search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi Month"

    • ஆண்டு தோறும் ஆடிமாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழி விளந்திடசமுத்தி ரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு உற்சவம் கொடியேற்ற த்துடன் தொடங்கி நடந்து வருகிறது. உற்சவத்தின் நிறைவாக ஊஞ்சல்உற்ச வம் நடைபெற்றதுமுன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெ ற்றது. தொடர்ந்து ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரி ந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடிஅம்மன் தொகுப்பு சுற்றுலா கடந்த 17-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.
    • இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு முறையில் தரிசனம் செய்யும்வகையில் உடனடி விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலி ன்படி சுற்றுலாத்துறை மேம்படுத்தபல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடிஅம்மன் தொகுப்பு சுற்றுலா கடந்த 17-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.

    தஞ்சை வராகிஅம்மன், பங்காரு காமாட்சி அம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, பட்டீஸ்வரம் துர்கை அம்மன் , வலங்கைமான் பாடைகட்டி மகாமாரியம்மன், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கும்பகோணம் ஆதி கும்பே ஸ்வரர்ம ங்களாம்பிகை , கும்பகோணம் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மகாமக குளம்,தாராசுரம் ஐராதீஸ்வரர் (பெரிய நாயகி அம்மன்) ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வ கையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு முறையில் தரிசனம் செய்யும்வகையில் உடனடிவிரைவுதரிசனம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. இச்சுற்றுலா விற்கான கட்டணம் ரூ.900 ஆகும்.

    எனவே சுற்றுலா பயணிகள் ஆன்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 9176995832, 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா த்துறை அலுவலர்நெல்சன் தெரிவித்துள்ளார்.

    • ஆடி மாதத்தின் அனைத்து நாட்களிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
    • ஆடி முதல் செவ்வாயான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமானோர் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திண்டுக்கல்:

    ஆடி மாதத்தின் அனைத்து நாட்களிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிமற்றும் செவ்வாய்கிழமைகளில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தப்படும்.

    கடந்த வருடம் கொரோனா ஊரடங்கால் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் வாசற்படியிலேயே சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

    தற்போது வழிபாட்டு தலங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தினசரி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி முதல் செவ்வாயான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமானோர் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பல்வேறு குலதெய்வ கோவில்களிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திண்டுக்கல்:

    ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில், அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள வண்டிகருப்பணசாமி கோவிலில் ஆடிமாதம் முழுவதும் கிடாவெட்டி வழிபாடு நடத்துவது வழக்கம். புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வதும், தொழில் தொடங்குபவர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் வருடந்ேதாறும் ஆடிமாதத்தில் நடைபெறும்.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கால் இதுபோன்ற வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று வண்டிகருப்பணசாமி கோவிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கிடாவெட்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.

    இதனால் வெறிச்சோடி கிடந்த கோவில் வளாகம் இன்று பக்தர்களால் களைகட்டியது. இதேபோல பல்வேறு குலதெய்வ கோவில்களிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ×