search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி"

    • பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
    • பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    தென்காசி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கடந்த 2 நாட்களாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பறக்கும் படையினர் பறி முதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து தென்காசியை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த ஒருவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் வாங்கி சோதனை செய்து பார்த்தனர். அதில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் இருந்தது. இதையடுத்து அதன் உரிமையாளரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி அருமனை தெருவை சேர்ந்த செய்யது அலி (வயது 32) என்பது தெரியவந்தது.

    மேலும் செய்யது அலி தென்காசியில் நகைக்கடை நடத்தி வருகிறார். மதுரைக்கு நகை வாங்குவதற்காக பஸ்சில் பணத்துடன் சென்ற நிலையில், அங்கு நகை வாங்கவில்லை என்பதால் கொண்டு சென்ற பணத்தை அப்படியே திரும்பவும் கொண்டு வந்ததாக கூறினார்.

    ஆனாலும் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப்படுகிறார்கள்.
    • திருச்செங்கோட வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வழியாக செல்லும் பல பஸ்களிலும், தொலைதூரம் செல்லும் சில அரசு பஸ்களிலும் முன்பக்க கண்ணாடிகளில் ஒளிரும் வண்ணவிளக்குகள் கொண்ட பட்டைகள் பொருத்தியிப்பதாகவும் இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப் படுவ தாக வந்த புகாரை அடுத்து

    திருச்செங்கோட வட்டார

    போக்குவரத்து அலுவலர்

    (பொறுப்பு) சரவணன்

    ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த வண்ணவிளக்கு பட்டைகளை அகற்றி னார்கள். பஸ் எண் வழித்தடம் மற்றும் டிரைவர், கண்டக்டர் உரிமங்களை பெற்று பதிவு செய்து கொண்டதோடு இந்த முறை அறிவுறுத்துவதோடு அடுத்த முறை பிடிபட்டால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர்.
    • உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு டாரஸ் லாரி எம் சண்ட் ஏற்றி வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர். அதில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    மேலும் இதனை உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர். உடனே போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் காவல்கிணறு பகுதியில் இருந்து ஏற்றி கேரளா மாநிலம் செங்கவிளை பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக தக்கலை போலீசார் லாரி டிரைவர் கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாத–காப்–பட்டி கேட் அம்–பாள் ஏரி ரோடு பகு–தியை சேர்ந்–த–வர் விக்–னேஸ்–வ–ரன்.
    • பிர–பல ரவு–டி–யான இவர் மீது அடி–தடி, கொலை முயற்சி, வழிப்–பறி, அரிசி கடத்–தல், திருட்டு உள்–பட 7-க்கும் மேற்–பட்ட வழக்–கு–கள் உள்–ளன.

    சேலம்:

    சேலம் அன்–ன–தா–னப்–பட்டி தாத–காப்–பட்டி கேட் அம்–பாள் ஏரி ரோடு பகு–தியை சேர்ந்–த–வர் விக்–னேஸ்–வ–ரன். இவ–ரு–டைய மகன் ரஞ்–சித் என்ற ரஞ்–சித்–கு–மார் (வயது 30). பிர–பல ரவு–டி–யான இவர் மீது அடி–தடி, கொலை முயற்சி, வழிப்–பறி, அரிசி கடத்–தல், திருட்டு உள்–பட 7-க்கும் மேற்–பட்ட வழக்–கு–கள் உள்–ளன.

    இந்த நிலை–யில், கடந்த ஆண்டு அன்–ன–தா–னப்–பட்டி கிராம நிர்–வாக அலு–வ–லரை தாக்–கிய வழக்–கில் ரஞ்–சித்–கு–மாரை போலீ–சார் கைது செய்–த–னர். பின்–னர் அவர் சேலம் மத்–திய சிறை–யில் அடைக்–கப்–பட்–டார்.

    பொது–மக்–க–ளுக்கு அச்–சு–றுத்–தல் ஏற்–ப–டுத்–தும் வகை–யில் தொடர்ந்து குற்–றச்–செ–யல்–களில் ரஞ்–சித்–கு–மார் ஈடு–பட்டு வந்–த–தால் அவர் மீது குண்–டர் தடுப்பு சட்–டம் பாய்ந்–தது. இத–னி–டையே, கடந்த 20 நாட்–க–ளுக்கு முன்பு ரவுடி ரஞ்–சித்–கு–மார் ஜாமீ–னில் வெளியே வந்–தார். அவர் மாசி–நா–யக்–கன்–பட்டி பகு–தி–யில் 2-வது மனைவி பிரி–யா–வு–டன் வசித்து வந்–த–தாக கூறப்–படுகிறது.

    நேற்று முன்–தி–னம் காலை வீட்–டில் இருந்து வெளியே சென்–ற–வர் அதன்–பி–றகு இரவு திரும்–ப–வில்லை. இத–னால் சந்–தே–கம் அடைந்த அவ–ரு–டைய மனைவி பிரியா மற்–றும் குடும்–பத்–தி–னர் பல்–வேறு இடங்–களில் தேடி–யும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது தொடர்–பாக அம்–மாப்–பேட்டை போலீஸ் நிலை–யத்–தில் உற–வி–னர்–கள் புகார் செய்–த–னர். அதன்–பே–ரில், போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து ரஞ்–சித்–கு–மாரை தேடி வந்–த–னர்.

    இந்த நிலை–யில், உடை–யாப்–பட்டி வேடி–யப்–பன் கோவில் அருகே உள்ள குடி–நீர் குழாய் திறந்து விடப்–படும் தொட்டி பகு–தி–யில் நேற்று இரவு ரஞ்–சித்–கு–மார் கழுத்து அறுக்–கப்–பட்ட நிலை–யில் பிண–மாக கிடப்–ப–தாக அம்–மாப்–பேட்டை போலீ–சா–ருக்கு தக–வல் கிடைத்–தது. அதன்–பே–ரில், போலீ–சார் சம்–பவ இடத்–திற்கு சென்று விசா–ரித்–த–போது, ரஞ்–சித்–கு–மாரை கொலை செய்த மர்ம கும்–பல் அவ–ரது உடலை பள்–ளத்–தில் வீசி சென்–றி–ருப்–பது தெரி–ய–வந்–தது. ரஞ்–சித்–கு–மா–ரின் உடலை மீட்டு பிரேத பரி–சோ–த–னைக்–காக போலீ சார் சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்–த–னர்.

    விசாரணையில் ரஞ்–சித்–கு–மார் தனது முதல் மனை–வியை விட்டு பிரிந்து 2-வது மனை–வி–யான பிரி–யா–வு–டன் மாசி–நா–யக்–கன்–பட்–டி–யில் வீடு வாட–கைக்கு எடுத்து வசித்து வந்–துள்–ளார். ஆனால் அவ–ரது முதல் மனை–வி–யு–டன் நண்–பர் சுரேஷ் என்–ப–வர் நெருங்கி பழகி வந்–த–தா–க–வும், இது தொடர்–பாக அவர்–க–ளுக்–குள் தக–ராறு ஏற்–பட்டு வந்–த–தா–க–வும் கூறப்–ப–டு–கிறது. இதை–ய–டுத்து அக்–கம் பக்–கத்–தி–னர் ரஞ்–சித்–கு–மா–ரை–யும், சுரே–சை–யும் சமா–தா–னப்–படுத்தி விலக்கி விட்–டுள்–ள–னர்.

    இந்த மோதல் தொடர்–பாக ரவுடி ரஞ்–சித்–கு–மார் கொலை செய்–யப்–பட்டு இருக்கலாம் என போலீ சாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், தனிப்படைகள் அமைத்து உத்தர விட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார், கொலையாளி களின் உருவம் கண்டறிய கொலை நடந்த இடத்தின் அருகாமையில் ஏதேனும் சி.சி.டி.வி. காமிரா உள்ளதா? என பார்வை யிட்டு வருகின்ற னர். அது மிட்டுமின்றி ரஞ்சித்குமார் பயன்படுத்தி வந்த செல்போ னில் பதிவான அழைப்பு களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.இதை தவிர முதல் மனைவி மற்றும் அவரது நண்பர் சுரேஷையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் திருப்பூ ரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபடும் பட்சத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.

    • சேலம்‌ மாவட்ட தொழி லாளர்‌ துறை தொழிலாளர்‌ உதவி ஆய்வாளர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். ‌
    • இதில்‌ 5 நிறுவனங்களில்‌ முரண்பா டுகள்‌ கண்டறியப்பட்டது.

    சேலம்:

    சென்னை முதன்மை செயலாளர் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி, சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அறிவு ரைபடியும் சேலம், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தலைமையில் சேலம் மாவட்ட தொழி லாளர் துறை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

    சேலம் மாவட்ட எல்லைக்குட்பட்ட 28 நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் எடைகள் மற்றும் அள வைகளின் கீழ் தயாரிப்பாளர்கள், விற்ப னையாளர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்கள் (உரிமம் புதுப்பிக்கப்படா மல் செயல்படுதல் உட்பட) நிறுவனங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில் 5 நிறுவனங்களில் முரண்பா டுகள் கண்டறியப்பட்டது.

    மேலும் 29 மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 12 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் சட்டமுறை எடையளவுகள் விதிகள் 2011-ன் கீழ் பாட்டில்கள் மற்றும் சிகரெட் லைட்டர் கடைகள் உள்ளிட்ட 20 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    எடை அளவுகள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகள் முத்திரையின்றி பயன்ப டுத்து வதும், சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும், உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்ப டுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆய்வின் போது முரண்பாடுகள் கண்டறி யப்பட்டால் அப ராதம் உள்ளிட்ட நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்று தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தெரிவித்தார்.

    • சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தில் அரசு மருத்துவமனை எதிரில் முதலை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது
    • இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தில் அரசு மருத்துவமனை எதிரில் முதலை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சிதம்பரம் சரக வனவர் பிரபு தலைமையில், சிதம்பரம் வனக்காப்பாளர் அன்புமணி, புவனகிரி வனக்காப்பாளர் ஞானசேகர், வனக்காப்பாளர் அமுதபிரியன் மற்றும் ஊழியர்கள் இணைந்து இன்று அதிகாலையில் சிதம்பரம் வட்டம் கவரப்பட்டு கிராமம் அரசு மருத்துவமனை எதிரில் 5 அடி நீளமுள்ள முதலையை பிடித்து வக்கரமாரி நீர் தேக்க குளத்தில் பாதுகாப்பாக விட்டனர்.

    • பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.
    • பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில ஆதாரங்களுடன் சி.பி.ஐ.க்கு புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு வீதியில் உள்ள உதவி பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில் பத்திரப் பதிவாளர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு வீதியில் பத்திர பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு புதிய பத்திரப்பதிவுகள் மற்றும் பட்டா மாறுதல் செய்வதற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில ஆதாரங்களுடன் சி.பி.ஐ.க்கு புகார் அளித்துள்ளார். அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமை அலுவலக உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த 4 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் காரைக்கால் உதவி பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர். அலுவலக கேட்டை மூடிவிடடு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் காரைக்கால் ராஜாத்தி நகர் அருகே உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டிலும் நான்கு பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை 3 மணி வரை என விடிய விடிய சோதனை நடைபெற்றது.     சோதனையில் முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். இதில் பத்திரப்பதிவாளர் சந்திர மோகன், உதவியாளர் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர்.
    • உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும்

    கடலூர்:

    பொது இடங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பேனர்கள் வைப்பதால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அவ்வப் போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அதன் மூலம் உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூராகவும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்கள் அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் தி.மு.க. தலைமை அறிவுறுத்தியதை தொடர்ந்து கடலூர் மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தி.மு.க.வினர் பேனர்களும் அதிரடியாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

    • சேலம் மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிய 13 செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • செயல் அலுவலர்கள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிய 13 செயல் அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காடையாம்பட்டி முதல் நிலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மயின் வாகனன், கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டைக்கும், அங்கு பணி யாற்றிய பொற்கொடி, காடையாம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வீரகனூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சாமி, கடலூர் மாவட்டம் தொரப்பா

    டிக்கும், திருப்பூர் கொமர லிங்கம் பஞ்சாயத்து செயல் அலுவலர் கார்த்திகேயன் வீரகனூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட செயல் அலுவலர்கள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்த ப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • இதேபோல் ஈரோடு அருகே உள்ள காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்த ப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியாக நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    டவுன் டி.எஸ்.பி.ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் ஒவ்வொரு தங்கும் விடுதியாக சென்று சோதனை செய்தனர். விடுதியில் தங்கியுள்ள–வர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். சமீபத்தில் யாரெல்லாம் புதிதாக விடுதியில் தங்கி உள்ளனர் என்ற விபரமும் கேட்டறிந்தனர். விடுதியில் யாரேனும் சந்தேகம் படும்படி இருந்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு காவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் எல்லை பகுதியில் அமைந்துள்ள சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடி, தமிழக- கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்ட 24 மணி நேரமும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதுபோல் மாவட்டத்தில் 12 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்ப ட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் 24 மணி நேரமும் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்த ப்பட்டு பயணிகள் உடைமை தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதி க்கப்படுகிறது.

    இதேபோல் ஈரோடு அருகே உள்ள காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் ஈரோட்டில் பெரும்பாலும் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் முன்பு தேசியக் கொடி ஏற்றப்பட்டு ள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் முறை இல்லாமல் கீழ் நோக்கி தேசிய கொடி பலர் கட்டி வைத்திருந்தனர்.

    அதனை போலீசார் பார்த்து சரிசெய்து முறையாக கட்ட சொல்லி வலியுறுத்தினர்.

    • 2 பேரும் தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறிய பொட்டலமாக விற்று வந்துள்ளனர்.
    • தினமும் காலை-மாலை வேளைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று சிறிய பொட்டலமாக கஞ்சாவை பார்சல் செய்து பள்ளி-கல்லூரிகள் முன்பு நின்று மாணவர்களிடம் விற்பனை செய்துள்ளனர்.
    • ஏற்கனவே தகவல் தெரிந்த போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடி வந்த நிலையில் தான் தற்போது வாகன சோதனையில் சிக்கி உள்ளனர்.

    திருவட்டார், ஜூன்.30-

    திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் வேர்கிளம்பி பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிவேகமாக இரு சக்கர வாகனம் வந்தது. அந்த வாகனத்தை போலீ சார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தை சோதனை செய்த போது 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்ப ட்டது.

    உடனே வாகனத்தில் வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவட்டார் அருகே நாராயணத்து விளை பகுதியை சேர்ந்த ஆல்பி என்ற ஆல்வின் சாமுவேல் (வயது29), முள விளை வியனூர் பகுதியை சேர்ந்த பிரதீஷ் (28) என தெரியவந்தது.

    இவர்கள் 2 பேரும் தங்கள் செல்போனில் வாட்ஸ்ஆப் குரூப் தொடங்கி அந்த பகுதியில் உள்ள பள்ளி-கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து அவர்களிடம் நைசாக பேசி கஞ்சா விற்பது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    2 பேரும் தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறிய பொட்டலமாக விற்று வந்துள்ளனர். இவர்களது பண பரிவரித்தனைகள் அனைத்தும் ஜி. பே. மூலம் நடைபெற்றுள்ளது.

    தினமும் காலை-மாலை வேளைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று சிறிய பொட்டலமாக கஞ்சாவை பார்சல் செய்து பள்ளி-கல்லூரிகள் முன்பு நின்று மாணவர்களிடம் விற்பனை செய்துள்ளனர்.

    இது பற்றி ஏற்கனவே தகவல் தெரிந்த போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடி வந்த நிலையில் தான் தற்போது வாகன சோதனையில் சிக்கி உள்ளனர். கைதானஆல்பி என்ற ஆல்வின் சாமுவேல் தனியார் நிறுவனத்தில் லோன் வசூலிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.

    பிரதீஷ், தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிரடி 10 சாயப்பட்டறை இடித்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிரடி நடவடிக்கையால் 10 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டது.

    குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு சாயம் போட 300-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சில சாயபட்டறைகள் அனுமதி பெற்றும், பல பட்டறைகள் அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருகிறது. அனுமதி பெறாமலும், கழிவுநீரை காவிரியில் கலக்க விடும் பட்டறைகள் மீது அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் பொக்லின் உதவியுடன் இடித்து வந்தனர். அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் செயல்படக்கூடாது என அறிவித்தும், தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன் சாயக்கழிவு நீரை காவிரியில் கலக்க விடுகிறார்கள். இது சம்பந்தமாக பலரிடம் நேரில் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து செயல்பட்டதால் மாசுக்கட்டுபாட்டு வாரிய மாவட்ட அலுவலர் மோகன், தாசில்தார் தமிழரசி தலைமையில் நடராஜா நகர், கம்பன் நகர், ஓலப்பாளையம், ஆனங்கூர் ரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை உள்ளிட்ட பகுதியில் பொக்லின் உதவியுடன் 10 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டது.

    இதில் பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன், உதவி பொறியாளர்கள் வினோத்குமார், கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×