search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "udangudi"

    • நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
    • நாளை மறுநாள் (2-ந்தேதி) கொடை விழா நிறைவு பூஜையும், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி பெருங்கொடை விழாவை யொட்டி கடந்த 29-ந் தேதி காலை 8 மணிக்கு யாகசாலை பூஜை, செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, வருஷா பிஷேகம் நடந்தது.

    காலை 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.

    நேற்று இரவு 7 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வந்து பக்த ர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    இன்று (செவ்வாய்கிழமை) காலை 9மணிக்கு 108 பால்குடம் பவனி, வில்லிசை பகல் 1 மணிக்கு அலங்கார தீபாரா தனை, அம்மன் வீதியுலா, இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை, இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, சந்தன மாரி யம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.

    நாளை பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவில் கரகாட்டம், மாவிளக்கு பூஜை, முத்தாரம்மன் பூஞ்சப்பர பவனியும் நடைபெறும். நாளை மறுநாள் (2-ந்தேதி) கொடை விழா நிறைவு பூஜையும், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    • விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
    • நாளை 108 பால்குடம் பவனி, இரவில் சுமங்கலி பூஜை, சதந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி கொடை விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, வருஷாபிஷேகம், 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனியும் நடக்கிறது. நாளை காலை 108 பால்குடம் பவனி, அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, இரவில் சுமங்கலி பூஜை, அலங்கார தீபாராதனை, சதந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி, நாளை மறுநாள் பகலில் சிறப்பு பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவில் கரகாட்டம், மாவிளக்கு பூஜை, முத்தாரம்மன் சப்பர பவனியும், தினமும் வில்லின சுவாமிகள் தெருவீதி உலாவும் நடைபெறும்.ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    • தண்டுப்பத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுப்பத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இந்நிகழ்சிக்கு திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், துணை தாசில்தார் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் தாளாளரும், முதல்வருமான சோ. மீனா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகஅதிகாரி கண்ணபிரான், துணை முதல்வர் சாந்திஜெய ஸ்ரீ, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் கிருபைமேரி கிறிஸ்டி பாய், துணைத் தலைவர் அதிமுத்து என்ற காமராஜர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • உடன்குடி மெயின் பஜார், பஸ் நிலையம் மற்றும் பஜார் வீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • மேலும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பஜார் வீதிகளில் ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்தபடுகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி மெயின் பஜார், பஸ் நிலையம் மற்றும் பஜார் வீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுமார்15 நிமிடம் முதல் 30 நிமிடம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு காரணம் போக்குவரத்து போலீசார் உடன்குடி பஸ் நிலையம், மற்றும் பஜார் பகுதியில் இருப்பதில்லை, மேலும் தேவை இல்லாமல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பஜார் வீதிகளில் ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்தபடுகிறது. அடிக்கடி ஒரு வழி பாதை மீறப்படுகிறது. இதையும் போலீசார் கண்டுகொள்வதில்லை.

    மேலும் கடைக்கு உள்பகுதியில் எவ்வளவு இடம் இருந்தாலும், சாலை ஓரமாக பொருட்களை குவித்து வைக்கின்றனர். இவைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு நெரிசல் காண வேண்டும். என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • திருச்செந்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் பாரதீய ஜனதா கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி ஓன்றியத்தில் குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் 4 இடங்கள், மெஞ்ஞானபுரம் அருகே 2 இடங்கள், திருச்செந்தூர் என 7 இடங்களில் பாரதீய ஜனதா கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலர் சிவமுருகன் ஆதித்தன் தலைமை தாங்கி னார். சிறப்பு அழைப்பா ளராக நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி பங்கேற்று கொடியேற்றி வைத்து பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.

    தமிழகத்தில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அகற்றம், தொண்டர்கள் கைது என அடக்குமுறைகளை தி.மு.க. அரசு ஏவிவிடுகிறது. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    தமிழகத்தில் இந்துக்கள் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர் அதற்கு எல்லாம் வருகின்ற பாராளு மன்ற தேர்தல் முடிவு அமையும் என்று பேசினார்.

    இதில் உடன்குடி ஓன்றிய பா.ஜ.க. தலைவர் அழகேசன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி தேன்மொழி, பரமன்குறிச்சி சக்தி கேந்திர தலைவர் வரதராஜ், ஓன்றிய மகளிரணி தலைவி தமிழ் செல்வி, முன்னாள் ஓன்றிய தலைவர் ஜெயக்குமார், முன்னாள் மாநில பொதுக் குழு உறுப்பினர் பரமசிவன், நிர்வாகிகள் பத்மாவதி, சிவக்குமார், பொன்ராஜ், புஷ்பா, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காப்பு கட்டிய பின்னர், தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
    • சிறுவர்களுக்கு பிடித்த குரங்கு, கரடி, காளி மற்றும் சுவாமி வேடங்கள் உட்பட விதவிதமான வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பக்தர்கள் முதலில் கடலில் நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கி வந்தனர்.

    தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய பின், கோவிலில் இலவசமாக வழங்கப்படும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு என்பதை தங்களது வலது கையில் கட்டிக் கொண்டு, தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    உடன்குடி, பரமன்குறிச்சி, சீர்காட்சி, தாண்டவன் காடு, கொட்டங்காடு, செட்டியாபத்து, தண்டபத்து மற்றும் குலசேகரன் பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் திரும்பிய திசைகள் எல்லாம் தசரா பக்தர்கள் வீதி,வீதியாக சென்று காணிக்கை வசூல் செய்யும் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

    சிறுவர்களுக்கு பிடித்த குரங்கு, கரடி, காளி மற்றும் சுவாமி வேடங்கள் உட்பட விதவிதமான வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை 10-ம் திருநாளான வருகின்ற 24-ந் தேதி கோவில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று இரவு குலசேகரன் பட்டினம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரசம்ஹார காட்சி நடைபெறும். மறுநாள் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 7-ம் திருநாள் ஆகும்.
    • இன்று காலையிலே தசரா குமுவினர் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்தனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 7-ம் திருநாள் ஆகும். காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிசேகங்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.

    மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவு, பரத நாட்டியம், மற்றும் கலை நிகழ்சி நடைபெறும், இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    மேலும் ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலே கடற்கரைக்கு வந்துகடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர், இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்துதங்களது வலது கையில் கோவிலில் இலவசமாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கையில் கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர்ஊராகசென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்கு வார்கள். ஏராளமான தசரா குழுவினர் கூட்டம் கூட்டமாக வந்து காப்பு கட்டினர். இன்று காலையிலே தசரா குமுவி னர் வேடம் அணிந்துஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்தனர். அனைவரும் 10-ம் திருநாள் ஆன வருகிற 24-ந் தேதி அன்று கோவிலில் கொண்டு காணி க்கையை சேர்ப்பார்கள்.

    அன்று இரவு பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் கடற்கரையில் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். தசரா திருவிழா ஏற்பாடு களை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி செயல் அலுவலர் இராமசுப்பிரமணியன், கணக்கர் டிமிட்ரோ, மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று 5-ம் நாள் ஆகும்.
    • 10-ம் நாளான வருகிற 24-ந்தேதி இரவு பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று 5-ம் நாள் ஆகும். காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு நடக்கிறது. மேலும் நகைச் சுவை பட்டிமன்றம், வில்லிசை நடைபெறும். இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    மேலும் ஏராளமான பக்தர்கள் இன்றும் காலை யிலே கடற்கரைக்கு வந்து கடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர். இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவச மாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக் கொண்டனர்.

    காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். அந்த காணிக்கைகளை 10-ம் நாளான வருகிற 24-ந்தேதி கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று இரவு பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும்.

    தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் ராம சுப்பிர மணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ள னர்.

    • முத்தாரம்மன் கோவிலில் மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணி வரை நடைபெறும்.
    • இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியன் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 4-ம்நாள் ஆகும்.இதையொட்டி காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணி வரை நடைபெறும். இரவு 9 மணிக்கு அன்னை முத்தா ரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியன் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    மேலும் ஏராளமான பக்தர்கள் இன்றும் காலை யிலே கடற்கரைக்கு வந்து கடல் நீர் தீர்த்தம் எடுத்து சென்றனர். இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவச மாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக் கொண்டனர்.

    காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். அந்த காணிக்கைகளை 10-ம் திருநாள் அன்று கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.

    தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்பு மணி தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி செயல் அலுவலர் ராமசுப்பிர மணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ள னர்.

    • 3-ம் திருநாளான இன்று காலை முதல் இரவு வரை மண்டகபடிதாரின் சிறப்பு அபிசேகம் தொடர்ந்து நடைபெறும்.
    • ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலே கடற்கரைக்கு வந்து கடல்நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 3-ம் திருநாள் ஆகும். காலை முதல் இரவு வரை மண்டகபடிதாரின் சிறப்பு அபிசேகம் தொடர்ந்து நடைபெறும்.

    மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணிக்கு பரதநாட்டியம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ரிசபவாகனத்தில் பார்வதி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலே கடற்கரைக்கு வந்துகடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.

    இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவசமாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர்ஊராகசென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள், அந்த காணிக்கைகளை 10-ம் திருநாள் அன்று கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.

    தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    • விரதம் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவசமாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக்கொண்டனர்.
    • காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 2-ம் திருநாள் ஆகும். இன்று காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷே கங்களும், மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணிக்கு பரதநாட்டியம் நடைபெறும்.

    இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கற்பக விருட்சகவாகனத்தில் விசுவ கர்மேஸ்வரர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலேயே கடற்கரைக்கு வந்துகடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.

    இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவி லுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவச மாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக்கொண்டனர்.

    காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். காணிக்கை களை 10-ம் நாள் அன்று கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.

    தசரா திருவிழா ஏற்பாடு களை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு இந்து சமய அறநிலை யத்துறை யினரும் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலிருந்து சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்த மாலையை சீனிவாசபெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.
    • மாலையில் நெல்லை பாரதி கலைக்குழுவினரின் பக்தி பரதநாட்டியம், பெருமாள் திருவீதி உலா, கருட சேவையும் நடைபெற்றது.

    உடன்குடி:

    புன்னைநகர் வனத்திருப்பதி சீனிவாசபெருமாள், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று மூலவர் உற்சவர் திருமஞ்சனம், மூலவர் புஷ்ப அலங்காரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலிருந்து சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்த மாலையை சீனிவாசபெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் திருவாராதனம் தளிகை சாத்துமுறை கோஷ்டி, மாலையில் நெல்லை பாரதி கலைக்குழுவினரின் பக்தி பரதநாட்டியம், பெருமாள் திருவீதி உலா, கருட சேவையும் நடைபெற்றது. தொடர்ந்து வான வேடிக்கையும் நடந்தது. காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராஜகோபாலின் மகன் சரவணன் உத்தரவின் பேரில் கோவில் மேலாளர் வசந்தன் செய்திருந்தார்.

    ×