search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bond"

    • ஆம்பர் ரோஸ், 7 வருடங்கள் மைக்கேல் ரிக்கருடன் நட்பில் இருந்தார்
    • சிறைக்கு சென்ற ரிக்கர், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் லின்கன் கவுன்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் 63 வயதான லெசா ஆர்ம்ஸ்ட்ராங் ரோஸ் (Lesa Armstrong Rose), அவர் கணவர் டெட்டி (Teddy) மற்றும் அவர்களது மகள், ஆம்பர் ரோஸ் (Amber Rose).

    ஆம்பர் ரோஸ், சுமார் 7 வருடங்கள் 36 வயதான மைக்கேல் ஸ்டீவன் ரிக்கர் (Michael Steven Ricker) எனும் ஆண் நண்பருடன் நட்பில் இருந்தார். பிறகு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

    சில மாதங்களுக்கு முன் ரிக்கர், ஆம்பர் ரோஸை தாக்கியுள்ளார். இதனையறிந்த ரோஸின் தந்தை, ரிக்கரை அழைத்து விசாரித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இதையடுத்து ரிக்கர், டெட்டியை துப்பாக்கியால் சுட்டார். இதில் டெட்டி பலத்த காயமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ரிக்கர், காவல்துறையின் தேடலில் சிக்கினார். கைது செய்யப்பட்ட ரிக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், 12 நாட்களில் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இதையடுத்து சில நாட்களில் ரோஸ் வீட்டிற்கு மீண்டும் ரிக்கர் வந்தார். அப்போது அங்கு ஆம்பர் இல்லை. ஆனால், ஆம்பர் ரோஸின் தாயார் லெஸா இருப்பதை கண்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை செய்தார். இதில் லெஸா உயிரிழந்தார்.

    இச்சம்பவத்தையடுத்து காவல்துறையினரின் தீவிர தேடலில் மீண்டும் ரிக்கர் சிக்கினார்.

    இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் நீதி அமைப்பில் உள்ள சுலபமான வழிகளில் ரிக்கர் போன்றவர் தப்பித்து வந்து மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவதை ஆம்பர் ரோஸ் விமர்சித்துள்ளார்.

    அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

    ரிக்கர் எங்கள் குடும்பத்தை தங்கள் குடும்பமாக நினைத்தான். நாங்களும் ரிக்கரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துத்தான் பழகி வந்தோம். உண்மையில் நான் நீதித்துறையின் மீதுதான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். ஜாமீனில் வந்தவனால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. தேவையற்ற விஷயங்களை குறித்து நீதித்துறை கவலைப்படுகிறது. சிறிதளவு போதை பொருள் வைத்திருப்பவர்கள் எளிதாக ஜாமீனில் வர முடிவதில்லை. ஆனால், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன் வெளியே சுலபமாக வந்து மீண்டும் கொலை செய்கிறான்.

    இவ்வாறு ரோஸ் தெரிவித்தார்.

    ஆம்பர் ரோஸின் கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் பல பயனர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    • குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில் மட்டும் இது அதிகரிக்கும்.
    • ஒவ்வொரு அலுவலகத்திலும், பாதிக்கு பாதி மட்டும் டோக்கன் பதிவாகியிருந்தது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் சராசரியாக நாளொன்றுக்கு 100 முதல் 200 பத்திரப்பதிவுக்கான டோக்கன் வழங்கப்படும். குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில் மட்டும் இது அதிகரிக்கும்.

    ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் முதல் நாளே முகூர்த்த தினம் என்பதால் பத்திரங்கள் அதிகம் பதிவாகும் என எதிர்பார்த்து 200 டோக்கன்கள் வழங்கப்பட்டது. தினமும் அதிகம் பதிவாகும் அலுவலகங்களில் 100க்கு பதிலாக, 150 டோக்கன்கள் வழங்கலாம் என்று பத்திரப்பதிவு துறை செயலர் உத்தரவிட்டு இருந்தார்.

    திருப்பூர் நெருப்பெரிச்சலில் ஜாயின்ட்-1 மற்றும் 2, தொட்டிபாளையம் சார் - பதிவாளர் அலுவலகங்கள் ஒருங்கிணைந்துள்ளது. இதுதவிர்த்து நல்லூர், அவிநாசி, பல்லடம், குன்னத்தூர், ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், கணியூர், உடுமலை, கோமங்கலம் என 15 அலுவலகங்கள் மூலம் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு அலுவலகத்திலும், பாதிக்கு பாதி மட்டும் டோக்கன் பதிவாகியிருந்தது. பல்லடம், அவிநாசி, உடுமலை ஆகிய இடங்களில் 100க்கு மேல் பத்திரங்கள் பதிவாயின. ஆயுத பூஜை முடிந்தநிலையில் பத்திரப்பதிவு களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்ட பதிவாளர் லிங்கேஸ்வரன் கூறுகையில், வரும் முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கை எதிர்பார்க்கிறோம்.

    சர்வர் பிரச்னை காரணமாக பதிவு பணி சற்று தாமதம் ஆனது என்றார்.

    • பாலிசி பத்திரம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
    • ரூ.1 லட்சத்திற்கு மேல் பாலிசி பிரிமியம் செலுத்தி திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் உத்தரவின் பேரில் சீர்காழி தலைமை அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு முகாம் சீர்காழி தலைமை அஞ்சலத அதிகாரி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தனியார் தொலைகாட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சீர்காழியை சேர்ந்த சகோதரிகள் அருணா மற்றும் அகிலா ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருந்தனர்.

    அவர்களுக்கு பாலிசி பத்திரம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.

    இத்திட்டத்தின் சிறப்பம்ச ங்களை அஞ்சல் ஊழியர்கள் விளக்க உரையாற்றினர்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டின் தேவையையும்,முக்கிய அம்சங்களையும் அருணா மற்றும் அகிலா இருவரும் எடுத்துரைத்தனர்.

    எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அன்று மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக பாலிசி பிரிமியம் செலுத்தி இந்த திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு மயிலாடுதுறை கோட்ட கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் அனைத்து பொதுமக்களும் சேர்ந்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • உரிய முத்திரை தீர்வை-கட்டணத்துடன் பத்திரம் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்ட சார்பதி வாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    மதுரை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு பதிவு மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 26 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படு கின்றன. நடப்பு 2023-24 நிதி ஆண்டில் மதுரை வடக்கு பதிவு மாவட்டத்திற்கு ரூ.478 கோடி, தெற்கு மாவட்டத்திற்கு ரூ.57 ஆயிரத்து 125 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதில் இந்த மாதம் வரை மதுரை வடக்கு மாவட்டத்தில் ரூ.139.29 கோடியும், தெற்கு மாவட்டத்தில் ரூ.14 ஆயரத்து 159 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அலு வலர்கள் தங்களது இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவல கங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

    சார் பதிவாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் பதிவு தாரர்கள் சொத்து மதிப்பினை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதில் அரசு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதி வாளர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துணை பதிவுத்துறை தலைவர் ரவீந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 54 ஆண்டுகளுக்கும்மேலாக 124 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
    • இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் பெரிச்சிபாளையம் காலனியில் மாநகராட்சி சாா்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் சுமாா் 54 ஆண்டுகளுக்கும்மேலாக 124 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் மாநகராட்சிக்கு மாதம் ரூ.10 வாடகையாக செலுத்திவந்த நிலையில் தற்போது ரூ.500 வாடகை செலுத்தி வருகின்றனா்.

    இந்நிலையில் பெரிச்சிபாளையம் காலனி குடியிருப்புக்களை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனிடம் மனுக் கொடுத்திருந்தனா்.

    இதனடிப்படையில் அப்பகுதியில் கே.சுப்பராயன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவா்கள் குடியிருந்து வருவதால் அவா்களது பெயரிலேயே பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மேயா், மாநகராட்சி ஆணையரிடம் பேசியுள்ளதாகவும், தமிழக முதல்வரை சந்தித்து பட்டா வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அப்பகுதி பொதுமக்களிடம் உறுதியளித்தாா்.

    ஆய்வின்போது மாநகராட்சி துணைமேயா் பாலசுப்பிரமணியம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் முத்துகண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • எங்கள் நிறுவனத்தில் வாங்கிய கடனை கொடுக்காததால் அவரை கொலை செய்யப்போகிறோம்.
    • நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்பு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    அப்போது தஞ்சை மாவட்டம் குளிச்சப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி கார்த்திகா (வயது 31 ). இவர் தனது 3 வயது பெண் குழந்தையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

    எனது கணவர் விஜயராகவன் குடும்ப வறுமை காரணமாக மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஆனால் பணி செய்த நாட்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. கடந்த 5-ம் தேதி எனது மாமியாருக்கு அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு போன் வந்தது.

    அதில் விஜயராகவன் எங்களது நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார்.

    கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரை கொலை செய்யப் போகிறோம் என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தனர்.

    மறுநாளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயராகவனை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.70 லட்சம் ரொக்க பணம் வேண்டும் எனக்கூறி மிரட்டினர். அந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் நாங்கள் வசிக்கும் இடத்தை அந்த நிறுவனத்தில் உள்ள ஒருவருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டினர். இதனால் இந்த நிறுவனத்தில் உள்ள ஒருவர் எங்களிடம் இருந்து

    ரூ. 5 லட்சம் வாங்கி சென்றார். எனது கணவரை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுகின்றனர் ‌‌ . நான் என் கை குழந்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

    இதனால் எந்த கணவரை அந்த நிறுவனத்திலிருந்து பத்திரமாக மீட்டு தர வேண்டும். இவ்வாறு கார்த்திகா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

    ×