search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman killed"

    தளவாபாளையம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த பெண் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே அய்யம் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது  மனைவி மலையம்மாள் (வயது 55). இவர் அங்குள்ள பாம்பன் தோட்டத்தில் பெருமாள் என்பவரது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.  

    இந்நிலையில் மலையம்மாள் விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு கிணற்றில் மலையம்மாள் பிணமாக மிதந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் தீயணைப்புவீரர்கள் விரைந்து சென்று மலையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேலாயும்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து மலையம்மாள் எப்படி கிணற்றில் விழுந்து இறந்தார் என்று விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை, கள்ளக்காதலன் கழுதை அறுத்து கொலை செய்தார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது பேய்க்குளம் கிராமம். இங்குள்ள சோளக் காட்டில் இன்று பிற்பகல் அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் சென்றனர்.

    அப்போது சோளக்காட்டு நடுவே 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது அதே கிராமத்தைச் சேர்ந்த ஜோதி (வயது 35) என தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    பேய்க்குளத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜோதி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

    அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி (50) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

    இந்த தகவல் முருகனுக்கு தெரியவரவே, ஜோதியை கண்டித்துள்ளார். மேலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி ஜோதிக்கு அறிவுரை கூறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஜோதி ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள சோளக்காட்டுக்கு ஓட்டிச் சென்றார்.

    அப்போது அங்கு வந்த பெரியசாமி ஆசைக்கு இணங்குமாறு ஜோதியை வற்புறுத்தினார். ஆனால் அவரோ மறுத்து பெரியசாமியை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த கதிர் அரிவாளால் ஜோதியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஜோதி வராதது கண்டு நேற்று இரவு முழுவதும் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று சோளக்காட்டில் ஜோதி பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் பதுங்கி இருந்த பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

    சூளகிரியில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண் பிணமாக கிடந்தது குறித்து அவரது கொழுந்தனை தனிப்படை போலிசார் தேடி வருகின்றனர்.
    வேப்பனஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதியில் பெண் ஒருவர் கொலையுண்டு கிடப்பதாக சூளகிரி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பெண்ணின் கழுத்து பகுதி அறுக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மேலும் அருகில் பெரிய பாறாங்கல் இருந்தது.

    இதைத் தவிர குளிர்பானம் ஒன்றும், இனிப்பு பொட்டலம் ஒன்றும் அருகில் கிடந்தன. அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எர்ரனஅள்ளியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி ஈஸ்வரி (வயது 33) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் இருந்தார். அது தொடர்பாக அவரது உறவினர்கள் பாலக்கோடு போலீசில் புகார் செய்திருந்தனர். அதன் பேரில் பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன ஈஸ்வரியை தேடி வந்தார்.

    சூளகிரியில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அறிந்த ஈஸ்வரியின் உறவினர்கள் அது ஈஸ்வரியாக இருக்கலாம் என்று கருதி ஓசூர் வந்தனர். அவர்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த உடலை பார்த்தும், அவர் அணிந்திருந்த சேலை ஆகியவற்றை கொண்டு கொலையுண்டு கிடந்தது ஈஸ்வரி தான் என உறுதி செய்தனர். இதையடுத்து ஈஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில், ஈஸ்வரிக்கும், அவரது தங்கை கணவர் பழனிசாமிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈஸ்வரி மாயமானது முதல் பழனிசாமியையும் காணவில்லை. இதனால் அவர் ஈஸ்வரியை கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்களை சூளகிரி போலீசார் பாலக்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பேரில் பழனிசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள பழனிச்சாமியை பாலக்கோடு போலீசாரும், சூளகிரி போலீசாரும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    பழனிச்சாமிக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோத தகராறில் பெணணை குத்திக்கொலை செய்த குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தவசீலன். இவரது மனைவி வெற்றிச்செல்வி (வயது 46).

    இவருக்கும், தவசீலனின் தம்பி சதாசிவத்துக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வெற்றிச் செல்வி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதாசிவம், வெற்றிச்செல்வியை ஆபாசமாக திட்டினார்.

    சதாசிவத்திடம் ஏன் என்னை திட்டுகிறீர்கள்? என்று வெற்றி செல்வி கேட்டார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதாசிவம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெற்றிச்செல்வியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த வெற்றி செல்வி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சதாசிவம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் வெற்றி செல்வியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வெற்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் வெற்றிச்செல்வியின் மகன் கிருபாநிதி புகார் செய்தார். அதன் பேரில் சதாசிவம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் குற்றவாளியை பிடிக்க காட்டு மன்னார்கோவில் இன்ஸ் பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சதா சிவத்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கள்ளக்காதல் பிரச்சினையில் அம்மி கல்லை தூக்கிப்போட்டு பெண்ணை படுகொலை செய்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    தஞ்சை கீழவாசல் வீதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி இறந்து விட்டார். இதையடுத்து தனலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் வேலைப்பார்த்து வந்த கடலூர் வாலிபர் ஒருவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இதையடுத்து அந்த வாலிபர் தனலட்சுமியை தஞ்சாவூரில் இருந்து கடலூருக்கு அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி தனலட்சுமியின் குழந்தைகளை தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு தனலட்சுமியை மட்டும் கடலூர் கூத்தப்பாக்கத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் அங்குள்ள பாரதியார் நகரில் அந்த வாலிபரும், தனலட்சுமியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர் ஆத்திரம் அடைந்து தனலட்சுமியின் தலையில் அம்மி கல்லை தூக்கி போட்டார். இதில் தனலட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி பிணமாக கிடப்பை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதல் பிரச்சினையில் தனலட்சுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக கடலூர் முதுநகரை சேர்ந்த வாலிபர் சரவணனை (வயது 39) போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரியில் செலவுக்கு பணம் கொடுக்காததால் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த அண்ணன் மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலை கணபதி தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி ராணி (வயது 58).

    கிருஷ்ணகிரியில் உள்ள ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ராணிக்கு அண்ணன் மகன் ஆவார். இந்த நிலையில் சுரேஷ் தனது செலவுக்கு பணம் வேண்டும் என்று ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு மீண்டும் ராணியிடம் சென்று அவர் பணம் கேட்டு தகராறு செய்தார். 

    அப்போது அவர் பணம் தரமறுத்ததால் ஆத்திரத்தில் சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராணியின் கழுத்தில் வெட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே ராணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பென்னாகரம் அருகே பஸ்சில் இருந்து இறங்க முயன்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    பென்னாகரம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து பென்னாகரத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். அந்த பஸ் பெரும்பாலை வந்தபோது அங்கு சின்னம்பள்ளியைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர் ஏறினார். அவர் பெரும்பாலையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சின்னம்பள்ளிக்கு செல்வதற்காக அந்த பஸ்சில் ஏறினார். 

    பஸ் சின்னம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்றபோது தங்கம்மாள் இறங்காமல் இருந்தார். சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டபோது பஸ் நிறுத்தத்தில் இறங்காத அவர் திடீரென்று எழுந்து வந்து சின்னம்பள்ளி பஸ் நிறுத்தம் தாண்டி விட்டது பஸ்சை நிறுத்துங்கள் என்றார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினர். அப்போது தங்கம்மாள் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்றபோது அவர் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசப்பாக்கம் அருகே கணவனின் கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் காரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் பூஜா (வயது 21).

    இவருக்கும், போளூர் பொத்தரை பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பச்சையப்பன் (25) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பச்சையப்பன் கட்டுமான சாரம் கட்டும் தொழிலாளி. இந்த நிலையில், இவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருங்கி பழகினர். பச்சையப்பனின் கள்ளக்காதல் விவகாரம், மனைவி பூஜாவிற்கு தெரிய வந்தது. தகாத உறவை விடும்படி கணவனை வற்புறுத்தினார். எனினும் கள்ளக்காதலியுடன் பச்சையப்பன் தொடர்பில் இருந்தார். மனைவி மீது வெறுப்படைந்தார்.

    இதனால் பச்சைப்பன், பூஜாவின் இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர்.

    நள்ளிரவும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலிக்காக வெறிப்பிடித்ததை போல் மாறிய பச்சையப்பன் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்தார்.

    இதில், படுகாயமடைந்த பூஜா வீட்டிற்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அதற்குள், பச்சையப்பன் சம்பவ இடத்தில் இருந்து ஓடி விட்டார். பூஜா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக, போளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, இன்று காலை பூஜாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய பச்சையப்பனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அருமனை அருகே வீட்டில் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்த போது சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட தீயில் கருகிய இளம்பெண் பலியானார்.
    நாகர்கோவில்:

    அருமனையை அடுத்த சிதறால் பகுதியை சேர்ந்தவர் கிரீஸ்குமார். இவரது மனைவி ரம்யா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 15-ந் தேதி மின்சார தடை காரணமாக வீட்டில் விளக்குகள் எரியவில்லை. எனவே ரம்யா, வீட்டில் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்தார். அப்போது விளக்கு சரிந்து விழுந்து ரம்யா உடலில் தீப்பிடித்தது.
    வலி தாங்க முடியாமல் ரம்யா அலறினார். 

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ரம்யாவை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த ரம்யா, நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபாமாக இறந்து போனார்.

    இது பற்றி ரம்யாவின் தாயார் அருமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெண்ணை கொன்று விட்டு தலைமறைவான கணவரை போலீசார் கைது செய்தனர். அவர்களது மகள்களும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    புதூர்:

    மதுரை அருகே திருமோகூரை அடுத்துள்ள இலங்கிபட்டியை சேர்ந்தவர் பெத்தன்பெருமாள் (வயது 60). இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு முத்தாலம்மன் (13), நாகேஸ்வரி (10), காமாட்சி (18) மற்றும் ஒரு ஆண் என 4 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 30-ந்தேதி இரவு கணவன்-மனைவிஇடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெத்தன் பெருமாள் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

    இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெத்தன் பெருமாளை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பெத்தன் பெருமாள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான பெரியமலையத் தான்பட்டியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பெத்தன் பெருமாளை கைது செய்தனர்.

    தாய் கொலை செய்யப்பட்டு விட்டதாலும், தந்தை கைது செய்யப்பட்டதாலும் 3 மகள்கள் உள்பட 4 பேரும் அனாதையானார்கள். அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட உறவினர்களும் முன் வரவில்லை. இதனால் உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் 4 பேரும் தவித்து வருகின்றனர். தற்போதைக்கு அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 4 குழந்தைகளுக்கும் உணவளித்து வருகிறார்.

    தாயை இழந்து, தந்தை சிறைக்கு சென்றுவிட்டதால் அனாதைகளாகிவிட்ட 4 குழந்தைகளையும் தொண்டு நிறுவனங்கள் தங்களது பராமரிப்பில் எடுத்து வளர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தன்னிடம் பேச மறுத்ததால் பெண்ணை எரித்துக்கொன்றுவிட்டு நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 38). இவருடைய மனைவி அஞ்சலை(30). சுரேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அஞ்சலை வீட்டில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் அஞ்சலையுடன் அதே பகுதியை சேர்ந்த சங்கர்(20) என்பவர் அதிக நேரம் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருவில் தங்கியிருந்த சங்கரை போலீசார் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்திருந்தனர். இந்த நிலையில் அதிகாலை சங்கர், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் சங்கரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அக்கராயப்பாளையம் காட்டுப்பகுதியில் சங்கர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சங்கரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அஞ்சலையை தீ வைத்து எரித்துக்கொலை செய்ததாக சங்கர் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், அஞ்சலைக்கும் ஒரே ஊர் இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அஞ்சலை என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். செல்போன் அழைப்பையும் ஏற்க மறுத்தார்.

    இதனால் சம்பவத்தன்று நான் அஞ்சலையின் வீட்டுக்கு சென்று, ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய்? என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், வெளிநாட்டில் இருக்கும் தனது கணவர், ஊருக்கு வருவதால் என்னிடம் பேச முடியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கையால் தாக்கினேன்.

    உடனே அஞ்சலை தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். அப்போது நீ என்னை மிரட்டுகிறாயா என்று கேட்டேன். பின்னர் நானே உன்னை கொலை செய்து விடுகிறேன் என்று கூறி, அஞ்சலை மீது தீ வைத்து விட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தேன். அஞ்சலையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உடனே நானும் வீட்டுக்குள் சென்று எதுவும் தெரியாதது போல் நடித்தேன். அஞ்சலையின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தேன். பின்னர் அஞ்சலையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றேன். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அஞ்சலையை கொண்டு சென்றனர். அப்போது நான் செல்லவில்லை.

    இந்த நிலையில் அஞ்சலை ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

    இதை அறிந்த நான் போலீசார் எப்படியும் என்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் பெங்களூரு சென்று விட்டேன். இருப்பினும் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வள்ளியூர் அருகே மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் பெண்ணை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் கலையரங்க தெருவை சேர்ந்தவர் நம்பி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 37). நம்பிக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் அவர் வேலைக்கு சென்றுவிட்டு மதுகுடித்தபடி வீட்டுக்கு வருவார். வீட்டில் மனைவி, குழந்தைகளிடம் போதையில் தகராறு செய்துவந்தார்.

    மேலும் வேலை செய்து கிடைக்கும் சம்பள பணத்தை வீட்டிற்கு சரிவர கொடுப்பதில்லையாம். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நம்பி மது குடித்துவிட்டு வரும்போதெல்லாம் பேச்சியம்மாள் கண்டித்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு நம்பி வழக்கம்போல் குடித்துவிட்டு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் படுத்து தூங்கி விட்டனர்.

    நள்ளிரவு திடீரென விழித்த நம்பி ஆத்திரத்தில் அங்கு கிடந்த கம்பை எடுத்து மனைவி பேச்சியம்மாளை சரமாரியாக தாக்கினார். இதில் பேச்சியம்மாளின் முகம் சிதைந்தது.

    பலத்த காயம் அடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். உடனே நம்பி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வள்ளியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி நம்பியை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×