search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜநாகம்"

    • அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
    • ஒரு கணம், நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைத்தேன்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் தஹரா கிராமம் மஹோபா பகுதியைச் சேர்ந்தவர் மித்லேஷ் யாதவ் எனும் பெண்மணி. அவரது கணவர் வெளியூரில் கூலி வேலை பார்த்து வரும் நிலையில் மித்லேஷ் தனது இரண்டு குழந்தைகளுடன் அங்குள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்க சென்ற அவர் தனி அறையில் படுத்திருந்தார். நேற்று காலை கண் விழித்தார். அப்போது அவரது காலில் அதிக விஷத்தன்மை கொண்ட உலகிலேயே மிக நீளமான ராஜ நாகப்பாம்பு அவரது காலை சுற்றியிருந்தது.

    இதனை சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியில் உறைந்தார். சத்தம் போட்டால் ராஜநாகம் தன்னை தீண்டி விடுமோ என்ற அச்சத்தில் மவுனமாக யோசித்தார். ஆனால் அப்போது வரை அந்த ராஜநாகம் அவரை எதுவும் செய்யாமல் காலை சுற்றி சுருண்ட நிலையிலேயே இருந்தது.

    கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட மித்லேஷ் யாதவ், இந்த பாம்பு தன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் தானாகவே சென்றுவிட வேண்டும் என்று இறைவனிடம் மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்தார். இதற்காக அவர் தொடர்ந்து 3 மணி நேரம் கண்களை மூடி வேண்டியபடியே இருந்தார்.

    இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் மகள் எழுந்து வராததால் அவரது தாய் அவரை தேடி வந்தார். அப்போது மகளின் காலை பாம்பு சுற்றியிருந்ததும், மகள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் அருகில் இருந்தவர்களிடம் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு போலீசார் மற்றும் வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் பாம்பு பிடிக்கும் நிபுணருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    போலீசார், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மித்லேஷ் யாதவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ராஜநாகத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் மித்லேஷ் யாதவின் காலை சுற்றியிருந்த ராஜநாகம் தானாகவே தனது பிடியை தளர்த்தியது.

    இது அங்கிருந்தவர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து மெதுவாக யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்தாமல் ஒரு புதருக்குள் சென்று மறைந்தது. உடனே மித்லேஷ் மற்றும் அங்கிருந்தவர்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    இதுகுறித்து மித்லேஷ் யாதவ் கூறியதாவது:-

    நான் எனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தேன். நான் விழித்தபோது, என் காலில் பாம்பு சுற்றியிருந்தது. என்னிடம் வந்த என் தாயிடம் குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன். அது வெளியேறும் வரை பல மணி நேரம் காத்திருந்தேன்.

    சுமார் 3 மணி நேரமாக பாம்புகளை தன்னுடைய தலையைில் சுமந்திருக்கும் இந்து கடவுளான சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தேன். எல்லா நேரமும் நான் போலேநாத்திடம் (சிவபெருமான்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அவர் எனக்கு பல்வேறு கட்டங்களில் அருள் புரிந்ததை போன்று என்னை விட்டு அந்த பாம்பு வெளியேறும்படி கேட்டுக் கொண்டேன்.

    ஒரு கணம், நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைத்தேன். என் குழந்தைகளைப் பற்றியும், நான் இறந்தால் அவர்களை யார் கவனிப்பார்கள் என்றும் நினைத்தேன். தொடர்ந்து 3 மணி நேரமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். எனது நலனுக்காக எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அவர் பிரமிப்புடன் கூறினார்.

    பாம்பு பிடிக்கும் நிபுணர் வருவதற்குள் அந்த ராஜநாக பாம்பு யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வீட்டிற்கு வெளியே சென்றதால் மித்லேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    • பாம்புகள் குறித்த வீடியோக்களை பயனர்கள் அதிகம் பார்ப்பார்கள்.
    • வனப்பகுதிக்குள் ஒரு ராஜநாகத்தின் வாலை பிடித்து சீண்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.

    சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும், அவற்றில் பாம்புகள் குறித்த வீடியோக்களை பயனர்கள் அதிகம் பார்ப்பார்கள். அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ராஜநாகத்தை வாலிபர்கள் 2 பேர் சீண்டும் காட்சிகள் பதற வைக்கிறது.

    இன்ஸ்டாகிராமில் '@டி_ஸ்ரேஸ்தா10' என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் 2 இளைஞர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஒரு ராஜநாகத்தின் வாலை பிடித்து சீண்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.

    ஒரு வாலிபர் முதலில் ராஜநாகத்தின் வாலை பிடித்து இழக்கவும் அது அவரை கொத்த முயல்கிறது. அப்போது மற்றொரு வாலிபர் அந்த ராஜநாகத்தின் வாலை பிடித்து சீண்டுவது போல உள்ள காட்சிகள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரீல்ஸ் வீடியோவுக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • சாலையோர புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது.
    • சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் சென்றனர். இந்தநிலையில் கூடலூர் ஊசிமலை அருகே சாலையோரம் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் தென்பட்டது. தொடர்ந்து சாலையின் மறுபுறம் செல்ல முயன்றது. ஆனால் தடுப்பு சுவர்கள் உயரமாக இருந்ததால், ராஜநாகத்தால் உடனடியாக அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனால் ராஜநாகம் பல கட்ட முயற்சிக்குப் பிறகு சாலையோர புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது. இதனிடையே சாலையோரம் ராஜநாகம் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையோரம் தென்பட்டால் அதற்கு இடையூறு செய்யக்கூடாது. தானாகவே வனத்துக்குள் சென்று விடும் என்றனர்.

    ×