search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karumariyamman"

    • ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
    • பூர நட்சத்திரம் - கலைகளில் வல்லமை பெறலாம்.

    திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:

    ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    மாசி மாத அமாவாசை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    மாசி பவுர்ணமி - எதிரிகளை வெல்லலாம்.

    தை மாத ஞாயிற்றுக்கிழமை - தீய சக்திகள் விலகும்.

    தை மாத பவுர்ணமி - பல புனித நதிகளில் நீராடிய பலன்.

    தை மாத அமாவாசை - நோய்கள் குணமாகும்.

    பூச நட்சத்திர தினம் - அரிய செல்வம் சேரும்.

    பூர நட்சத்திரம் - கலைகளில் வல்லமை பெறலாம்.

    சித்திரை மாத பவுர்ணமி - நினைத்தது நிறைவேறும்.

    புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் - புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.

    நவராத்திரி நாட்கள் - பிரார்த்தனைகள் நிறைவேறும்

    • கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகரும் காட்சி தருகிறார்கள்.
    • மூன்றாம் பிராகாரத்தில் இருக்கும் துர்க்கை வெகு லட்சணம்.

    கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகரும் வெள்ளிக் கவசங்கள் துலங்கக் காட்சி தருகிறார்கள்.

    காவலுக்கு துவார பாலகிகள்.

    அர்த்த மண்டபச் சுற்றுச்சுவரில் கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, சதுர்முகி, சாமூண்டீஸ்வரி.

    முதல் பிராகாரத்தில் லக்ஷ்மி, பாலவிநாயகர், ஏகாம்பரேசுவரர் - காமாட்சி, முருகன் - வள்ளி - தெய்வானை, சரஸ்வதி.

    இரண்டாவது பிராகாரத்தில் உற்சவ நாயகி. அடுத்திருக்கும் சந்நிதியில் வேல்கண்ணி அம்மன்.

    அடுத்து, தமிழில் துதித்த குறுமுனி அகத்தியனுக்கோர் சந்நிதி. அதையடுத்து உற்சவ ஆறுமுகன்.

    வடகிழக்கு மூலையில் வேங்கடாசலபதிக்கென ஒரு சிறுகோவில்.

    மகாலக்ஷ்மி தாயாரும் கருடாழ்வாரும் காட்சி தரும் இந்தக் கோவிலில் உற்சவமூர்த்திகளாக,

    ஸ்ரீனிவாசப்பொருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ராமானுஜர், சக்கரத்தாழ்வார்.

    பின்னும் ராம, லக்ஷ்மணர், சீதாதேவி, ஆஞ்சநேயன், ஆண்டாள்.

    அந்தக் கோவிலுக்கு வெளியே அரசமரத்தடியில் வலம்புரி விநாயகர்.

    தென்கிழக்கில் நவக்கிரகங்களுக்கென ஒரு சந்நிதி.

    மூன்றாம் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு ஒரு தனிக்கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு ஒரு தனிக் கோவில்.

    கல்வி நல்கும் நீலா சரஸ்வதி எனும் அன்னையை மடியில் தாங்கும் உச்சிஷ்ட கணபதிக்கென ஒரு கோவில்.

    பிரத்தியங்கரா தேவிக்கென பிறிதோர் கோவில். சப்தமாதர்கள், சுப்ரமணியர், பைரவர்.

    மூன்றாம் பிராகாரத்தில் இருக்கும் துர்க்கை வெகு லட்சணம்.

    உக்கிர காளியாக இருந்த கருமாரியின் ஆலயத்தில் சங்கராச்சாரியார் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்து அன்னையின் உக்கிரம் தணித்திருக்கிறார்.

    உமாபார்வதிக்கான மந்திரங்களை உச்சரித்து சாந்த சொரூபீயாக்கியிருக்கிறார்.

    இன்னும் அன்னை உமையவளுக்கான மந்திரங்களால் உபாசிக்கப்படுகிறாள்.

    • புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
    • புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

    இன்றைக்கு கருமாரியம்மன் ஆலயத்துக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் அமைந்து இருக்கிறது.

    புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

    மஞ்சளும் குங்குமமும் துலங்கக் காட்சியளிக்கும் புற்றில் ஒரு திரிசூலம் எழுந்து நின்று,

    அன்னையை அடி பணிவோருக்கு அபயம் அளிக்கிறது.

    புற்றில் பாலையும் முட்டைக் கருவையும் இடைவிடாது சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள்.

    அன்னை காட்சி தரும் கர்ப்பக்கிருகத்தில் பதிவிளக்கு என்னும் அணையா விளக்கு, அது ஏற்றப்பட்ட நாளில்

    இருந்து எரிந்து கொண்டே இருக்கிறது.

    நெய் உண்டு எரியும் இந்த விளக்கின் சுடரொளியில், அன்னையின் இரு வடிவங்களும் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன.

    சிரசு மட்டும் காட்டும் உக்கிர நாரணியின் கண்கள் அல்லவரை அச்சப்படுத்துகின்றன.

    நல்லவருக்கு அபயமளிக்கின்றன.

    சிவை வடிவமான கருமாரி காண்போர் கருத்தைக் கவரும் விதத்தில் அழகுற காட்சி தருகிறாள்.

    மேல் வலதுகரத்தில் உடுக்கையும் பாம்பும். மேல் இடது கரத்தில் திருசூலம்.

    கீழ் வலது கரத்தில் கத்தி கீழ் இடதுகரத்தில் அமுத கலசம்!

    ஒரு காலத்தில் மண்டையோட்டு மாலை தவழ்ந்த அன்னையின் மார்பில், இப்போது எலுமிச்சை மாலை.

    உதட்டில் சிறு புன்னகை. கிழக்கு நோக்கும் கருமாரி! கண் மூடி வணங்கி நின்றால் உடலில் சிலிர்ப்பு ஓடுகிறது.

    மனதில் அமைதி நிலவுகிறது.

    • நல்லவர் தேவர். அல்லவர் அசுரர். அல்லவை அழித்து, நல்லவை காக்கும் பொறுப்பு ஆண்டவனுடையது.
    • தேவர்கள், தங்களுக்கு அபயம் அளிக்கப் புறப்பட்ட சக்தியை நெஞ்சாரப் போற்றித் துதித்தனர்.

    அசுரருக்கும் தேவருக்குமிடையே ஆதிகாலந்தொட்டே போர் நடந்து வருகிறது.

    நல்லவர் தேவர். அல்லவர் அசுரர். அல்லவை அழித்து, நல்லவை காக்கும் பொறுப்பு ஆண்டவனுடையது.

    அசுரர்களின் கை ஓங்கியிருந்த காலம் அது. தேவர்கள் தீரா துன்பத்தில் சிக்கிச் சிறுமைப்பட்டுக் கொண்டு இருந்தனர்.

    அவர்தம் குறைகேட்ட பரமசிவன், அசுரரின் ஆதிக்கம் அகற்றி, தேவரின் இடர் களைய எண்ணம் கொண்டார்.

    'அசுரரின் ஆதிக்கத்தை சக்தியால் மட்டுமே சமாளிக்க இயலும்' என்பதால் பரமசிவன், பார்வதியை நோக்கினார்.

    'உமையே... கருமாரியாகக் காட்சி தந்து, நீ ஆட்சி புரிய வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

    இந்த வெண் நீற்றைப் பெற்று சிவனும் சக்தியுமாக இருந்து ஐந்தொழிலையும் புரிந்தருள்க' என்று கூறி தன் மேனிச் சாம்பலை எடுத்து அவளிடம் நீட்டினார்.

    அன்னை சாம்பலைப் பெற்றாள். சிவனும் சக்தியுமாகத் தானே ஆகிக் காட்சி தந்தாள்.

    தேவர்கள், தங்களுக்கு அபயம் அளிக்கப் புறப்பட்ட சக்தியை நெஞ்சாரப் போற்றித் துதித்தனர்.

    அசுரரை அடக்க, அன்னை சக்தி கருநீல நிறத்தில் பயங்கரமான உக்கிர உருவம் எடுத்தாள்.

    திரிசூலம் ஒன்றைத் தன்முன் நாட்டினாள். அன்னையின் உக்கிரம் தாங்காமல், அல்லல் விளைவித்த அசுரர்கள் அடங்கி ஒடுங்கினர்.

    உக்கிர சக்தியை மகாவிஷ்ணு சாந்தப்படுத்தி, 'கருமாரி.... உலக மக்கள் உய்வதற்கு உன் கடைக்கண் அருட்பார்வையே போதும்.

    தலை காட்டி, உடல் மறை...' என உள்ளன்போடு உரைத்தார்.

    கருமாரி புன்முறுவலுடன் தலைகாட்டி, தன்னிலை மறைத்தாள்.

    ஞாலத்து மக்கள் நாளும் வந்து வழிபட, எப்போதும் போல் ஓர் அழகிய வடிவமுடனும் எழுந்தருளினாள்.

    மகாவிஷ்ணு சாந்தப்படுத்திய கருமாரி உருவம் நாரணி (நாராயணனின் பெண் வடிவம்) என்றும் கிருஷ்ணமாரி என்றும் அழகிய வடிவம் சிவை என்றும் (சிவனின் பெண் வடிவம்) அறியப்பட்டது.

    காலத்துக்கு அப்பாற்பட்ட அகத்தியமுனிவர் அம்மையை இரட்டை உருவுடன் கூடிய இந்த நிலையில் கண்டு செந்தமிழால் போற்றித் துதித்தார்.

    அம்மை அகத்தியருக்குக் காட்சி தந்தது தை மாதத்தில்.

    பவுர்ணமி தினத்தில் பூச நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமையில், இந்த நாளே அன்னையின் அவதார தினமாகக் கருதப்படுகிறது.

    காட்சியளித்த கருமாரி அகத்தியரிடம் சொன்னாள்.

    'அகத்தியா, நீ வந்து வணங்கி வழிபடவே நான் காத்திருந்தேன். அசுரர் ஆணவம் அடங்கிவிட்டது.

    இனி நானும் பாம்பு உருக்கொண்டு புற்றில் அடங்கியிருக்கப் போகிறேன்.

    மறுபடி கலியுகத்தில் காட்சியளிப்பேன் கலியின் கொடுமையால் வாடும் மக்களுக்கு சாம்பலைக் கொண்டே சாந்தி அளிப்பேன்.

    அப்போது எனக்கு திருக்கோவிலும் தீர்த்தக் குளமும் அமையும்.

    பரிவாரக் கடவுளர்களும் பாங்குடனே அமைவர்.

    அன்னை உரைத்தபடியே அனைத்தும் நடந்தேறின.

    வேலங்காட்டில், வெள்ளை வேல மரத்தின் கீழ் பாம்புருவில் அன்னை, புற்றில் குடி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    அந்த இடத்தில் அவளுக்கோர் ஆலயம் எழுந்தது.

    • கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.
    • பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான்.

    கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.

    தன் தங்கை தேவகியை வசுதேவனுக்குக் கட்டிக் கொடுத்தான்.

    தங்கையை அவளது கணவனுடன் அனுப்பிவைக்கும் நேரத்தில் ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.

    'கம்சா, உன் தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லும்'

    'தன் தங்கையின் பிள்ளை தன்னைக் கொல்வதா?' என்று ஆத்திரமடைந்து தேவகியையும் வசுதேவனையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

    அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று வந்தான்.

    ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டன.

    தேவகியின் எட்டாவது கர்ப்பம்.

    அந்தக் கருவில் உதிக்க இருந்தவன் கண்ணன்.

    அதே சமயம், ஆயர்பாடியில் நந்த கோபனின் மனைவி யசோதையும் கருவுற்றிருந்தாள்.

    அவள் கருவில் குடி கொண்டிருந்தது மாயா எனும் சக்தி.

    தேவகிக்குக் குழந்தை பிறந்தது.

    இறைவனின் எண்ணப்படி தேவகியின் குழந்தை ஆயர்பாடி போய்ச் சேர்ந்தது.

    யசோதையின் குழந்தையான மாயா சக்தி சிறைக்கு இடம் மாறியது.

    அதன் பின்னரே குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்குத் தெரியவந்தது.

    குழந்தையைக் கொல்ல கம்சன் குதூகலத்துடன் வந்து சேர்ந்தான்.

    பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான்.

    பிள்ளை அல்லவா பிறக்கப்போகிறது என அசரீரி அறிவித்திருந்தது.

    இருந்தும் கம்சன், 'உன்னை விட்டாலும் தவறு. ஆதலால் எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்' என வானதிர சிரித்து வாளை ஓங்கினான் வெட்ட...

    அவனுக்கு மேல் ஆயிரம் மடங்கு அதிகமாகச் சிரித்து விண்ணில் தாவியது அந்தக் குழந்தை.

    'அடேய் ஆத்திரக்காரா! கரு மாறி வந்த என் கழுத்தை நெரிக்கப்பார்க்கும் கல்நெஞ்சக் கம்சா!

    உன்னை வதைக்க என் அண்ணன் ஆயர்பாடியிலிருந்து இடையனாக எட்டு வயதில் வருவான்! அதுவரை காத்திரு' என்று சொல்லி மறைந்தது.

    கரு மாறி விட்டதை உணர்ந்த கம்சன் கலக்கத்துடன் 'கருமாறி' என்றான்.

    அக்கணமே ஆகாயம், பூமி அனைத்தும் 'கருமாரி, கருமாரி' என்று அழைக்கத் தொடங்கின.

    இப்படித்தான் கருமாரி உருவானாள்.

    கம்சனின் கண்ணில் இருந்து மறைந்த அவள் கண்ணனிடம் சென்றாள்.

    தானெடுத்த ஒரு பிறவி இவ்வளவு விரைவில் முடிவுக்கு வந்துவிட்டதே என அண்ணனிடம் ஆதங்கப்பட்டாள்.

    'இல்லை, கருமாரி என்ற பெயருடன் நீ அகிலத்தை ஆட்சி செய்யப் போகிறாய்.

    நடக்கப் போவதைப் பொறுத்திருந்து பார்' என கண்ணன் கூறினான்.

    • திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது.
    • நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.

    திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது.

    இதனால் அந்த பகுதியை வேலக்காடு என்று அழைத்தனர்.

    அந்த வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது

    பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது.

    மெல்ல, மெல்ல கருமாரியின் புகழ் பரவியது.

    பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறிகேட்டு பலன் பெற்று சென்றனர்.

    கடந்த நூற்றாண்டில்தான் இந்த அற்புதம் நடந்தது.

    நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.

    இந்த கருமாரி யார்? நீண்ட நாட்களாக நாக வடிவில் மக்கள் அறியாதபடி இருந்ததற்கு என்ன காரணம்?

    அதற்கு ஒரு புராண கதை உள்ளது.

    அதைப்பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

    • தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    • மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    மஞ்சள் நிற சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    நீல நிற சேலை அணிந்தும் தீபமிடலாம்.

    அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது.

    மற்ற நாட்களில் நீலநிற சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும்.

    பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.

    சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.

    சிவப்பு சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும்.

    பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.

    வெள்ளை சேலையை சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம்.

    வெள்ளை சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும்.

    வெள்ளை சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.

    திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும்

    திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம்.

    அவ்வாறு வழிபடுகையில் இன்னென்ன தெய்வங்களுக்கு இன்னென்ன தீபங்கள்

    ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.

    தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

    ×