என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A youth who sold alcohol"

    • கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கோபிசெட்டிபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் அரசு அனுமதி இன்றி மது விற்றது தெரியவந்தது.

    அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் தாலுகா பகுதியை சேர்ந்த ஆனந்த் (29) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.1,500 மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். 

    • அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த செல்வகுமார் என்பவரை கைது செய்தனர்.
    • 2 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் மற்றும் போலீசார் அங்கு அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் செல்வகுமார் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×