search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி சீட்டு"

    • முத்துமங்களம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.
    • அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கான எண்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

    முத்தூர்:

    முத்தூர் அருகே முத்துமங்களம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முத்துமங்களம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர். இதில் முத்தூர் ந.கரையூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன்(வயது 55) என்பவர் லாட்டரி சீட்டுகளின் நம்பர்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கான எண்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்க ல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தாஜ் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயகுமார் (வயது 34) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ. 220 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • இதையடுத்து திருவெண்ணைநல்லூர் கடை வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • குச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவெண்ணைநல்லூர் கடை வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களை திருவெ ண்ணை நல்லூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடமிருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தையும், 300 லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திருவெண்ணை நல்லூர் காந்திக்குப்பம் வள்ளுவர் தெருவை சேர்ந்த வையாபுரி (வயது 65), உளுந்தூர்பேட்டை வட்டம் கொரட்டூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமரன் (42) என்பது தெரியவந்தது. 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பெண்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • லாட்டரி எண்களை பெற்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மைலம்பாடி, காட்டூர் பஸ் நிறுத்தத்தில் பவானி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெண்கள் 2 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் மைலம்பாடியை சேர்ந்த சந்தியா (37), பவானியை சேர்ந்த சித்ரா (37) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது ஒரு ரோஸ் கலர் பேப்பரில் எண்கள் எழுதப்பட்டிருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் என கூறி விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்ததும், வாட்ஸ்-அப் மூலமாக லாட்டரி எண்களை பெற்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது.
    • தமிழகத்தை சேர்ந்தவர் எடுத்துச் சென்ற லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்த விவரம் மட்டும் தெரிந்திருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இவை தவிர பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலுக்காக 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதில் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தது. இது கடந்த ஆண்டு ஓணம் பம்பர் விற்பனையை விட 9 லட்சம் அதிகமாகும்.

    ஓணம் பம்பர் முதல் பரிசு ரூ.25 கோடியாகும். 2-ம் பரிசு ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.50 லட்சம் வீதம் 20 பேருக்கும், இவை தவிர மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மொத்த பரிசு தொகை ரூ.125 கோடியே 54 லட்சம் ஆகும். இதில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் லாட்டரி பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஓணம் பம்பர் குலுக்கல் முடிவுகள் நேற்று முன்தினம் பிற்பகல் வெளியிடப்பட்டது.

    இதில் முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது. அந்த லாட்டரி எண் TE 230662 ஆகும். ஆனால் முதல் பரிசு ரூ.25 கோடி பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது.

    தமிழகத்தை சேர்ந்தவர் எடுத்துச் சென்ற லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்த விவரம் மட்டும் தெரிந்திருந்தது. இந்தநிலையில் நேற்று திருப்பூரை சேர்ந்த நடராஜன் உள்பட 4 பேர் ஒன்றாக சேர்ந்து எடுத்த டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்த தகவல் தெரிய வந்தது.

    அதாவது அந்த டிக்கெட்டுடன் 4 பேரும் நேற்று திருவனந்தபுரம் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு நேரில் வந்து பரிசு வினியோக பிரிவில் ஒப்படைத்தனர். பாலக்காட்டில் சிகிச்சை பெற்று வந்த நபரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு திருப்பூர் திரும்பும் வழியில் வாளையாரில் எடுத்த 3 டிக்கெட்டில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்ததாக அவர்கள் லாட்டரி அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது.
    • நண்பர்கள் இருவரும் தகராறு நடக்கும்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி நடத்தப்பட்டு வருகிறது. ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம். அதில் பரிசுகள் கோடிகள் மற்றும் லட்சங்களில் கொடுக்கப்படும் என்பதால் லட்சக்கணக்கானோர் லாட்டரி சீட்டுகளை வாங்குவார்கள்.

    தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது. விற்பனைக்காக மொத்தம் 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. அவற்றில் 74.51 லட்சம் லாட்டரி சீட்டுகள் விற்பனையாகின. அவற்றுக்கான குலுக்கல் நேற்று நடந்தது.

    தங்களுக்கு பரிசு விழுமா? என்ற ஆவலில் லாட்டரி சீட்டு வாங்கிய அனைவரும் நேற்று காலை முதலே எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தேவலக்கரை பகுதியை சேர்ந்த தேவதாஸ்(வயது37) என்பவர் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார்.

    அதனை தனது நண்பரான அஜித் (39)என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார். நேற்று குலுக்கல் தினம் என்பதால், தனது லாட்டரி சீட்டை தேவதாஸ கேட்டிருக்கிறார். ஆனால் அஜித் தர மறுத்திருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அஜித், தன்னிடம் இருந்த கத்தியால் தேவதாசை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த தேவதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அஜித்தை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தேவதாஸ் மற்றும் அவரை கொன்ற அஜித் ஆகிய இருவரும் விறகு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளனர்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் தகராறு நடக்கும்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் ஆத்திரத்தில் தேவதாசை கத்தியால் குத்தி அஜித் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    • லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுந்தரபாண்டியன் என்பவரை போலீசார் பிடித்தனர்.
    • அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் சுந்தரபாண்டியன் (வயது 43) என்பவரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 30 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கே.டி.சி. நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மாரிபாண்டியிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மூன்று சக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கீழப்பாவூர் எஸ்.கே.தெருவை சேர்ந்த மாரிபாண்டி (வயது 40) என்பது தெரியவந்து.

    அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.11 லட்சம் மதிப்பிலான 2,700 லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

     கடலூர்:

    பண்ருட்டி பங்களா தெரு பிள்ளையார் கோவில் அருகில் பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து புதுப்பேட்டை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த சம்பத் என்பவரது மகன் முருகன் (வயது 20) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து தங்கம், நல்ல நேரம், குமரன், விஷ்ணு உள்ளிட்ட 91 லாட்டரி சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

    • தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார்.
    • லாட்டரி சீட்டுகளுடன் இருந்த பார்த்த சாரதியை சுற்றி வளைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் டி.புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 40). இவர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு லாட்டரி சீட்டுகளை விநியோக மும் செய்து வந்தார். லாட்டரி சீட்டு விற்றது தொடர்பாக பார்த்தசாரதியை கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம் மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் பார்த்தசாரதி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தாக போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்று இரவு கிடைத்தது. உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளுடன் இருந்த பார்த்த சாரதியை சுற்றி வளைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து அவரிட மிருந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எங்கி ருந்து கிடைக்கிறது? யார் யாருக்கெல்லாம் விநியோ கம் செய்தார் என்பன போன்ற கோணங்களில் உளுந்தூர் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கமேடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (70) என்பவரை கைது செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் அருேக உள்ள வெங்கமேடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (70) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும்.
    • கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில லாட்டரி துறையின் சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு முக்கிய பண்டிகை காலங்களில் அதிக பரிசுதொகையுடன் கூடிய லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.

    அதன்படி கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனை கடந்த 27-ந் தேதி மாநிலத்தில் தொடங்கியது. முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி குலுக்கல் நடக்கிறது.

    நாட்டிலேயே இதுதான் அதிகபட்ச பரிசுத் தொகை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. விற்பனை தொடங்கிய நாளில் இருந்து கடந்த 15-ந் தேதி வரை 20 லட்சத்து 50 ஆயிரம் சீட்டுகள் விற்பனையாகி உள்ளது. டிக்கெட் விற்பனையில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்திலும் திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

    கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி லாட்டரி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 30 லட்சம் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட அனுமதி உள்ளது. முதல் பரிசு பெறுபவர் 30 சதவீத வருமானவரிக்கு பிறகு சுமார் ரூ.17.5 கோடியை பெறுவார் என்றார்.

    ×