search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யா வைகுண்டர்"

    • அன்பு கொடி மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.
    • ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு நாராயண சாமி கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 3 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 5 மணிக்கு பணிவிடை போன்றவை நடந்தது.

    மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். அப்போது அய்யாவின் அன்பு கொடி மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

    இரவு 10 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஊர் தலைவர் எம். தங்ககிருஷ்ணன் தலைமையில், ஊர் நிர்வாகிகள், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள், ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • குரு பால ஜனாதிபதி பக்தர்கள் இடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
    • அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அய்யாவழி பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    இதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்னதர்மம் போன்றவை நடந்தது. குரு பால ஜனாதிபதி பக்தர்கள் இடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இரவு 7 மணிக்கு பிச்சிப் பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை ேசர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • இன்று இரவு சுவாமிக்கு அன்னம் நியமித்தலும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
    • நாளை சுவாமி வீதி உலா, தர்மம் வழங்குதல் நடக்கிறது.

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கீழக்கட்டளை ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் தொடக்கமாக காலை 11 மணிக்கு முட்டப்பதியில் இருந்து பதம் எடுத்து வருதல் நிகழ்வும், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், தொடர்ந்து 2 மணிக்கு உம்பான் நியமித்தலும் நடக்கிறது.

    இதையடுத்து இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அன்னம் நியமித்தலும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10 மணிக்கு நாராயண சுவாமி பூ வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

    தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு சுவாமிக்கு திருப்பணிவிடையும், பால் அன்னம் வைத்தலும் நடைபெறுகிறது. பின்னர் மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருப்பணிவிடையும், தொடர்ந்து 2 மணிக்கு மேல் சுவாமி வீதி உலாவும், பின்னர் தர்மம் வழங்குதலும் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கீழக்கட்டளை ஊர் பொதுமக்கள் செய்து உள்ளார்கள்.

    • 23-ந் தேதி கலி வேட்டை நடக்கிறது.
    • 26-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா நேற்று தொடங்கியது.

    இதனையொட்டி நேற்று திருக்கொடியேற்றம் நடந்தது. இந்த விழா 26-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. தினமும் பணிவிடையும், உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், அன்னதர்மமும், அய்யா வாகனத்தில் பவனி வருதல், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    18-ந் தேதி காலை 9 மணிக்கு கோலப்போட்டி நடக்கிறது. இரவு 8 மணிக்கு கோலப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தொழில் அதிபர் கே.ராஜலிங்கம் பரிசு வழங்குகிறார்.

    23-ந் தேதி மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.

    26-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செம்பவள பஞ்சவர்ண தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், நண்பகல் 1 மணிக்கு பணிவிடையும், பிற்பகல் 3 மணிக்கு ஆஞ்சநேயர் திருத்தேர் முன்னே செல்ல, டாக்டர் எஸ்.லெட்சுமணனால் தொடங்கப்பட்ட செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    அப்போது கோவில்விளை சந்திப்பில் அன்னதர்மமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தேர் கோவில் முன் வந்து சேரும். அதைத்தொடர்ந்து அன்னதர்மமும், வாண வேடிக்கையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 2 மணிக்கு கொடியிறக்கமும், இனிப்பு வழங்குதலும் நடைபெறுகிறது.

    திருத்தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் எம்.தங்ககிருஷ்ணன், உப தலைவர் ஏ.சந்திரசேகர், செயலாளர் பி.துரைச்சாமி, இணைச்செயலாளர் ஆர்.சிவசுப்பிரமணியன், பொருளாளர் கே.உதயகுமார், துணைப்பொருளாளர் பி.ராமகிருஷ்ணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் இ.கிருஷ்ணமணி, எஸ்.நாராயணபெருமாள், ஜி.மணிகண்டன், எஸ்.ஸ்ரீதர், எஸ்.நாராயணமணி, ஆர்.ராஜேஸ்வரன், ஆர்.சுரேந்திரன், டி.தங்கலிங்கம் மற்றும் ஊர் மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • திருவிழா நாளை தொடங்கி 26-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • 26-ந்தேதி செம்பவள பஞ்சவர்ண தேரோட்டம் நடைபெறுகிறது.

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு பகுதியில் ஸ்ரீமன் நாராயண சாமி கோவில் உள்ளது. இங்கு ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண தேர் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    நாளை அதிகாலை 4.30 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு அன்னதர்மமும், பகல் 12 மணிக்கு பணிவிடையும், உச்சிப் படிப்பும், நாதஸ்வர கச்சேரியும், மாலை 4 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், அய்யா வாகனத்தில் பவனி வருதலும், அன்ன தர்மமும், இரவு 8.30 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    தினமும் பணிவிடையும், உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், அன்னதர்மமும், அய்யா வாகனத்தில் பவனி வருதல், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    18-ந் தேதி காலை 9 மணிக்கு கோலப்போட்டி நடக்கிறது. இரவு 8 மணிக்கு கோலப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தொழில் அதிபர் கே.ராஜலிங்கம் பரிசு வழங்குகிறார்.

    23-ந் தேதி மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தந்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.

    26-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செம்பவள பஞ்சவர்ண தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், நண்பகல் 1 மணிக்கு பணிவிடையும், பிற்பகல் 3 மணிக்கு ஆஞ்சநேயர் திருத்தேர் முன்னே செல்ல, டாக்டர் எஸ்.லெட்சுமணனால் தொடங்கப்பட்ட செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    அப்போது கோவில்விளை சந்திப்பில் அன்னதர்மமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தேர் கோவில் முன் வந்து சேரும். அதைத்தொடர்ந்து அன்னதர்மமும், வாண வேடிக்கையும் நடக்கிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 2 மணிக்கு கொடியிறக்கமும், இனிப்பு வழங்குதலும் நடைபெறுகிறது.

    திருத்தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் எம்.தங்ககிருஷ்ணன், உப தலைவர் ஏ.சந்திரசேகர், செயலாளர் பி.துரைச்சாமி, இணைச்செயலாளர் ஆர்.சிவசுப்பிரமணியன், பொருளாளர் கே.உதயகுமார், துணைப்பொருளாளர் பி.ராமகிருஷ்ணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் இ.கிருஷ்ணமணி, எஸ்.நாராயணபெருமாள், ஜி.மணிகண்டன், எஸ்.ஸ்ரீதர், எஸ்.நாராயணமணி, ஆர்.ராஜேஸ்வரன், ஆர்.சுரேந்திரன், டி.தங்கலிங்கம் மற்றும் ஊர் மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது
    • இன்று கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான நேற்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறத்தல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    விழாவில் மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவி உடை அணிந்த அய்யாவழி பக்தர்கள், 'அய்யா சிவ சிவ அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தலைமைப்பதியின் முன்பு இருந்து புறப்பட்ட தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வந்த போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக வைத்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இருந்து சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் நேற்று இரவு 7 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர்.
    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்று அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல் நிகழ்ச்சியும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு வாகன பவனியும், மதியம் 1 மணிக்கு உச்சிப்படிப்பும், சிறப்பு பணிவிடையும், அன்னதானமும் நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து முத்திரி கினற்றங்கரையில் 5 முறை சுற்றியபடி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார்.

    நள்ளிரவு 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வடக்கு வாசலில் தவக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து 5-ந்தேதி அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும், இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு, மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    • 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • திருவிழா நாட்களில் 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்று நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், அதனைத்தொடர்ந்து கொடிபட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமைப்பதியை சுற்றிலும் வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜ வேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனியும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும், அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைபதி வளாகத்தில் காலை, மதியம் இரவு என 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • 5-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • 2-ந் தேதி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு வைகாசி திருவிழா 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    26-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருவதும் நடக்கிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்டசாமி பரங்கி நாற்காலியிலும், 3-ம் நாள் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும்,. 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்திலும், 6-ம் நாள் கற்பக வாகனத்திலும் 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருடவாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஜூன் மாதம் 2-ந் தேதி 8-ம் நாள் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

    9-ம் நாள் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) 11-ம் நாள் திருவிழாவன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை, பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    • திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 30-ந்தேதி பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    ஆற்றூர் புளிமூடு அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் திருஏடுவாசிப்பு திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதைெயாட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5.45 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மாலை 4.15 மணிக்கு பணிவிடை, 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8.30 மணிக்கு உகப்படிப்பு, 9 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பள்ளியுணர்த்தல், மாலை 4.15 மணிக்கு பணிவிடை, 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8.30 மணிக்கு உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 8-ம் நாளான 28-ந்தேதி இரவு 8 மணிக்கு சுருள் நியமித்தல், 8.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, இரவு 10 மணிக்கு உகப்படிப்பு, 11 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது.

    விழாவின் இறுதிநாளான 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 4.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, இரவு 9.30 மணிக்கு உகப்படிப்பு, 10 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • இன்று அய்யா தாமரைப்பூ வாகன பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 21-ந்தேதி கலிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    அய்யா வைகுண்டசாமியின் ஐம்பதிகளில் அகிலத்திரட்டு அம்மானைத்தந்த மூலப்பதியான தாமரைகுளம் பதியில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு பதியின் தலைமை குரு ராஜசேகரன் திருவிழா கொடியை ஏற்றினார். 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகன பவனி, கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சி, பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி, நண்பகல் அய்யாவுக்கு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, இரவு 7 மணிக்கு அய்யா பூஞ்சப்பர வாகனத்தில் பவனி, அன்னதர்மம் நடந்தது. 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை) அய்யா தாமரைப்பூ வாகன பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடைகள், அன்னதர்மங்கள், வாகன பவனிகள் நடக்கிறது.

    விழாவில் 21-ந்தேதி இரவு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 24-ந்தேதி காலையில் பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம், மதியம் 2 மணிக்கு சமபந்தி விருந்து, நள்ளிரவு 12 மணிக்கு அய்யா நந்திவாகன பவனி, 1 மணிக்கு கொடி இறக்குதல் ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பதியின் தக்கார் மற்றும் குருபரம்பரையினர் செய்து வருகிறார்கள்.

    • முத்திரி பதம் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு முத்திரி பதம் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து திருவிளக்கு ஏற்றப்பட்டு 5 மணிக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றது. 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வாகன பவனி முடிந்தவுடன் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அய்யாவுக்கு பூ, பழம், தேங்காய் பன்னீர் மற்றும் பல தரப்பட்ட பழ வகைகளை சுருள்களாக வைத்து வழிபட்டனர். குருமார்கள் ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த் ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கினர். குரு பால ஜனாதிபதி தமிழ் புத்தாண்டு வாழ்த்துரை வழங்கினார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் பள்ளி அலங்காரம் மற்றும் பணி விடைகளை செய்திருந்தனர்.

    தமிழ் புத்தாண்டை யொட்டி அய்யா வைகுண் டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ் புத்தாண்டையொட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட் டங்களை சேர்ந்த திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    ×