search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vijayadharani"

    • தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது.
    • பா.ஜனதாவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய்தான் கூறுவார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இதனையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உடன் இருந்தார்.

    அதன்பின்னர் சட்டசபை வளாகத்தில் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. பேரிடர், கொரோனா என பல கட்டங்களை கடந்து பல புதிய திட்டங்களால் தமிழகத்தை உயர்த்தி வருகிறது. இந்த பட்ஜெட் சிறப்பானது.

    பா.ஜனதாவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய்தான் கூறுவார்கள். மத்திய அரசின் வீடு வசதி திட்டம் குளறுபடியானது. இதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.

    விஜயதாரணி 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். வக்கீல். பா.ஜனதா எப்படி என்றால் பிள்ளை பிடிக்கும் கட்சி. யார், யார் திறமையாக இருக்கிறார்களோ, விவரமாக இருக்கிறார்களோ அவர்களை பிடிக்கலாமா? என்று வலைவீசுவார்கள். அவர்கள் வீசும் வலைக்கு எங்கள் விஜயதாரணி சிக்க மாட்டார். அவர் புத்திசாலி.

    ஒரு வழக்கு சம்பந்தமாக, டெல்லி போய் இருக்கிறார். உடனே பா.ஜனதா தலைவர்கள் அவரை சேர்த்துக்கொள்ளலாமா? என்று துடிக்கிறார்கள். அது நடக்காது. அவருக்கு (விஜயதாரணி) காங்கிரஸ் கட்சி மீது எந்த அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சி அவருக்கு நிறைய செய்துள்ளது. இன்னும் செய்ய தயாராக இருக்கிறது.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    இதற்கிடையே செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவெல்லபிரசாத் முன்னிலையில் நாளை (புதன்கிழமை) மாலை 3.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

    இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மாற்றத்தை உருவாக்க மாணவர்கள் சுய சிந்தனையுடன் தங்களை தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் விஜயதரணி எம்எல்ஏ பேசினார்.
    நாகர்கோவில்:

    விளவங்கோடு சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட அருமனை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கம்ப்யூட்டர்களை விஜயதரணி எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    புதிய கண்டுபிடிப்புகளை நம் மாணவர்களும் உருவாக்க வேண்டும். மாற்றத்தை உருவாக்க மாணவர்கள் சுய சிந்தனையுடன் தங்களை தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஆராய்ச்சி மனப்பான்மையை தனதாக்கி கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் புதிய புதிய புத்தகங்கள் அறிவு தேடல்களை படித்து ஆராய்ந்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நேரம் தவறாமை, கீழ் படிதல், சமூக சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவ-மாணவிகள் நன்கு விளையாடி உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைக்க வேண்டும். இரக்க சிந்தனையோடு வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் மோகனன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சாந்தப்பன் நாயர், கமலன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜோதிஸ்குமார், அருள்ராஜ், சுரேஷ், ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தமிழக சட்டசபையில் சபாநாயகர் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். #TNAssembly #congress #Vijayadharani
    சென்னை:

    சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.

    அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜயதரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர்.

    அவர்களைப் பார்த்து விஜயதரணி, ‘‘என்னை தொடாதீர்கள்’’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆவேசமாக கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

    பின்னர் விஜயதரணி நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

    சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன். நேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.


    சபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை அமுக்கியும் வெளியேற்றினார்கள். சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார்.

    இவ்வாறு விஜயதரணி கண்ணீர் மல்க கூறினார்.

    விஜயதரணி வெளியேற்றப்பட்டதை கண்டித்து மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #congress #Vijayadharani
    ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்மானம் நிறைவேற்றி தி.மு.க.வை மீண்டும் சபைக்கு வரவழைக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் மற்றும் விஜயதரணி கோரிக்கை விடுத்துள்ளனர். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்விநேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி பேசியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்படுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அந்த ஆலைக்கு மத்திய அரசு கொடுத்த லைசென்சை ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை அனுமதி ரத்து செய்வது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    காமராஜர், எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது சட்டமன்றத்தை புறக்கணித்த எதிர்க்கட்சியை அழைத்து மீண்டும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க வைத்திருக்கிறார்கள். அதுபோல் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை அழைத்து அனைவரும் இணைந்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

    சபையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி நாங்கள் தான். எனவே தி.மு.க.வை அவைக்கு வரவழைக்க வேண்டும் என்று சபாநாயகருக்கும் முதல்வருக்கும் கோரிக்கை விடுக்கிறோம்.

    அபுபக்கர் (முஸ்லிம் லீக்):- எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருக்கும் போது தி.மு.க. ஒட்டுமொத்தமாக சபையை புறக்கணித்தது. உடனே கருணாநிதியை எம்.ஜி.ஆர் அழைத்து சட்டசபையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். எம்.ஜி.ஆர். வழியில் வந்த இந்த அரசு அதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    தினகரன் (அ.ம.மு.க.):- நான் அரசுக்கு வைக்கும் கோரிக்கை அனைத்து கட்சிகளும் இந்த சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதுதான். தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சி. அதையும் அழைத்து சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக என்ன நடந்தது என்ற உண்மை மக்கள் அனைவருக்கும் தெரியும். சட்டமன்றம் என்பது மக்கள் கருத்துக்களை தெரிவித்து தீர்வுகாண வேண்டிய இடம். எனவே பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வையும் வரவழைக்க வேண்டும். அவர்கள் ஜனநாயக கடமையாற்ற சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீசெல்வம்:- கருத்துக்களை சொல்ல அனைவருக்கும் முழு உரிமை இருக்கிறது. அதை தி.மு.க. சபையில் வந்து சொல்லலாம். அதை விட்டுவிட்டு வெளியே கூட்டம் நடத்துகிறார்கள். ஜனநாயக கடமையாற்ற அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அவர்களை யாரும் வெளியேற்றவில்லை. எனவே அவர்களாகவே சபைக்கு வந்து பங்கேற்கலாம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly
    ×