search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village Council Meeting"

    • கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    தாராபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மணக்கடவு ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மணக்கடவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் எஸ். சுப்பிரமணி, ஊராட்சி துணைத்தலைவர் மங்கலம் கு.செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் எஸ்.வி. செந்தில்குமார் கலந்து கொண்டார். தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட 15 தீர்மானங்கள் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அதற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் பதிலளித்து பேசினார். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.சகுந்தலா, முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ராஜதுரை, ஒன்றிய தி.மு.க. பொருளாளர் மாரிமுத்து, சட்ட ஆலோசகர் சகுந்தலா, ஊராட்சி மன்றவார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம நிர்வாக அதிகாரி, பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலர் ரேவதி நன்றி கூறினார்.

    • ஆலங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கபிஸ்தலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, ஆலங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஏ. எம். மோகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் ஊராட்சி செயலாளர் சேரன் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி சின்னப்பா, ஊராட்சி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், கருணாநிதி, மஞ்சுளா கோபால், ராணி கலியபெருமாள், ரோசாப்பூ சுந்தரமூர்த்தி, மதுபாலா மூர்த்தி, ரவி, சித்ரா அன்பரசன், மாலதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தி.மு.க ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும்,வரவு செலவு கணக்கு குறித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள், நடைபெற உள்ள பணிகள், குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் கோபால், தி.மு.க நிர்வாகிகள் சண்முகம், நேரு, சுரேஷ், அன்பழகன், கலியபெருமாள், மூர்த்தி, முத்துராமன், ராஜ் ,வசந்த், பிரகாஷ் ,அமீர், ராஜ்குமார், சாமிநாதன், உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் வேஷ்டி, புடவைகள் மற்றும் மதிய விருந்து ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் சார்பில் வழங்கப்பட்டது.

    • மாங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர் பான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    மானாமதுரை

    மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூர் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். இக்கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மகேந்திரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுகா தாரத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறை களைச் சேர்ந்த அலுவலர்கள் அரசு திட்டங்களை விளக்கி பொதுமக்கள், விவசாயிகள் கூறினர்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கிப் பேசினார். இக் கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பாக்கி யலட்சுமி அர்ச்சுணன். ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணா துரை, துணைத் தலைவர் முத்து சாமி, வட்டாட்சியர் ராஜா, ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர் பான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாங்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாங்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள தாயமங்களம் ரோடு, மற்றும் ஊராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளை மானா மதுரை நகராட்சியுடன் இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கல்குறிச்சி ஊராட்சி யில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அடிப்படை தேவையான குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டவுடன் பாதுகாப்பு பணியில் உள்ள சிப்காட் போலீசார் கிராம சபை கூட்டத்தை பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • காத்தனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • 10 ஊராட்சிகளில் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள், பொதுமக்களின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பறை யங்குளம் மலட்டாறு அணைக்கட்டில் இருந்து பிரிந்து செல்லும் சங்கரத் தேவன் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வ ரப்படாமல், கருவேல மரங்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுவதால், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகளுக்காக கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ஆப்பநாடு இளைஞர் சங்கம் மற்றும் விவசாயிகள் சபை சார்பில் மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை அதிகாரி களுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்புதான் அந்த கால்வாய் தூர்வாரப்பட் டது. அதனால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பின்பு மட்டுமே தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும் ஆப்பநாடு இளைஞர்கள் சங்கம், விவசாயிகள் சபை சார்பில் தன்னார்வலர்கள் துணையோடு இளை ஞர்களே கால்வாயை தூர் வார அதிகாரிகள் அனுமதி அளித்தால் போதும் என பலமுறை மாவட்ட நிர்வா கத்திடமும் நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்து வருகின்றனர்.

    அதிகாரிகள் அனுமதி தர மறுத்து வருவதால் காந்திெஜயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கமுதி, கடலாடியை சுற்றி உள்ள எஸ்.கீரந்தை, நாராயணபுரம், புதுக் கோட்டை, காத்தனேந்தல், ஏனாதி, எ.தரைக்குடி, எஸ்.எம்.இலந்தைகுளம், ஆப்பநாடு, மறவர் கரிசல் குளம், ஏ.உசிலங்குளம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள், பொதுமக்களின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    • கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சாபம் விட்டனர்.
    • இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் அருகே பயிர்காப்பீடு, வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து, கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு சாபம் விடுத்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொன்னக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட மட்டியாரேந்தல் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்திய பிரியா தலைமை தாங்கினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் அர்சுணன், வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கிய நாதன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத் தில் இப்பகுதி விவசாயி களுக்கு கடந்த 2 ஆண்டு களாக வறட்சி நிவாரணம், பயிர் காப்பீட்டுத்தொகை அதிகாரிகளின் அலட்சியம், ஒருதலைப் பட்சமான நடவடிக்கையால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

    மேலும் மானாவாரி நெல் சாகுபடி செய்த வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு சாபம் விடுத்து தங்களது கண்ட னத்தை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நாளை 429 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக கலெக்டர் கூறினர்.
    • பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை 2-ந் தேதி காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்திட உத்தர விடப்பட்டுள்ளது.

    இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நட வடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், 2023-24-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தி னை பொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதித்திட அரசு தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.
    • சுடுகாட்டுக்கு ெசல்லும் சாலையை தார்சாலையாக மாற்றி தரவேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு ஊராட்சி சேனாதிகாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாடு உள்ளது. வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.

    இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேனாதிகாட்டில் உள்ளசுடுகாட்டுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • சில ஊராட்சிகளில் சிறு, சிறு வாக்குவாதங்களுடன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    பல்லடம்:

    77-வது சுதந்திரதினத்தினை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதன்படி பல்லடம் வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் குடிநீர், தெருவிளக்கு, போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் புவனேஸ்வரி,அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் புனிதா சரவணன் தலைமையில் நடைபெற்றது. கரைப்புதூர் ஊராட்சியில் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

    இதேபோல செம்மிபாளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி தலைமையிலும், மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார் தலைமையிலும், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் தலைமையிலும், கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி.பழனிச்சாமி தலைமையிலும், மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம் தலைமையிலும், மல்லேகவுண்டம்பாளையத்தில் முத்துக்குமாரசுவாமி தலைமையிலும், பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன் தலைமையிலும், புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சி கிராம சபை தலைவர் கவிதாமணி கலந்து கொள்ளாததாலும், ஊராட்சி மன்ற கணக்கு வழக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி,பணிக்கம்பட்டி ஊராட்சி, அனுப்பட்டி ஊராட்சி, உள்ளிட்டஊராட்சிகளில் சிறு, சிறு வாக்குவாதங்களுடன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    • சுதந்திரதினத்தை முன்னிட்டு செந்துறை பகுதியில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.
    • மகளிர் குழுக்க ள், கிராம மக்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் செந்துறை ஊராட்சி தலைவர் சவரிமுத்து, பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவர் தேன்மொழிமுருகன், கோசுகுறிச்சி ஊராட்சி தலைவர் ஷாஜூதாபேகம், குட்டுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகம்மாள்மணி, சிறுகுடி ஊராட்சி தலைவர் கோகிலவாணிவீரராகவன்,சமுத்திராபட்டி ஊராட்சி தலைவர் சேதுஅமராவதி, ஊராளிபட்டி ஊராட்சி தலைவர் தேன்சேகர் தேனம்மாள், பூதகுடி ஊராட்சி தலைவர் பரமசிவம், ந.புதுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகம்மாள் மகாலிங்கம், ஆவிச்சிபட்டி ஊராட்சி தலைவர் துர்க்கா சங்கீதா ஆகியோர் தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது.

    இதில் அந்தந்த ஊராட்சி மன்றதுணைதலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள், பற்றாளர்கள், உதவியாள ர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.ஊராட்சி செயலர்கள் செந்துறை கருப்பையா, பிள்ளையார் நத்தம் பாக்கியலட்சுமி, குடகிப்பட்டி செல்வராஜ்,பூதகுடி ராஜேஸ்வரி, சிறுகுடி வீரபாண்டி, ஆவிச்சிபட்டி நாதன், சமுத்திராபட்டி சின்னச்சாமி, ஊராளிபட்டி ராஜேஸ்கண்ணா, குட்டு ப்பட்டி சிந்து, சிரங்காட்டு ப்பட்டி அசோக்குமார், கோட்டை யூர்செந்தில், கோசுகுறிச்சி சந்திரன், சேத்தூர் கதிர்வேல் ஆகியோர் தீர்மான ங்களை வாசித்தனர். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம்,

    கிராம ஊராட்சி யின் தணிக்கை அறிக்கை, குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி மேம்படுத்துவது, உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இதில் தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார திட்டம், கிராம வறுமை ஒழிப்பு மகளிர் குழுவினர் பங்கேற்ற னர். மேலும் மகளிர் குழுக்க ள், கிராம மக்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • உழைப்பாளா் தினத்தையொட்டி மே 1-ந்தேதி பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது.
    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    இச்சிப்பட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.

    உழைப்பாளா் தினத்தையொட்டி மே 1-ந்தேதி பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்காததால் இச்சிப்பட்டி ஊராட்சிகிராம சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இச்சிப்பட்டி கிராம சபைக்கூட்டம் பெத்தாம்பூச்சிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் இச்சிப்பட்டி பகுதி பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஊராட்சியை மேம்படுத்துவதற்கு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று ஊராட்சித் தலைவா் வேல்மணி தெரிவித்துள்ளாா். 

    • ஆண்டிப்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் மீனாள் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யூனியன் ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்றத்தில் மேதின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் செல்வம் வரவேற்று தீர்மான அறிக்கை வாசித்தார். யூனியன் பற்றாளர் முத்தையா ''எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்'' உறுதி மொழி வாசித்தார்.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டயானா, கிராம நிர்வாக அலுவலர்கள் கீதா, பாண்டியம்மாள், உமாதேவி, தலைமை ஆசிரியர் கணேசன், கிராமசுகாதார செவிலியர் சித்ரா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி உறுப்பினர் அழகர் நன்றி கூறினார்.

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் கமலக்கண்ணன், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, கீதா, புவனேஸ்வரி, மீனாட்சி, சங்கர் கணபதி, புருஷோத்தனி, விமலா, துரைசாமி முன்னாள் துணை தலைவர் ரமேஷ் உள்பட150- க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் கலந்து கொண்டனர்.

    ×