search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly died"

    வெம்பாக்கம் அருகே நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து இறந்தார்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அருகே உள்ள கூழபந்தல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 78). விவசாயி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற கார் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசபட்டு பலத்த காயமடைந்தார்.

    அவரை மீட்ட அப்பகுதியினர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் .

    அங்கு ஏழுமலை சிகிச்சைபலனின்றி இறந்தார். இது குறித்து தூசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அருகே ரெயில் மோதி 75 வயது மதிக்கத்தக்க முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 75 மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்த முதியவர் கருப்பு பச்சை நீலம் கலந்த டீ சர்ட் அணிந்திருந்தார். வேட்டியும் அணிந்து இருந்தார் இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. முதியவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தது இருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற பேத்தி படுகாயம் அடைந்தார்.

    குடவாசல்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே எட்டியலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 55). ராஜகோபால் தனது பேத்தி சாருமதியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது மணக்கால் ஜீவா நகரை சேர்ந்த மணிகண்டன் (22) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள், ராஜகோபால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜகோபாலுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சாருமதிக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயம் அடைந்த ராஜகோபால், சாருமதியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக இறந்தார். சாருமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து குடவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சந்தான மேரி, ராஜா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×