search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
    X

    ஆலங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    ஆலங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

    • ஆலங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கபிஸ்தலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, ஆலங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஏ. எம். மோகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் ஊராட்சி செயலாளர் சேரன் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி சின்னப்பா, ஊராட்சி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், கருணாநிதி, மஞ்சுளா கோபால், ராணி கலியபெருமாள், ரோசாப்பூ சுந்தரமூர்த்தி, மதுபாலா மூர்த்தி, ரவி, சித்ரா அன்பரசன், மாலதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தி.மு.க ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பணிகள், இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும்,வரவு செலவு கணக்கு குறித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள், நடைபெற உள்ள பணிகள், குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் கோபால், தி.மு.க நிர்வாகிகள் சண்முகம், நேரு, சுரேஷ், அன்பழகன், கலியபெருமாள், மூர்த்தி, முத்துராமன், ராஜ் ,வசந்த், பிரகாஷ் ,அமீர், ராஜ்குமார், சாமிநாதன், உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் வேஷ்டி, புடவைகள் மற்றும் மதிய விருந்து ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மோகன் சார்பில் வழங்கப்பட்டது.

    Next Story
    ×