search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாமரைகுளம் பதியில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    தாமரைகுளம் பதியில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • இன்று அய்யா தாமரைப்பூ வாகன பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 21-ந்தேதி கலிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    அய்யா வைகுண்டசாமியின் ஐம்பதிகளில் அகிலத்திரட்டு அம்மானைத்தந்த மூலப்பதியான தாமரைகுளம் பதியில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு பதியின் தலைமை குரு ராஜசேகரன் திருவிழா கொடியை ஏற்றினார். 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகன பவனி, கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சி, பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி, நண்பகல் அய்யாவுக்கு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, இரவு 7 மணிக்கு அய்யா பூஞ்சப்பர வாகனத்தில் பவனி, அன்னதர்மம் நடந்தது. 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை) அய்யா தாமரைப்பூ வாகன பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடைகள், அன்னதர்மங்கள், வாகன பவனிகள் நடக்கிறது.

    விழாவில் 21-ந்தேதி இரவு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 24-ந்தேதி காலையில் பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம், மதியம் 2 மணிக்கு சமபந்தி விருந்து, நள்ளிரவு 12 மணிக்கு அய்யா நந்திவாகன பவனி, 1 மணிக்கு கொடி இறக்குதல் ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பதியின் தக்கார் மற்றும் குருபரம்பரையினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×