search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரிச்சிபாளையம் காலனி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை
    X

    பெரிச்சிபாளையம் காலனி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை

    • 54 ஆண்டுகளுக்கும்மேலாக 124 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
    • இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் பெரிச்சிபாளையம் காலனியில் மாநகராட்சி சாா்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் சுமாா் 54 ஆண்டுகளுக்கும்மேலாக 124 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் மாநகராட்சிக்கு மாதம் ரூ.10 வாடகையாக செலுத்திவந்த நிலையில் தற்போது ரூ.500 வாடகை செலுத்தி வருகின்றனா்.

    இந்நிலையில் பெரிச்சிபாளையம் காலனி குடியிருப்புக்களை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனிடம் மனுக் கொடுத்திருந்தனா்.

    இதனடிப்படையில் அப்பகுதியில் கே.சுப்பராயன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவா்கள் குடியிருந்து வருவதால் அவா்களது பெயரிலேயே பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மேயா், மாநகராட்சி ஆணையரிடம் பேசியுள்ளதாகவும், தமிழக முதல்வரை சந்தித்து பட்டா வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அப்பகுதி பொதுமக்களிடம் உறுதியளித்தாா்.

    ஆய்வின்போது மாநகராட்சி துணைமேயா் பாலசுப்பிரமணியம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் முத்துகண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×