search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Registrar office"

    • சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.
    • ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும்.

    சுபமுகூர்த்த தினமான நாளை (நவம்பர் 23ம் தேதி) ஆவண பதிவுகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து பதுவுத்துறை செயலர் கூறியதாவது:-

    அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் எதிர்வரும் 23.11.2023 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் அன்றைய தினம் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றம் சாட்டி வந்தனர்.

    மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் பால மணிகண்டன் என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் புரோகராக பணியாற்றி பொதுமக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று பணியில் இருந்தவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து விட்டு அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.60 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் பால மணிகண்டன் உள்ளிட்ட சார் பதிவு அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனை நள்ளிரவு வரையில் நடைபெற்றது. சோதனைக்கு பின்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள்.

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த மயிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. #VigilanceRaid
    சென்னை:

    சென்னையில் அசோக் நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 900 கைப்பற்றப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 250 மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஜெய்சங்கர் என்பவர் உர மானியம் பெற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராமச்சந்திரனை அணுகினார். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு அவரிடம் லஞ்சப்பணம் கொடுத்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

    ஈரோடு மாவட்டம் சிக்கரசன் பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் நிலம் தொடர்பான விவகாரத்திற்கு கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் ரங்கசாமி ரூ.65 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்ச பணத்தை கொடுத்த போது ரங்கசாமி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருலோகசுந்தர், புதிதாக கட்டிய திருமண மண்டபத்திற்கு சுகாதார சான்றிதழ் கேட்டு சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜை அணுகியபோது ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச பணமாக ரூ.6 ஆயிரத்தை பெற்றபோது லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. #VigilanceRaid
    ×