search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youths arrest"

    பொன்னேரி பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி பரஸ்மால் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்.

    தேவம்பட்டில் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந்தேதி பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றபோது காட்டாவூர் சாலை அருகே 2 மர்ம நபர்கள் விஜயகுமாரை வழி மறித்தனர்.

    அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 3 பவுன் செயின் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சுப்பிரமணி, காட்டாவூர் குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    காரைக்கால் பகுதியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்து.
    காரைக்கால்:

    காரைக்கால் நகர் பகுதியைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் இரவு, தனது மனைவி தேவி பாக்கியம்மாள் மற்றும் மகன் அருணுடன்(வயது 8) காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்களில் வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது, மற்றொரு மோட்டார் சைக்களில் பின்புறம் வந்த 2 மர்ம நபர்கள், தேவி கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பி ஓடினர்.

    அப்போது, தேவி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் அலறினர். அதை கேட்டு சாலையில் சென்ற பொதுமக்கள், மர்ம நபர்களை விரட்டி பிடித்து, நகர போலீஸ் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அதில் ஒருவர் திருமலைராயன்பட்டினத்தைச்சேர்ந்த அஜித்குமார் (23) என்பதும், மற்றொருவர் காரைக்கால் டிராமா கொட்டகை பகுதியை சேர்ந்த விவேக் (23) என்பதும் தெரியவந்தது. இதில், விவேக், கடந்த சில மாதங்களாக திருமலைராயன்பட்டினம் மற்றும் தமிழகப்பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் பைக் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் பகுதிகளில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி. பர்வேஷ்குமார் உத்தரவின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் அரக்கோணம் உட்கோட்ட பகுதிகளில் இரவு பகல் முழுவதும் ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    போலீசார் சரியான முறையில் தங்களுக்கு இட்ட பணிகளை செய்கிறார்களா? என்று டி.எஸ்.பி.யும் அனைத்து பகுதிகளிலும் நேரில் சென்று கண்காணித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அரக்கோணம் தொல்சாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட டவுன் போலீசார் அங்கு நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கோவிந்தவாடி அகரத்தை சேர்ந்த அஜித்குமார்(20), லோகேஷ்(24), மற்றும் பள்ளூர் பகுதியை சேர்ந்த சரத்குமார்(22) என்றும் அவர்கள் பைக் திருடர்கள் என்றும் தெரிந்தது.

    அவர்கள் மறைத்து வைத்திருந்த 3 பைக்குகளும் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து டி.எஸ்.பி. குத்தாலிங்கம் கூறியதாவது:-

    புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. அவர்கள் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் இரவு பகல் முழுவதும் அனைவரும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடவேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருந்து தங்கள் கடமையை முழு மனதுடன் செய்ய வேண்டும் என்று கூறிய ஆலோசனைகளின் படி நாங்களும் கால நேரம் பாராமல் கடமையாற்றி வருகிறோம். எங்களுக்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகத்தை பிடித்து செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனபகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகம் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்களும், அரியவகை மூலிகைகளும் அதிகளவில் உள்ளன. தற்போது பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து வன விலங்குகள் வெளியேறி சாலையோரங்களில் சுற்றி வருகிறது. எனவே வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது. செல்பி, போட்டோ எடுக்கக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகத்தை பிடித்து செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றி விவரம் வருமாறு:-

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனப்பகுதியில் கணிசமான அளவு ராஜநாகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சேரம்பாடி பஜாரையொட்டிய கண்ணம்வயல் செல்லும் சாலையில் ஒரு மூங்கில் மரத்தில் ராஜநாகம் படுத்து இருந்தது. அதிக வி‌ஷத்தன்மை கொண்ட அந்த ராஜநாகத்தை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சிலர் பிடித்து துன்புறுத்தி செல்பி எடுத்து அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருந்தனர்.

    இதுபற்றி கூடலூர் வன அலுவலர் திலீப்புக்கு புகார் வந்தது. அவர் சேரம்பாடி வன சரகர் மனோகரனுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர் ராஜநாகத்துடன் செல்பி எடுத்தவர்கள் யார்? என்று விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் சேரம்பாடியை சேர்ந்த மணிகண்டன்(27), ராமானுஜம்(45), தினேஷ்குமார்(28), யுகேஸ்வரன்(22), விக்னேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குடிபோதையில் ஆபத்து தெரியாமல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து செய்தனர். இவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெறுவதாக ஸ்ரீ முஷ்ணம் போலீஸ் நிலையத்திற்கு தொடர் புகார்கள் வந்தது.

    இதையடுத்து சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று ஸ்ரீ முஷ்ணம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆண்டி மடம் செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் 4 பேரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் நான்கு பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரனை நடத்தினர்.

    அப்போது அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரசு (வயது19), ரஞ்சித்(17), சின்னையா என்கிற ராஜ்குமார்(18), ஸ்ரீ ஆதிவராகநல்லூர் பகுதியை சேர்ந்த சபரி வாசன்(17) என்பதும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

    அவ்வாறு திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆண்டிமடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி வைத்திருந்துஅதன் பின்னர் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் உள்ள துரைசாமி என்பவருக்கு சொந்தமான பெட்டிகடையை உடைத்து பொருட்களை திருடியதையும் ஒப்பு கொண்டனர்.

    இவர்கள் 4 பேரும் திருடுவதற்கு மூளையாக செயல்பட்டவர் அய்யூர் பகுதியை சேர்ந்த மற்றொரு ரஞ்சித் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அரசு (வயது19), ரஞ்சித்(17), சின்னையா என்கிற ராஜ்குமார்(18), சபரி வாசன்(17) ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அய்யூர் பகுதியை சேர்ந்த மற்றொரு ரஞ்சித்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை களை கட்டி வருகிறது. கஞ்சா விற்கும் கும்பலை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்புகின்றனர். சில தினங்களில் ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் விற்பனையை தொடங்கி விடுகின்றனர். இது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஏர்வாடி தர்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யபிரியா தலைமையில் போலீசார் ஏர்வாடி பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய பஸ் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

    அங்கு சென்று பார்த்த போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கீழக்கரை தட்டார் தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் வெற்றிவேல்(வயது20), ஸ்ரீநகரை சேர்ந்த கருப்பையா மகன் விமல்ராஜ்(வயது20) ஆகியோரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

    அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பொட்டலங்களாக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
    சூலூரில் நீதிபதி மனைவியிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    சூலூர்:

    கோவை அருகே உள்ள சூலூர் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டாரில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    அவர்கள் கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது மகன் காதர் பாஷா (23), அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன் (20) என்பதும் இவர்கள் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    இவர்களிடம் தொடர்ந்து விசாரித்த போது சூலூர் மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புகொண்டனர்.

    சூலூர் நீதிபதி செல்வபாண்டியன் அவரது மனைவி மகேஸ்வரியுடன் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். படகுதுறை அருகே வந்த போது மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகை பறிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தற்போது சிக்கி உள்ள காதர் பாஷா மற்றும் மணிகண்டன் என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #Tamilnews

    விருத்தாசலத்தில் முன்விரோதம் காரணமாக கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.

    இவருக்கும், பாண்டியனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் பாண்டியனும், தெய்வசிகாமணியும் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த தெய்வசிகாமணியின் தாய் தனலட்சுமி, பாட்டி அசோகை ஆகியோர் பாண்டியனிடம், ஏன் தெய்வசிகாமணியுடன் பேசி கொண்டிருக்கிறாய்? உங்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருக்கிறதே பிறகு ஏன் பேசி கொண்டிருக்கிறாய்? என்று கூறி விட்டு சென்றனர்.

    இதனால் பாண்டியன் ஆத்திரம் அடைந்தார். இரவு 9 மணி அளவில் பாண்டியன், அவரது தம்பி சுரேஷ் (32), அதே பகுதியை சேர்ந்த பிரபுராஜ் (33) ஆகியோர் தெய்வசிகாமணி வீட்டுக்கு சென்றனர்.

    அங்கிருந்த தெய்வசிகா மணி, அவரது தாய் தனலட்சுமி மற்றும் பாட்டி அசோகை ஆகியோரை தாக்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சபரிநாதன் (29) என்பவர் அங்கு வந்தார். அவர் பாண்டியனிடம், ஏன் சண்டை போட்டு கொண்டிருக்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டார்.

    ஏற்கனவே பாண்டியனுக்கும், சபரிநாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் கத்தியால் சபரிநாதன் கழுத்தில் குத்தினார். இதில் அதே இடத்தில் சபரிநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று சபரிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே சபரிநாதன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி மஞ்சுளா (25) மற்றும் உறவினர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் கதறி அழுது புரண்டனர். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர்.

    இந்த கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் தலைமறைவாகி விட்ட பாண்டியன், சுரேஷ், பிரபுராஜ் ஆகியோரை தேடிவந்தனர்.

    இன்று காலை அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    திலாஸ்பேட்டையில் கொலை திட்டத்துடன் பதுங்கி இருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் கோபி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக திலாஸ்பேட்டையை சேர்ந்த ராமு மற்றும் இவரது சகோதரர் ரஞ்சித் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.

    தற்போது இவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்களை கொலை செய்ய கோபியின் கூட்டாளிகள் முடிவு செய்திருந்தனர். இதே போல் கோபியின் கூட்டாளிகளை கொலை செய்ய ராமுவின் சகோதரர் ரஞ்சித் திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திலாஸ்பேட்டை மந்தைவெளி திடலில் கத்தியுடன் 4 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல்வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த கும்பலில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த புகழ், பிரசாந்த், புவனேஷ் ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர் அப்பு என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் ரஞ்சித்தின் தூண்டுதலின் பேரில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் கோபியின் கூட்டாளிகளை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்ததாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அப்புவை தேடி வருகிறார்கள். #Murdercase

    புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட மீனவரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் நாகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 23). மீனவர். இவரது தங்கை புதுவையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

    இவர் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போதும், பள்ளியை விட்டு திரும்பும் போதும் முத்தியால் பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (20) மற்றும் சிவசங்கர் (19) ஆகியோர் கிண்டல் செய்து வந்தனர்.

    இதையடுத்து அந்த மாணவி தனது அண்ணன் நவீன்குமாரிடம் இதுபற்றி முறையிட்டார். இதனை கண்காணித்து வந்த நவீன் குமார் நேற்று மாலை கிண்டல் செய்த அந்த வாலிபர்களிடம் தட்டிக் கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரும் நேற்று நவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் நவீன்குமாரிடம் இருந்த செல்போனை பறித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து நவீன்குமார் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் மற்றும் சிவசங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே விவசாயியிடம் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ் நிலையம் அருகே தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கொடுக்க வருவது வழக்கம்.

    நேற்றும் ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க வந்திருந்தனர். அவர்களுடன் வானூர் அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 37) என்பவரும் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது 2 வாலிபர்கள் ராமமூர்த்தி வைத்திருந்த மணிபர்சை பறித்து கொண்டு ஓடினர். உடனே அவர் திருடன்... திருடன்... என கூச்சல் போட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    பின்னர் அவர்களை வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் வாதானூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (20), காசிபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் என்பதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
    பரங்கிமலையில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைதானார்கள். மேலும் தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஆலந்தூர்:

    பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் உளவுத்துறை போலீஸ்காரராக பணிபுரிபவர் ராஜசேகர். அவர் நேற்று இரவு 10 மணியளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    மடுவாங்கரை மேம்பாலத்தின் சர்வீஸ் ரோட்டில் சென்ற போது 3 பேர் சேர்ந்து வடமாநில வாலிபர்கள் 2 பேரை அடித்து உதைத்து கொண்டிருந்தனர். அதை பார்த்த ராஜசேகர் தனதுமோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்றினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், அவர்களை காப்பாற்ற நீங்கள் யார்? என கேட்டனர். அதற்கு அவர் தான் போலீஸ்காரர் என்றார்.

    உடனே அவரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ அருகே இழுத்து சென்று 3 பேரும் தாக்கினர். மேலும் அவரிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தார். அவர் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆலந்தூர் சவுரி தெருவை சேர்ந்த வெங்கடேசன் (30), சந்திரன் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். நவீன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். #tamilnews
    ×