search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money snatching"

    • கிருஷ்ணராஜை வழிமறித்து பொங்கல் செலவுக்கு ரூ.5 ஆயிரம் கேட்டார். ஆனால் கிருஷ்ணராஜ் கொடுக்க மறுத்து விட்டார்.
    • ஆத்திரமடைந்த கபிலன் கத்தியை காட்டி கிருஷ்ணராஜை மிரட்டினார். பின்னர் அவரது சட்டை பையில் இருந்த ரூ.1000-த்தை பறித்து சென்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் எஸ்.மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு மேம்பாலம் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கபிலன் வந்தார். இவர் கிருஷ்ணராஜை வழிமறித்து பொங்கல் செலவுக்கு ரூ.5 ஆயிரம் கேட்டார். ஆனால் கிருஷ்ணராஜ் கொடுக்க மறுத்து விட்டார். ஆத்திரமடைந்த கபிலன் கத்தியை காட்டி கிருஷ்ணராஜை மிரட்டினார். பின்னர் அவரது சட்டை பையில் இருந்த ரூ.1000-த்தை பறித்து சென்றார்.

    அதிர்ச்சியடைந்த கிருஷ்ணராஜ் கூச்சல போட்டார். ஆத்திரம் அடைந்த கபிலன், அவருடன் வந்த புதுவை நெல்லித்தோப்பை சேர்ந்த கவுதம் ஆகிய 2 பேரும் 2 நாட்டு வெடிகுண்டுகளை சாலையில் வீசி கிருஷ்ணராஜை மிரட்டினர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குபதிவு செய்து கபிலன், கவுதமன் ஆகியோரை கைது செய்தனர்.

    • செல்போனில் கூகுள் பே இருப்பதை அறிந்து கொண்ட கும்பல் பணம் அனுப்புமாறு கேட்டு ஆயுதங்களை காட்டி இருவரையும் மிரட்டி உள்ளனர்.
    • உயிருக்கு பயந்து இருவரும் ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் குடும்ப நண்பர்களுக்கு போன் செய்து கூகுள் பேவுக்கு ரூ.40 ஆயிரம் பெற்று பின்னர் கும்பலுக்கு தந்தனர்.

    ஈரோடு:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுதீர் (29). வேலை தேடி நண்பர் திலிப்பை பார்க்க ஈரோடு வந்தார். வீரப்பன்சத்திரம், கொத்துக்காரர் தோட்டம் பகுதியில் திலிப்புடன் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று திலீப், சுதீர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென 7 பேர் கொண்ட கும்பல் திலீப் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் சுதீர், திலிப் இருவரையும் தாக்கினர். திலிப்பிடம் இருந்து ரூ. 5,200 பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த கும்பல் இருவரது செல்போனையும் பறித்தனர். செல்போனில் கூகுள் பே இருப்பதை அறிந்து கொண்ட அந்த கும்பல் பணம் அனுப்புமாறு கேட்டு ஆயுதங்களை காட்டி இருவரையும் மிரட்டி உள்ளனர்.

    உயிருக்கு பயந்து இருவரும் ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் குடும்ப நண்பர்களுக்கு போன் செய்து கூகுள் பேவுக்கு ரூ.40 ஆயிரம் பெற்று பின்னர் கும்பலுக்கு தந்தனர். இதனைத் தொடர்ந்து ஆம்னி வேனில் இருவரையும் ஏற்றிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடத்திச் சென்று இறக்கி விட்டு சென்று விட்டனர். பின்னர் இருவரும் பொதுமக்கள் உதவியுடன் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வீரப்பன்சத்திரம், பெரியவலசு ராதாகிருஷ்ணன் வீதி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (34), திருச்செங்கோடு, சூரியம்பாளையம், காட்டுவலசை சேர்ந்த பூபதி (21), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் குமார்(22) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சோமசுந்தரம், லிங்கேஷ், பிரவீன், பிகாசு ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர் அருகே போலீஸ் போல் நடித்து விவசாயிடம் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கம்மவார் பாளையத்தை சேர்ந்தவர் நீலமேகம். விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் மேல் நல்லாந்தூர் வழியாக வந்தார்.

    அங்கு போக்குவரத்து போலீஸ் சீருடையில் நின்ற வாலிபர் ஒருவர் நீலமேகத்திடம் வாகனத்தின் ஆவணங்களை கொடுக்கும்படி கேட்டார்.

    அப்போது போதிய ஆவணம் இல்லாததால் ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் கட்டவேண்டும் என்று கூறி பணத்தை வசூலித்தார். பின்னர் இதற்கான ரசீதை போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுபற்றி நீலமேகம் திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் விசாரித்த போது மர்ம நபர் போலீஸ் போல் நடித்து பணம் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சியில் ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1.20 லட்சத்தை வாலிபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருச்சி:

    திருச்சி ஆனந்தபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 55). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ்சில் சென்றார். அப்போது அவர் பையில்  ரூ.1.20 லட்சத்தை வைத்திருந்தார். அதனை பஸ்சில் பயணித்த வாலிபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். 

    இந்த நிலையில் பாலக்கரை ரவுண்டானா அருகே செல்லும் போது திடீரென அந்த வாலிபர், வடிவேல் வைத்திருந்த பையை  பறித்துக்கொண்டு, பஸ்சில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். பணத்தை பறிகொடுத்த வடிவேல் இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் பணத்தை பறித்து சென்றது  பாலக்கரை கீழப்புதூர் ரோடு பகுதியை சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.1.20 லட்சத்தை  பறிமுதல் செய்தனர். 
    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே விவசாயியிடம் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ் நிலையம் அருகே தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கொடுக்க வருவது வழக்கம்.

    நேற்றும் ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க வந்திருந்தனர். அவர்களுடன் வானூர் அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 37) என்பவரும் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது 2 வாலிபர்கள் ராமமூர்த்தி வைத்திருந்த மணிபர்சை பறித்து கொண்டு ஓடினர். உடனே அவர் திருடன்... திருடன்... என கூச்சல் போட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    பின்னர் அவர்களை வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் வாதானூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (20), காசிபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் என்பதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
    ×