என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபுடம்
பைக் விபத்தில் பெண் சாவு
- ஒருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சம்பத் இவரது மனைவி ஜெயந்தி இவர்களுக்கு அருண்குமார், ராஜ்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மேலும் கடந்த 6-ந்தேதி சம்பத் ஜெயந்தி ஆரணியில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு தன்னுடைய பைக்கில் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஆற்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் ஓடி வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஜெயந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி இறந்துவிட்டார். இதில் சம்பத் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து ஆரணி தாலுக்கா போலீசில் சம்பத் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபூதின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.






