search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman dies"

    • திருமண மண்டபம் அருகில் நடந்து வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது வேகமாக மோதியது.
    • வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி (வயது 36).  இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது வேகமாக மோதியது. இதில் செல்வி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனை அக்கம்பக்கம் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக செல்வியை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர். 

    • பெருந்துறை வாய்க்கால் மேடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பேகம் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை மஜீத் வீதியை சேர்ந்தவர் சலீம். இவர் பெருந்துறை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பேகம் (வயது 52). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஈரோட்டில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக சலீம் மற்றம் பேகம் இருவரும் ஈரோடு சென்று விட்டு பின்னர் பெருந்துறை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.

    பெருந்துறை வாய்க்கால் மேடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பேகம் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார். உடனடியாக சலீம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • தடுப்பு சுவரில் கார் மோதியதில் பெண் பலியானார்.
    • படுகாயம் அடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை

    பெரம்பலூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 55). இவரது மனைவி பானுமதி (45). இவருடைய மகன் சேமன் (24). இவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் ரகுபதி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களான துரைசாமி (60), சுலோச்சனா (54), ஜனனி (24) ஆகியோருடன் காரில் பழனி சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ரகுபதி ஓட்டி சென்றார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையின் நடுேவ இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில், படுகாயம் அடைந்த பானுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாய் கிணற்றில் விழுவதை பார்த்த ஜோதிகா கூச்சலிட்டார்.
    • ஜோதிகா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூ.பாலப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். அவரது மனைவி தேவிகா (வயது 45) இவர் அதே கிராமத்தில் மதுரா காந்திநகர் பகுதியில் கண்ணன் என்பவரது கிணற்றின் அருகே உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்தார். கிணற்றின் அருகே இவரது மகள் ஜோதிகா நின்று கொண்டிருந்தார்.

    அப்போது கால் தவறி தேவிகா 100 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தார். தாய் கிணற்றில் விழுவதை பார்த்த ஜோதிகா கூச்சலிட்டார். அப்போது அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதுகுறித்து தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்த தேவிகா உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஜோதிகா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பெண் மர்மமான முறையில் இறந்தார்.
    • கவிதா தூக்கில் தொங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேலின் மகள் கவிதா(வயது 28). இவருக்கும், இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் மர்மமான முறையில் கவிதா தூக்கில் தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விரைந்து சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவிதாவின் உடலில் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பது குறித்து செந்துறை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • தியாகதுருகம் அருகே குப்பைக்கு வைத்த தீ சேலையில் பற்றி எரிந்ததால் பெண் பலியானார்.
    • புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி வசந்தி (வயது 33) இந்நிலையில் வசந்தி தனது குழந்தைகளுடன் சுப்ரமணியபுரத்தில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு வசந்தி வீட்டின் பின்புறம் தோட்டத்தில் உள்ள குப்பைகளை தீயிட்டு எரித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வசந்தியின் சேலையில் தீப்பற்றி எரிந்தது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வசந்தி இறந்து போனார்.

    இது குறித்து வசந்தியின் தாய் முத்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிச்சயிக்கப்பட்ட பெண் சாவிற்கு காரணமான வாலிபருக்கு தண்டனை பெற்று தர கோரி விவசாயி மனு அளித்தார்.
    • ரம்யா கிருஷ்ணனை ஸ்ரீதர் என்பவர் கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி பெத்தநாயக்கன்குப்பம் சேர்ந்தவர் மதியழகன். இவர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது மகள் ரம்யா கிருஷ்ணன். பிஎஸ்சி பட்டதாரி. கடந்த ஜூன் மாதம் 10 ந்தேதி தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த மே மாதம் 25-ந் தேதி தேதி திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக குறிஞ்சிப்பாடி சென்று வருவதாக கூறி சென்றார். அப்போது எனது மகள் ரம்யா கிருஷ்ணனை ஸ்ரீதர் என்பவர் கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதற்கு என் மகள் மறுத்ததால் சுத்தியலால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த எனது மகள் கதறி துடித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் எனது மகள் ரம்யா கிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் . இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று எனது மகள் ரம்யா கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். நான் விவசாயக் கூலி செய்து வருகிறேன்‌. ஆகையால் மகளை இழந்து வாடும் எங்களுக்கு நிவாரணமாக எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

    • முதலுதவி சிகிச்சை அளித்தும் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் . அவரது மகள் சந்தியா ( வயது 29 ) . பட்டதாரியான இவர் காஞ் சீபுரத்தில் தங்கி டி.என்.பி. எஸ்.சி. தேர்வுக்காக படித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று சந்தியா தர்மபுரிக்கு செல்வதற் காக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். நடை மேடைக்கு செல்வதற்காக நடந்து சென்ற போது திடீ ரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.

    உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்ட நிலையில் சந்தியா பரி தாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    • புதுவையில் 27, காரைக்காலில் 1, ஏனாமில் 2 பேர் என 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 149, காரைக்காலில் 38, ஏனாமில் 30, ஏனாமில் 9, மாகியில் ஒருவர் என புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 27, காரைக்காலில் 1, ஏனாமில் 2 பேர் என 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 5, காரைக்காலில் 170, ஏனாமில் 25, மாகியில் 3 பேர் என ஆயிரத்து 203 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 174, காரைக்காலில் 32, ஏனாமில் 9 பேர் என 215 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். கொரோனாவுக்கு காரைக்காலை சேர்ந்த 59 வயது பெண் பலியானார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 76 ஆயிரத்து 267 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்
    • ஈரத்துண்டை கம்பியில் காய போட முயன்றார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை அண்ணா நகர் பழைய காலனியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மனைவி பச்சையம்மாள்(வயது 65). விவசாயி கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் அதன் பின்புறம் உள்ள இடத்தில் தகர கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம்போல் பச்சையம்மாள் விவசாய வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது அவர் கை, கால்களை கழுவிய பின்னர் துண்டால் துடைத்துவிட்டு, ஈரத்துண்டை தனது கொட்டகைக்கு வெளியே இருந்த கம்பியில் காய போட முயன்றார். அப்போது அவர் மீது திடீரென்று மின்சாரம் பாய்ந்ததால் பச்சையம்மாள் சத்தம் போட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த காசிநாதனின் மனைவி செல்வி(48) ஓடி வந்து பச்சையம்மாளை பிடித்து இழுத்து, காப்பாற்ற முயன்றார். அப்போது செல்வி மீதும் மின்சாரம் பாயந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் பச்சையம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மங்களமேடு போலீசார், செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது."

    • ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் சோளக் காளிபாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள பெரிய வட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (52). இவரது மனைவி லட்சுமி (47). கணவன்-மனைவி இருவரும் கொடுமுடி கடை வீதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் சோளக் காளிபாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பழனிசாமி, லட்சுமி நிலை தடுமாறி கிழே விழுந்தனர். இதில் லட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாகமாக இறந்தார்.

    இதில் பழனிசாமி படு காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் பழனிசாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரி விக்க ப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் லட்சுமி உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சம்பத் இவரது மனைவி ஜெயந்தி இவர்களுக்கு அருண்குமார், ராஜ்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    மேலும் கடந்த 6-ந்தேதி சம்பத் ஜெயந்தி ஆரணியில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு தன்னுடைய பைக்கில் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஆற்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் ஓடி வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் ஜெயந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி இறந்துவிட்டார். இதில் சம்பத் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து ஆரணி தாலுக்கா போலீசில் சம்பத் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபூதின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×