search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சார்பதிவாளர் அலுவலகம்"

    • சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.
    • ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும்.

    சுபமுகூர்த்த தினமான நாளை (நவம்பர் 23ம் தேதி) ஆவண பதிவுகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து பதுவுத்துறை செயலர் கூறியதாவது:-

    அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் எதிர்வரும் 23.11.2023 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் அன்றைய தினம் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • கொல்லம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
    • பெண் புனலூரை சேர்ந்த வாலிபருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தவரின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், ஒரு மாதம் கழித்து திருமணம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

    இந்த நிலையில் கொல்லம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர், 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அந்த பெண் கொல்லம் அருகே பத்மநாபபுரத்தில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது 2 விண்ணப்பங்களிலும் வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.

    அதாவது அந்த பெண் பத்மநாபபுரம் புன்னாலை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்ய விரும்புவதாக பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி விண்ணப்பம் செய்திருக்கிறார். அதே பெண் புனலூரில் உள்ள சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (13-ந்தேதி) புனலூரை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ய விரும்புவதாக விண்ணப்பித்திருந்தார்.

    திருமண விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால், ஒரு பெண் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்திருந்த விவரம் தெரியவந்தது. இதனை கண்டறிந்த புனலூர் சார் பதிவாளர், அந்த பெண்ணின் விண்ணப்பத்தை பத்மநாபபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    2 சார் பதிவாளர் அலுவலகங்களில், வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்தது குறித்து விவரம் கேட்பதற்காக அந்த பெண் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி அந்த பெண் புனலூரை சேர்ந்த வாலிபருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தார்.

    அந்த பெண், புனலூரை சேர்ந்த வாலிபருடன் நீண்ட நாட்களாக 'லிவிங் டுகெதர்' உறவில் இருந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அந்த வாலிபரிடம் இருந்து பிரிந்து தாயுடன் சென்று தங்கிவிட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு பத்மநாபபுரத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வாலிபர் ஒரு காகிதத்தில் தன்னை கையெழுத்து போட வைத்ததாகவும், அது தான் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் கொடுக்கப்பட்ட திருமண விண்ணப்பம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அந்த பெண் கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை என்று பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த பெண் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள வாலிபர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் வகையில் பத்மநாபபுரம் மற்றும் புனலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வெவ்வேறு நாட்களில் வருமாறு தெரிவித்துள்ளனர்.

    • 2 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2017-2018-ம் நிதி ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முறைகேடு கண்டறியப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.30 லட்சத்துக்கும் மேல் உள்ள பத்திரப்பதிவுகள் தொடர்பாக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

    வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்ட பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் அதுபோன்ற பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதன் மூலம் பெரிய அளவிலான தொகை கைமாற்றப்பட்டு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை அடுத்த செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூர் ஆகிய 2 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இதுபோன்ற முறைகேடு நடைபெற்றிருப்பதை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு கண்டுபிடித்தது.

    இதையடுத்து இந்த 2 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு பத்திரப்பதிவில் முறையாக கணக்கு காட்டப்படாததும் தெரிய வந்தது. இதில் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் 2 ஆயிரம் கோடிக்கு மேல் பத்திரப்பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    2017-2018-ம் நிதி ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த முறைகேடு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து இந்த முறைகேட்டுக்கு காரணமாக செங்குன்றம், உறையூர் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. இருவர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் 2 சார்பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கும் உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

    • முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
    • செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறுகிறது.

    தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாகவும், விதிகளுக்கு புறம்பாக பத்திரப்பதிவு செய்ப்படுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலக வருவாய் தொடர்பான கணக்குகளை கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர்.

    அவ்வகையில் சென்னை அருகே உள்ள செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம், திருச்சி உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 17 மணி வரை நீடித்த இந்த சோதனையில், சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் கணக்கு காட்டவில்லை எனவும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டவில்லை என்றும் வருமானவரி நுண்ணறிவு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    வட சென்னை பகுதியிலேயே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறுகிறது. செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. பத்திர பதிவு நடைபெறும் நேரங்களில் விதிகளுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி உள்ளனர்.

    • செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.
    • தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வட சென்னை பகுதியிலேயே அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறும் அலுவலகமாக செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் இருந்து வருகிறது.

    செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இதனால் தினமும் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் பத்திர பதிவு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதுபோன்று பத்திர பதிவு நடைபெறும் நேரங்களில் விதிகளுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. இதில் பத்திரபதிவு அலுவலகத்தில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 17 மணி நேரம் நடைபெற்ற சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த சோதனை காரணமாக செங்குன்றம் பகுதியில் விடிய விடிய பரபரப்பு நிலவியது.

    இதே போன்று தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
    • போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் லெனின் கிறாஸ் (வயது 29). என்ஜினீயரான இவர், துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பட்டதாரி பெண்ணுடன் வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகிய இருவரும் கடந்த 3 வருடமாக காதலிக்க தொடங்கினர்.

    லெனின் கிறாஸ் ஊருக்கு வந்தபோது, காதல் ஜோடியினர் பல்வேறு பகுதிகளில் ஒன்றாக சுற்றி வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்ற லெனின் கிறாஸ், காதலிக்கு செலவுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் இருவரும் தினமும் பேசி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் கிறாஸ் ஊர் திரும்பினார். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

    இந்த தகவல் காதலிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலன் லெனின் கிறாசை தேடி வந்தார். அப்போது தான் அவருக்கு திருமண தேதி பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

    உடனடியாக சைமன் காலனிக்கு விரைந்து சென்ற காதலி பங்குத்தந்தையிடம் முறையிட்டார். இதனால் 11-ந் தேதி லெனின் கிறாசிற்கு வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

    திருமண நேரத்தில் ஆலயத்தில் சென்று காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். மனுவை பரிசீலித்த அவர், நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர் அளித்த புகாரில் ஆதாரங்கள் இருந்ததால், காதலியை திருமணம் செய்யும்படி, லெனின் கிறாசுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து இருவரும் குளச்சலில் உள்ள ஒரு குருசடி முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

    வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தி 9 நாட்கள் போராட்டம் நடத்திய காதலியின் துணிச்சலை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    • கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது.
    • பொதுமக்களின் நலன் கருதி சார்பதிவாளரை இடமாறுதல் செய்யக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கடையம்:

    ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ், பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது. இதைத்தொடர்ந்து அப்போதிருந்த சார்பதிவாளர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். பின்னர் சார்பதிவாளர் நியமிக்கப்படாமல் இளநிலை உதவியாளர் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மேலப்பாளையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த குமரேசன் என்பவர் பதவி உயர்வு பெற்று கடையம் சார்பதிவாளராக நியமிக்கப் பட்டார். இவர் சார்பதிவாளராக பதவி ஏற்ற பின்னர் நேர்மையான முறையில் செயல்பட்டு வருகிறார். மேலும் போலி பத்திரப்பதிவு ஏதும் நடைபெறாமல் இருப்பதுடன், அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பத்திரப்பதிவும் செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நேர்மையாக செயல்படும் இச்சார்பதிவாளரை சிலர் தங்களது சுய நலத்திற்காக வேறு அலுவலகத்திற்கு மாறுதல் செய்ய கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகவலால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நேர்மையாக செயல்படும் சார்பதிவாளரை மாறுதல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பேரூராட்சி பகுதியிலும் சார்பதிவாளர் அலுவ லகங்கள் செயல்பட்டு வருகிறது.
    • அபிராமம் பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பேரூராட்சி பகுதியிலும் சார்பதிவாளர் அலுவ லகங்கள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் அபிராமம் பேரூராட்சி பகுதியில் கடந்த சில வருடங்களாக வாடகை கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதுடன் மன உைளச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    அபிராமம் பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கவும், விற்கவும் செய்வதுடன் இந்த ஆவணங் களை பதிவு செய்ய அதிகமான பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு வருகின்றனர்.

    இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால் இட நெருக்கடியும். அரசுக்கு பொருளாதார விரயமும் ஏற்படுகிறது. வாடகை கட்டிடத்தில் செயல்ப டுவதால் அவ்வப்போது சார்பதிவாளர் அலுவ லகத்தை மாற்றும் போது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    இந்த சிரமத்தை தவிர்க்கவும் அபிராமம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான ஆபிராமம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சார்பதி வாளர் ராமமூர்த்தி கூறுகையில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனைத்து பணிகளும் முடிந்து நிரந்த ரமாக சார்பதிவாளர் அலுவ கத்திற்க்கு கட்டிடம் கட்டும் பணியை பொதுப்பணி துறை மேற்கொள்ள உள்ளனர் என்றார்.

    ×