குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு முத்தாரம்மன் ஆனந்த நடராஜர் கோலத்தில் எழுந்தருள்கிறார்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 7-ம் திருநாள் ஆகும்.இன்று காலையிலே தசரா குமுவினர் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்தனர்.
நேற்று இரவு  அம்மன் மகிஷா சுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளிய காட்சி.
நேற்று இரவு அம்மன் மகிஷா சுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளிய காட்சி.
Published on

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 7-ம் திருநாள் ஆகும். காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிசேகங்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.

மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவு, பரத நாட்டியம், மற்றும் கலை நிகழ்சி நடைபெறும், இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

மேலும் ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலே கடற்கரைக்கு வந்துகடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர், இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்துதங்களது வலது கையில் கோவிலில் இலவசமாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கையில் கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர்ஊராகசென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்கு வார்கள். ஏராளமான தசரா குழுவினர் கூட்டம் கூட்டமாக வந்து காப்பு கட்டினர். இன்று காலையிலே தசரா குமுவி னர் வேடம் அணிந்துஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்தனர். அனைவரும் 10-ம் திருநாள் ஆன வருகிற 24-ந் தேதி அன்று கோவிலில் கொண்டு காணி க்கையை சேர்ப்பார்கள்.

அன்று இரவு பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் கடற்கரையில் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். தசரா திருவிழா ஏற்பாடு களை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி செயல் அலுவலர் இராமசுப்பிரமணியன், கணக்கர் டிமிட்ரோ, மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com