search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "was arrested"

    • கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கோபிசெட்டிபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.

    அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் தாலுகா பகுதியை சேர்ந்த ஆனந்த் (29) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.1,500 மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். 

    • பங்கில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 ஆயிரம் பற்றாக்குறை இருந்துள்ளது.
    • ஹரினிடம் பண பற்றாக்குறை பற்றி கேட்ட போது மது குடிக்க கல்லாவில் இருந்து ரூ.2ஆயிரம் எடுத்து வந்து விட்டதாக கூறியுள்ளார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சசிகுமார் (வயது43).

    இந்த பங்கில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 ஆயிரம் பற்றாக்குறை இருந்துள்ளது. பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை கேட்டபோது தாங்களுக்கு தெரியாது என்றும் கேசியரை தான் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    வேலை முடித்து சென்ற ஊழியர் ஹரின் என்பவரை தேடி வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர் இல்லை. பின்னர் மதியம் காஞ்சிக்கோயில் நால் ரோட்டில் நின்று கொண்டி ருந்த ஹரினிடம் பண பற்றாக்குறை பற்றி கேட்ட போது மது போதையில் இன்று விடுமுறை என்ப தால் மது குடிக்க கல்லாவில் இருந்து ரூ.2ஆயிரம் எடுத்து வந்து விட்டதாக கூறியு ள்ளார்.

    அவரிடம் பாக்கெட்டில் மீதம் இருந்த ரூ.1600 எடுத்து கொடுத்து கொண்டார். பின்னர் இது குறித்து காஞ்சிக்கோயில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொட ர்பாக காஞ்சிக்கோயில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்கு பதிந்து ஹரினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • நல்லிபாளையம் பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • இதனையடுத்து போலீசார் தாண்டானை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

     பவானி:

    பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் பவானி-அந்தியூர் மெயின் ரோடு நல்லிபாளையம் பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அங்கு இருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது பவானி மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் தாண்டான் (46) என்பதும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் தாண்டானை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • சித்தோடு நடுப்பாளையத்தை மணிகண்டன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
    • இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

     பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு நடுப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் சித்தோடு நடுப்பாளையம் மணிகண்டன் (42) என்பதும், செல்போனில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பரிசு விழும் எனக் கூறி எண்கள் அனுப்பியும், வெள்ளை தாள்களில் எண்கள் எழுதி விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    • கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    அத்தாணி அருகே உள்ள கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற திண்டுக்கல் கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.910 மதிப்புள்ள 7 மதுபானபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மொபட்டில் வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • கே.என்.பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்களை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர்

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் ராமர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மொபட்டில் வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் அந்த நபர் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (32) என்பதும் சாக்கு மூட்டையை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து 13.02 கிலோ குட்கா மற்றும் மொபட்டையும் பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்து செல்வம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும், இந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கர்நாடகாவில் வாங்கி வந்து உள்ளூர் பகுதியில் மளிகை கடைகளுக்கு விற்பனை செய்து வரும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கே.என்.பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்களை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர்

    • சித்தோடு போலீசார் போதை மாத்திரை சப்ளை செய்த வாலிபரை கைது செய்தனர்.
    • மேலும் அவரிடம் இருந்த 1400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சித்தோடு:

    பவானி அருகில் உள்ள ஆர்.என். புதூர் பகுதியில் கடந்த 7-ந் தேதி சித்தோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்கு பின்னாக அவர்கள் பதில் அளித்த நிலையில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அதில், சித்தோடு ராயபாளையம் புதூர் பகுதியில் வசிக்கும் திலிப் குமார் மற்றும் வினித் குமார் ஆகிய இருவரும் வீட்டில் டேப்பேன்டாட்டல் என்ற போதை மாத்திரைகள் வைத்து டாக்டர் அனுமதி சீட்டு இல்லாமல் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் சேலத்தில் இருந்து வாங்கி வந்து விற்கப்பட்ட இந்த மாத்திரைகளை ஈரோடு கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் சப்ளை செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து திலிப் குமார் மற்றும் வினித் குமார் ஆகிய 2 பேரையும் சித்தோடு போலீசார் கைது செய்து தலை மறைவான முக்கிய நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு, கனி ராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சஞ்சய் குமார் என்கிற சஞ்சய் (23) என்பதும் போதை மாத்திரைகள் வைத்து விற்பனை செய்து தலைமறைவாக இருந்த முக்கிய நபர் என்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • சந்தேகப்படும் விதமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் குமரன் கோவில் பகுதியில் பங்காளாப்புதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் விதமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார்சைக்கிளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பெரியகொடிவேரி அருகே உள்ள வேட்டுவன்புதூர் பகுதியை சேர்ந்த சின்னமாரப்பன் (வயது 58) என்பதும், மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து சின்னமாரப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அவரிடம் 25 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூர் போலீசார் உப்புபள்ளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அவரிடம் 25 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் காளியூர் செல்லியபாளையம் பகுதியை சோ்ந்த வேலுச்சாமி (65) என்பதும் மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனா்.

    ×