துணை கலெக்டர்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.
துணை கலெக்டர்கள் இடமாற்றம்
Published on

சேலம்:

தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவிதா வேலூர் மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், கோவை (வடக்கு) வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பாபு கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், அப்பொறுப்பில் இருந்த சதீஷ்குமார், சென்னை- கன்னியாகுமரி தொழிற்நுட்ப திட்ட மறு குடியமர்வு அலுவலரா–கவும், நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது) மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com