என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாக்கு மூட்டையில் போதை பொருள் கொண்டு வந்த வாலிபர் கைது
- அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மொபட்டில் வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
- கே.என்.பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்களை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர்
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் ராமர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மொபட்டில் வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அந்த நபர் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (32) என்பதும் சாக்கு மூட்டையை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து 13.02 கிலோ குட்கா மற்றும் மொபட்டையும் பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்து செல்வம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், இந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கர்நாடகாவில் வாங்கி வந்து உள்ளூர் பகுதியில் மளிகை கடைகளுக்கு விற்பனை செய்து வரும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கே.என்.பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்களை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர்






