search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train hit"

    பண்ருட்டியில் ரெயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி, கடலூர் ரோட்டில் திருவதிகை ஆயில் மில் பஸ் ஸ்டாப் அருகில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு இன்று காலை இந்த வழியாக ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயில் மோதியதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை, கை, கால் துண்டிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து கடலூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அருகே ரெயில் மோதி 75 வயது மதிக்கத்தக்க முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 75 மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்த முதியவர் கருப்பு பச்சை நீலம் கலந்த டீ சர்ட் அணிந்திருந்தார். வேட்டியும் அணிந்து இருந்தார் இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. முதியவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தது இருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் ரெயிலில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க டிரைவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு 4-ம் கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலை சிதறி பிணமாக கிடந்ததார். இதையடுத்து அந்த உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள டக்கம்மாள்புரம் முள்ளூரை சேர்ந்த லாரி டிரைவரான முருகபெருமாள் (வயது 40) என்பது தெரியவந்தது. அவர் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி இறந்தாரா? ரெயிலில் இருந்து தவறிவிழுந்து பலியானாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்டவாளத்தில் நடந்து சென்ற பீகார் வாலிபர் மீது ரெயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விருத்தாசலம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பப்லு (வயது 30). இவர் திருச்சி அருகே உள்ள லால்குடியில் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதற்காக லால்குடி அருகே உள்ள பகுதியில் தங்கியிருந்தார்.

    இன்று காலை லால்குடி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார். பின்னர் வேலை முடிந்து தண்டவாளத்தில் நடந்து சென்றார். அந்த நேரத்தில் விருத்தாசலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரெயில் திடீரென பப்லு மீது மோதியது.

    இதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பப்லு பரிதாபமாக இறந்தார். இது குறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பீளமேடு அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    கோவை சவுரிபாளையம் அருகே உள்ள நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 15). இவர் உடையாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் நேற்று பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாடத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். விழா முடிந்ததும் தோழிகளுடன் வெளியே சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார்.

    வீட்டுக்கு செல்வதற்காக விஷ்ணு பிரியா பீளமேடு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் விஷ்ணு பிரியா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரெயில் அடிபட்டு இறந்து கிடந்த விஷ்ணு பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊஞ்சலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை ரெயிலில் அடிபட்டு இறந்தவர் சிவகிரியை அடுத்த பருத்திகொட்டான் பாளையத்தை சேர்ந்த வேலுசாமி(வயது55).கூலி தொழிலாளி என தெரிய வந்தது.

    வேலுசாமிக்கு சரியாக காது கேட்காது என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வேலுசாமி ஊஞ்சலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் வேலுசாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேலுசாமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுடியில் உள்ள லாக்போரோக் ரெயில் நிலையத்தில் மூன்று பேர் ரெயில் மோதி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    லண்டன்:

    பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லாக்போரோக் ரெயில் நிலையத்தில் இன்று காலை மூன்று நபர்கள் ரெயில் மோதி பலியாகியுள்ளனர். அவர்கள் குறித்த விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலியான மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவராகவோ, நண்பர்களாகவோ இருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எப்படி அவர்கள் மூவரும் ரெயில் மோதி இறந்தனர் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 
    ரெயில் தண்டவாளத்தில் தலை நசுங்கி உடல் துண்டான நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் எதிரே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் அருகில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா போலீசில் புகார் செய்தார். ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கறுப்பு-சிவப்பு கட்டம் போட்ட ரெடிமேட் சட்டையும், நீலநிற பேண்ட்டும் அணிந்திருந்தார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் ரெயிலில் அடிபட்டு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்பது தெரியவில்லை.

    வாலிபர் இறந்து கிடந்த இடம் அருகே பச்சை நிற சீட் கவர் பொருத்தப்பட்ட சைக்கிள் நீண்ட நேரமாக கேட்பாரற்று இருந்தது. இதில் வாலிபர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது குறித்து மதுரை ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் வேல்முருகன், சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×