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் பணியிட மாறுதல் கேட்டு விருப்பம்தெரிவித்திருந்தனர்.

    இதன் பேரில் மாவட்ட ஆயுதப்படையில் பணி யாற்றிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தலைமை காவலர்கள் பிரபு , சக்தி வேலாயுத சாமி, சுரேஷ்குமார், சிவகுமார் முத்துகிருஷ்ணன், சரவணன், பெண் தலைமை காவலர் பாண்டிய ஜோதி மற்றும் போலீசார் என 59 பேர் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப்- டிவிஷன்க ளுக்கு கீழே உள்ள போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார்.

    இதில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட 59 பேரில் 7 பேர் பெண் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது. இடமாற்றம் செய்யப்பட்ட 59 பேரும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீஸ் குடியிருப்புகளையும் காலி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வருவாய் ஆய்வாளர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.
    • வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் டவுன் வருவாய் ஆய்வாளராக தனலட்சுமி (வயது 40) பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 17-ந்தேதி உயரதிகாரிகளுக்கு மதிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். இதை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூகவலைதளங்களில் பரப்பினார்.

    இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் ரேவந்த் என்பவர் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். ஆவணங்கள் முறையாக இல்லாத காரணத்தால் நிராகரித்ததால் கோபமடைந்த ரேவந்த் தனது நண்பருடன் சேர்ந்து வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி செல்போன் மூலம் உயரதிகாரிகளுக்கு சாப்பாடு ஆர்டர் செய்வதை வீடியோ எடுத்து பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    இந்நிலையில், வீடியோ வைரலான நிலையில், உயர் அதிகாரிக்கு சாப்பாடு ஆர்டர் செய்த வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியை அலங்கியம் ஒன்றியத்துக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தர விட்டு உள்ளார்.
    • நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தர விட்டு உள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

    மேலும் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன், நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதா, பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கும் பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.

    பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணி யாற்றி வந்த சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார், திருச்செங்கோடு மது விலக்கு பிரிவிற்கும், நாமக்கல் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, வெப்படை போலீஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    ஆயில்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் நாமகிரிப்பேட்டைக்கும், மங்களபுரத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணி திம்ம நாயக்கன்பட்டிக்கும், ஜேடர்பாளையத்தில் பணி யாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியம் பரமத்திவே லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • கமலக்கண்ணன், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

    கோவை,

    கோவையில் 11 சப்-இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    ரத்தினபுரி சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தனசீலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் பீளமேட்டுக்கும் மாற்றப்ப ட்டனர்.

    பெரியகடை வீதி சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும, சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகு செல்வி கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சரவணம் பட்டிக்கும், காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ், சாய்பாபா காலனிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

    ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வெரைட்டி ஹால் ேபாலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவிதா வேலூர் மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், கோவை (வடக்கு) வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பாபு கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், அப்பொறுப்பில் இருந்த சதீஷ்குமார், சென்னை- கன்னியாகுமரி தொழிற்நுட்ப திட்ட மறு குடியமர்வு அலுவலரா–கவும், நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது) மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.

    • கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது.
    • பொதுமக்களின் நலன் கருதி சார்பதிவாளரை இடமாறுதல் செய்யக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கடையம்:

    ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ், பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது. இதைத்தொடர்ந்து அப்போதிருந்த சார்பதிவாளர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். பின்னர் சார்பதிவாளர் நியமிக்கப்படாமல் இளநிலை உதவியாளர் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மேலப்பாளையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த குமரேசன் என்பவர் பதவி உயர்வு பெற்று கடையம் சார்பதிவாளராக நியமிக்கப் பட்டார். இவர் சார்பதிவாளராக பதவி ஏற்ற பின்னர் நேர்மையான முறையில் செயல்பட்டு வருகிறார். மேலும் போலி பத்திரப்பதிவு ஏதும் நடைபெறாமல் இருப்பதுடன், அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பத்திரப்பதிவும் செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நேர்மையாக செயல்படும் இச்சார்பதிவாளரை சிலர் தங்களது சுய நலத்திற்காக வேறு அலுவலகத்திற்கு மாறுதல் செய்ய கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகவலால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நேர்மையாக செயல்படும் சார்பதிவாளரை மாறுதல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    • 30 காவல் நிலையங்களில் பணிபுரியும் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் கடந்த 2-ந் தேதி எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்க தாமதம் ஆனதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓசூர் கலவரம் போலீசார் தோல்விக்கு எடுத்துக்காட்டு என விமர்சித்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, மஹாராஜகடை, காவேரிப்பட்டினம் என மொத்தம் 30 காவல் நிலையங்களில் பணிபுரியும் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • சேலம் மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிய 13 செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • காடையாம்பட்டி முதல் நிலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மயின் வாகனன், கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டைக்கும், அங்கு பணியாற்றிய பொற்கொடி, காடையாம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிய 13 செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காடையாம்பட்டி முதல் நிலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மயின் வாகனன், கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டைக்கும், அங்கு பணியாற்றிய பொற்கொடி, காடையாம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வீரகனூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சாமி, கடலூர் மாவட்டம் தொரப்பாடிக்கும், திருப்பூர் கொமரலிங்கம் பஞ்சாயத்து செயல் அலுவலர் கார்த்திகேயன் வீரகனூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட செயல் அலுவலர்கள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிய 13 செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • செயல் அலுவலர்கள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிய 13 செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காடையாம்பட்டி முதல் நிலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மயின் வாகனன், கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டைக்கும், அங்கு பணி யாற்றிய பொற்கொடி, காடையாம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வீரகனூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சாமி, கடலூர் மாவட்டம் தொரப்பா

    டிக்கும், திருப்பூர் கொமர லிங்கம் பஞ்சாயத்து செயல் அலுவலர் கார்த்திகேயன் வீரகனூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட செயல் அலுவலர்கள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • மொத்தம் 19 பேர் பணியிடம் மாற்றப்பட்டிருக்கின்றனர்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலரை மாவட்டத்திற்கு வேறு போலீஸ் நிலையங்களுக்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிலர் ஒரே சப்-டிவிஷனுக்குள்ளேயும், சிலர் பிற சப்-டிவிஷன்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 19 பேர் பணியிடம் மாற்றப்பட்டிருக்கின்றனர். இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பிறப்பித்துள்ளார்.

    • திருமங்கலம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை எதிர்த்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • சிந்துபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிரா மத்தில் 1914 -ம் ஆண்டு முதல் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள தும்மக்குண்டு, காங்கே யநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவ லகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் சூழ்நிலையில் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த திருமங்கலம் தாலுகாவுக்கு காங்கேயநத்தம், நக்க லக்கோட்டை, பன்னீர் குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, சென்ன ம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதுவரை செயல்பட்டு வந்த சிந்துபட்டி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல ம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இதனால் சிந்துபட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு செல்ல ம்பட்டிக்கு செல்ல வேண்டும்.

    இந்த நடைமுறைக்கு மேற்கண்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்லம்பட்டிக்கு இட மாற்றம் செய்வதால் பொது மக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்து கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்துபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×