search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் வழிபாடு"

    • தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    • மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    நீல நிற சேலை அணிந்தும் தீபமிடலாம்.

    அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது.

    மற்ற நாட்களில் நீலநிற சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும்.

    பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.

    சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.

    சிவப்பு சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும்.

    பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.

    வெள்ளை சேலையை சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம்.

    வெள்ளை சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.

    வெள்ளை சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.

    திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும்

    திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம்.

    அவ்வாறு வழிபடுகையில் இன்னென்ன தெய்வங்களுக்கு இன்னென்ன தீபங்கள்

    ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.

    தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

    • ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நடந்தது
    • கோவில் சன்னதி, கடற்கரை, பொங்கலிடும் பகுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் பக்தர்களின் கூட்டம் நிறைந்து காணப்படும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டிற்கு வந்து கடலில் தீர்த்தமாடி பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.

    இந்நிலையில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை முதல் தினமும் மண்டைக்காட்டில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் காலை முதலே மண்டைக்காட்டில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் தீர்த்தமாடி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனால் கோவில் சன்னதி, கடற்கரை, பொங்கலிடும் பகுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    உச்சக்கால பூஜையின்போது பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். தக்கலை, அழகியமண்டபம் மற்றும் திங்கள்நகருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தது.

    • ஆடி அழைக்கும் தை துரத்தும் என்ற ஒரு பழமொழி உள்ளது.
    • வேம்பும், மஞ்சளும் அம்மனின் அம்சங்கள் என கருதப்படுகின்றன.

    ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மனை வழிபாடு செய்யும் பொது மக்களுக்கு திருவிழா மனநிலை ஏற்பட்டு விடுகிறது. அதற்கு ஏற்றார் போல ஆடி மாதத்தில் ஏராளமான திருவிழாக்கள் அம்மனுடைய பெயரிலேயே அமைந்திருக்கின்றன. திருவிழா மாதமான ஆடியில் திருமணம் போன்ற சுப காரியங்களை பொதுவாக செய்வதில்லை. ஏன் என்று கேட்டால் மனிதர்களுடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாக சொல்லப்படுகிறது.

    அந்த வகையில் ஆடி மாதம் என்பது தேவர்களுக்கான மாலை வேலையாக குறிப்பிடப்படுகிறது. அதனால் அது சுபகாரியங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதால் திருமணம் போன்ற விஷயங்களை ஆடி மாதத்தில் பொதுவாக செய்யப்படுவதில்லை.

    பூமியினுடைய சுற்றுவட்ட பாதை வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி மாற்றிப் பயணிக்கும் காலம் ஆடி மாதத்தின் முதல் நாளாகும். அதை தட்சிணாயன புண்ணிய காலம் என்று சொல்வார்கள். அதன் அடிப்படையில் ஆடி மாதத்தில் பண்பாட்டு ரீதியாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப பல்வேறு பழமொழிகள் இருக்கின்றன.

    ஆடி அழைக்கும் தை துரத்தும் என்ற ஒரு பழமொழி உள்ளது. அதாவது ஆடி மாதத்தில் அவரவர்களது குடும்ப முன்னோர்களை அழைத்து வரக்கூடிய மாதமாகவும், தை முதல் நாளான உத்திராயண புண்ணிய காலத்தில் அவர்களை அவர்களுடைய உலகத்திற்கு அனுப்பி வைக்கும் நாளாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலத்தில், பகல் பொழுது குறைவாகவும், இரவுப் பொழுது நீண்டும் இருக்கும்.

    மேலும் தேவர்களுக்கு உரிய மாதமான ஆடியில் மழைக்காலம் தொடங்கிவிடும். வேளாண் பணிகளில் மக்கள் ஈடுபடும் காரணத்தால் வீடுகளில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடந்தால் அதன் காரணமாக வேளாண்மை பணிகளுக்கு தடை ஏற்படும். அதனால், ஆடி மாதத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகளை வீடுகளில் செய்யாமல், கோவில் திருவிழாக்களை நடத்தி ஊர் கூடி பொது நலனுக்காக வழிபாடு செய்தார்கள்.

    காற்றடிக்கும் மாதமான ஆடியில் பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம் பழம், கூழ் ஆகியவை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இவைகளை உபயோகப்படுத்துவதில், அறிவியல் ரீதியான காரணம் உண்டு.

    இந்த நாட்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழை சாப்பிடும் பொழுது, வெப்பம் குறைத்து, உடலை சீரான நிலையில் வைக்கும். எலுமிச்சம்பழத்திற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் சக்தி உண்டு. வேப்பிலை தீய சக்திகளையும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் மருத்துவ குணம் கொண்டது.

    வேம்பும், மஞ்சளும் அம்மனின் அம்சங்கள் என கருதப்படுகின்றன. ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழியும் உண்டு. ஆடி, காற்று காலமாகும். எனவே ஆடி காற்று வழியாக தொற்று நோய்கள் பரவலாம். அதைத் தடுப்பதற்காகவே ஆடி மாதத்தில் வீட்டின் முன் வேப்பிலை கட்டி வைப்பதும், வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பதும் வழக்கமாக இருந்தன. இவை இரண்டும் பெரிய கிருமி நாசினிகள் என்பதால் கிருமிகள் வீட்டில் வருவது தடுக்கப்படும். மேலும், ஆடி மாதத்தில் மட்டுமாவது சுமங்கலி பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது.

    ஆடி முதல் நாள் ஆடிப்பண்டிகையைத் தொடர்ந்து, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக பஞ்சமி, ஆடிப்பெருக்கு, வரலக்ஷ்மி விரதம், ஆடித்தபசு, ஹயக்ரீவர் ஜெயந்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஆடிக்கிருத்திகை என்று பல சுப நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

    பெண்கள், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதம் இருந்தும், வேப்பிலை ஆடை அணிந்தும், அலகு குத்தியும், பூ மிதி (தீ மிதி) விழா எடுத்தும் தங்களின் கோரிக்கையை அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    • ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
    • ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக் காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் கூழும் அம்மனுக்கு விருப்பமானவைகளே. இவை உடல் நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப்பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச்சீர் செய்து மாப்பிள்ளை - பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

    ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத் தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

    ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக்குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.

    ஆடிச் செவ்வாய்

    ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆடிச் செவ்வாய் ஒளவையாருக்குச் செய்யும் விரத பூஜையாகும். ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

    பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில்லாமல் செய்யும் கொழுக்கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாதமாகும். இதைப் பெண்கள் மட்டும்தான் செய்வார்கள். அன்று இரவு 10.00 மணியளவில் வீட்டில் உள்ள மூத்த வயதான பெண் தலைமையில் அத்தெருவில் உள்ள பெண்கள் அவர் வீட்டில் கூடுவார்கள். அதற்கு முன் ஆண்கள் - சிற ஆண்பிள்ளைகள் உட்பட வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, பிரசாதம் சாப்பிடவோ கூடாது.

    பின் பூஜை நடைபெறும். ஒளவையார் கதையையும் அம்மன் கதையையும் வயதான பெண்மணி கூறுவார். சிறு பெண் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் கலந்து கொண்டு பூஜை முடிப்பார்கள். பின் கொழுக்கட்டைகளை மீதமின்றி சாப்பிட்டு முடித்து, வீட்டைத் தூய்மைப்படுத்திய பின்தான் காலையில் ஆண்கள் அங்கு வர வேண்டும். இதுதான் ஒளவை நோன்பு.

    ஆடி வெள்ளி

    அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

    ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும். சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது.

    பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

    • ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வழிபடுவது மிக நல்லது.
    • அம்மை போன்ற நோயிக்கு வெப்ப மரம் மருந்தாக நம்மில் இருந்து காப்பது அனைவரும் அறிந்த உண்மை

    தை மாதம் முதல் தேதியில் இருந்து ஆனி மாதம் வரையில் உத்தராயனப் புண்ணிய காலம் என்றும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையில் தட்சிணாயனம் புண்ணிய காலம் என்றும் வகுக்கப்பட்டது நமது சிதார் பெருமக்களால்...!!

    தட்சிணாயனம் ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் ஆகும் இந்த மாதத்தில் சூரியனிடம் இருந்து சூட்சும சக்திகள் அதிகமாக வெளிப்படும் பிராண வாயு பூமிக்கு அதிகமாகக் கிடைக்கும்; உயிர்களுக்கு முக்கிய தேவையான ஆதாரசக்தியை அதிகமாக தந்து நம்மை காக்கும் மாதம் ஆகும். அதனால் அந்த சூரிய உதயத்தில் நாம் இந்த கதிர் வீச்சுகளை நமக்கு நமது உடலில் எடுத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தி வைத்தார்கள் அப்படி செல்வதன் மூலம் அதன் கதிர்கள் நம்மில் சென்று நம்மை தூய்மைபடுத்தும் நமது கெட்ட சக்திகளை அழிக்கும்....!!

    ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் சர்வேஸ்வரனை பாம்பாக மாறி கைலாயத்தில் நுழைந்து உமையவள் வேடம் தரித்து சிவனை அடைய முனைந்தபோது அவளின் கசப்பு உணர்வை உணர்ந்த இறைவன் ஆடியை சூலாயுதத்தால் அழிக்க முற்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட தீ பிழம்பு ஆடியை புனிதம் அடைய வைத்தது இருந்து சிவன் அவருக்கு ஒரு சாபம் குடுத்து வரம் ஒன்று குடுத்தார் கசப்பான மரமாக பூலோகத்தில் அவதரிக்கவும் அம்மரத்தில் ஆதிபராசக்தி வசம் செய்வார் என்றும் ஆடி வெப்பம் மரமாக மாறி அம்மரத்தை அம்மனின் அம்சம் கொண்டு வழிபடுவர்கள் அனைவருக்கும் நாக தோஷம் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட பாவ வினைகள் தீர்த்த அருள் புரிய வரம் தந்தார் இவ்வாறு மக்கள் இந்த காலத்தில் அம்மன் வழிபாடு செய்ய சிதார் பெருமக்கள் வழிவகுத்தார்கள் என்கிறது சாஸ்திரங்கள்....!!!

    அம்மை போன்ற நோயிக்கு வெப்ப மரம் மருந்தாக நம்மில் இருந்து காப்பது அனைவரும் அறிந்த உண்மை ஆனால் இன்று அதை மருந்தாக்கி கொண்டு மாத்திரைகளாக தருவதால் நாம் அதற்க்கு மதிப்பு தருவதில்லை....!!

    ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் அனைவராலும் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வழிபடுவது மிக நல்லது ஆடிக் கிருத்திகை முருகப்பெருமானுக்குரிய திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது அதே போல ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலையில் பிதுர் பூஜைகளுக்கான பூஜை செய்வது அவசியம் என்று ஆன்மீக நூல்கள் நமக்கு எடுத்துரைகிறது.

    ஆடி மாத ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் அரசமரத்தைச் சுற்றி வலம் வந்து நாம் வழிபாடு செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும் பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான கோளாறுகள் நீங்கும் ஆண்களுக்கு சுக்ல விருத்தி ஏற்ப்படும்.

    ஆடி மாதப் பௌர்ணமியை வியாச பூஜை என்று சிறப்பிக்கபடுகிறது அந்நாளில் நமக்கு கல்வி சொல்லி தந்த ஆசானை நினைத்து வழிபட்டால் கல்வி மற்றும் பதவிகளில் சிறந்து நம் வாழ்வில் நிலை கொள்ள முடியும் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் கருடன் பகவான் அதனால் அந்த நன்னாளில் சுவாதி நட்சத்திர நாளில் வானில் பறக்கும் கருடனை தரிசிப்பது மிக நல்லது.....!

    ஆடி மாதத்தில் நடைபெறும் தெய்வ வழிபாடுகள் மற்றும் விழாக்களில் கலந்து கொண்டு வாழ்வில் வசந்தம் மற்றும் இன்பம் நிலைத்து இறைநிலையில் கலப்போம்....!!!

    • பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடிஅம்மன் தொகுப்பு சுற்றுலா கடந்த 17-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.
    • இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு முறையில் தரிசனம் செய்யும்வகையில் உடனடி விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலி ன்படி சுற்றுலாத்துறை மேம்படுத்தபல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடிஅம்மன் தொகுப்பு சுற்றுலா கடந்த 17-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.

    தஞ்சை வராகிஅம்மன், பங்காரு காமாட்சி அம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, பட்டீஸ்வரம் துர்கை அம்மன் , வலங்கைமான் பாடைகட்டி மகாமாரியம்மன், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கும்பகோணம் ஆதி கும்பே ஸ்வரர்ம ங்களாம்பிகை , கும்பகோணம் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மகாமக குளம்,தாராசுரம் ஐராதீஸ்வரர் (பெரிய நாயகி அம்மன்) ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வ கையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு முறையில் தரிசனம் செய்யும்வகையில் உடனடிவிரைவுதரிசனம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. இச்சுற்றுலா விற்கான கட்டணம் ரூ.900 ஆகும்.

    எனவே சுற்றுலா பயணிகள் ஆன்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 9176995832, 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா த்துறை அலுவலர்நெல்சன் தெரிவித்துள்ளார்.

    ×