search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student tease"

    சோழத்தரம் அருகே கல்லூரிக்கு செல்லும்போது மாணவியிடம் கேலி, கிண்டல் செய்த வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேனாதிபதி(வயது 52). விவசாயி. இவரது மனைவி பவானி(47). இவர்களது மகள் பானுப்பிரியா(19). இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ்(30). அவரது தம்பி சரண்ராஜ் ஆகியோர் பானுப்பிரியா கல்லூரிக்கு செல்லும்போது கேலி, கிண்டல் செய்து வந்தனர்.

    இதுகுறித்து பானுப்பிரியா தனது பெற்றோரிடம் கூறினார். உடனே பவானியும், சேனாதிபதியும் சத்யராஜ் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரது தந்தை சாமிதுரையிடம் என் மகளை உனது மகன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள் என கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சாமிதுரை. அவரது மகன்கள் சத்யராஜ், சரண்ராஜ் ஆகியோர் இரும்பு பைப்பால் பவானி, சேனாதிபதியை தாக்கினர்.

    மேலும் அவர்களை கொலை மிரட்டலும் விடுத்தனர். தாக்குதலில் காயமடைந்த சேனாதிபதி பவானி ஆகியோர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தசம்பவம் தொடர்பாக சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து சாமிதுரை. அவரது மகன்கள் சத்யராஜ், சரண்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட மீனவரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் நாகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 23). மீனவர். இவரது தங்கை புதுவையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

    இவர் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போதும், பள்ளியை விட்டு திரும்பும் போதும் முத்தியால் பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (20) மற்றும் சிவசங்கர் (19) ஆகியோர் கிண்டல் செய்து வந்தனர்.

    இதையடுத்து அந்த மாணவி தனது அண்ணன் நவீன்குமாரிடம் இதுபற்றி முறையிட்டார். இதனை கண்காணித்து வந்த நவீன் குமார் நேற்று மாலை கிண்டல் செய்த அந்த வாலிபர்களிடம் தட்டிக் கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரும் நேற்று நவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் நவீன்குமாரிடம் இருந்த செல்போனை பறித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து நவீன்குமார் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் மற்றும் சிவசங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
    ×