என் மலர்
நீங்கள் தேடியது "rajanagam"
- குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
- வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அவரது தைரியத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ரோஷ்னி ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அவரது தைரியத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
வனத்துறை அதிகாரி ரோஷ்னி கடந்த 8 வருடங்களாக கிட்டத்தட்ட 800 பாம்புகளை பிடித்துள்ளார். ஆனாலும் 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்தது ரோஷ்னிக்கு இதுவே முதல்முறையாகும்.
- சாலையோர புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது.
- சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஊட்டி,
கூடலூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் சென்றனர். இந்தநிலையில் கூடலூர் ஊசிமலை அருகே சாலையோரம் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் தென்பட்டது. தொடர்ந்து சாலையின் மறுபுறம் செல்ல முயன்றது. ஆனால் தடுப்பு சுவர்கள் உயரமாக இருந்ததால், ராஜநாகத்தால் உடனடியாக அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனால் ராஜநாகம் பல கட்ட முயற்சிக்குப் பிறகு சாலையோர புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது. இதனிடையே சாலையோரம் ராஜநாகம் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையோரம் தென்பட்டால் அதற்கு இடையூறு செய்யக்கூடாது. தானாகவே வனத்துக்குள் சென்று விடும் என்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனபகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்களும், அரியவகை மூலிகைகளும் அதிகளவில் உள்ளன. தற்போது பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து வன விலங்குகள் வெளியேறி சாலையோரங்களில் சுற்றி வருகிறது. எனவே வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது. செல்பி, போட்டோ எடுக்கக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை பிடித்து செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றி விவரம் வருமாறு:-
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனப்பகுதியில் கணிசமான அளவு ராஜநாகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சேரம்பாடி பஜாரையொட்டிய கண்ணம்வயல் செல்லும் சாலையில் ஒரு மூங்கில் மரத்தில் ராஜநாகம் படுத்து இருந்தது. அதிக விஷத்தன்மை கொண்ட அந்த ராஜநாகத்தை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சிலர் பிடித்து துன்புறுத்தி செல்பி எடுத்து அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருந்தனர்.
இதுபற்றி கூடலூர் வன அலுவலர் திலீப்புக்கு புகார் வந்தது. அவர் சேரம்பாடி வன சரகர் மனோகரனுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர் ராஜநாகத்துடன் செல்பி எடுத்தவர்கள் யார்? என்று விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் சேரம்பாடியை சேர்ந்த மணிகண்டன்(27), ராமானுஜம்(45), தினேஷ்குமார்(28), யுகேஸ்வரன்(22), விக்னேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குடிபோதையில் ஆபத்து தெரியாமல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.






