என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாடகை கட்டிடத்தில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பேரூராட்சி பகுதியிலும் சார்பதிவாளர் அலுவ லகங்கள் செயல்பட்டு வருகிறது.
- அபிராமம் பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பேரூராட்சி பகுதியிலும் சார்பதிவாளர் அலுவ லகங்கள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் அபிராமம் பேரூராட்சி பகுதியில் கடந்த சில வருடங்களாக வாடகை கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதுடன் மன உைளச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
அபிராமம் பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கவும், விற்கவும் செய்வதுடன் இந்த ஆவணங் களை பதிவு செய்ய அதிகமான பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு வருகின்றனர்.
இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால் இட நெருக்கடியும். அரசுக்கு பொருளாதார விரயமும் ஏற்படுகிறது. வாடகை கட்டிடத்தில் செயல்ப டுவதால் அவ்வப்போது சார்பதிவாளர் அலுவ லகத்தை மாற்றும் போது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த சிரமத்தை தவிர்க்கவும் அபிராமம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான ஆபிராமம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சார்பதி வாளர் ராமமூர்த்தி கூறுகையில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனைத்து பணிகளும் முடிந்து நிரந்த ரமாக சார்பதிவாளர் அலுவ கத்திற்க்கு கட்டிடம் கட்டும் பணியை பொதுப்பணி துறை மேற்கொள்ள உள்ளனர் என்றார்.