என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
கொரோனாவுக்கு காரைக்கால் பெண் பலி
- புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
- புதுவையில் 27, காரைக்காலில் 1, ஏனாமில் 2 பேர் என 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் 2 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 149, காரைக்காலில் 38, ஏனாமில் 30, ஏனாமில் 9, மாகியில் ஒருவர் என புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 27, காரைக்காலில் 1, ஏனாமில் 2 பேர் என 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 5, காரைக்காலில் 170, ஏனாமில் 25, மாகியில் 3 பேர் என ஆயிரத்து 203 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவையில் 174, காரைக்காலில் 32, ஏனாமில் 9 பேர் என 215 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். கொரோனாவுக்கு காரைக்காலை சேர்ந்த 59 வயது பெண் பலியானார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 76 ஆயிரத்து 267 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






