search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic change"

    • பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    • வாகனங்களை மாநகராட்சி நிறுத்தும் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

    கோவை,

    தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் 24-ந்தேதிவரை பொதுமக்கள் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி நிறுத்தும் இடம் அல்லது கடை உரிமையாளர்களின் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். ஆத்துப்பாலத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதியை பயன்படுத்தாமல் உக்கடத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி வாலாங்குளம், சுங்கம் வழியாக செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளையம், மருதமலை, தடாகம் செல்லும் வாகன ஓட்டிகள் பேரூர் பைபாஸ் செல்லும் ரவுண்டானா, செட்டி வீதி, சலீவன் வீதி காந்திபார்க் வழியாக செல்ல வேண்டும்.

    பாலக்காட்டில் இருந்து கோவை வரும் வாகனங்கள் போத்தனூர், சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் சுண்ணாம்பு காளவாயில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு உக்கடம் வழியாக செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து கோவைப்புதூர் மதுக்கரை மற்றும் பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் ரவுண்டானா புட்டுவிக்கிரோடு வழியாக செல்லலாம்.

    காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டில் பொருட்கள் வாங்க வருபவர்கள் தவிர, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள் 100 அடி சாலை, சிவானந்தா காலனி சாலையை பயன்படுத்தி செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டில் பொருட்கள் வாங்க வருபவர்கள் மாநகராட்சி வாகன நிறுத்த இடங்கள், கடைகளின் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்களில் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தை வாகனம் நிறுத்தும் இடங்களாக பயன்படுத்தலாம்.

    சாலைகளில் வாகனங்களை நிறுத்த கூடாது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, கிராஸ்கட் வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை லட்சக்கணக்கானோர் கடை வீதிகளில் திரள வாய்ப்புள்ளது.

    கோவை,

    தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதற்காக கோவையில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    குறிப்பாக ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, கிராஸ்கட் வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வருகிறார்கள்.

    தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை லட்சக்கணக்கானோர் கடை வீதிகளில் திரள வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் 24-ந் தேதி வரை கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து மாற்ற விவரம் வருமாறு:-

    ஒப்பணக்கார வீதியில் பொதுமக்களின் வாகனம் நிறுத்த அனுமதி கிடையாது.அந்தந்த கடையின் வாகன நிறுத்துமிடம் அல்லது மாநகராட்சி வாகன நிறுத்துமிடத் தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

    ஆத்துப்பாலத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, அவிநாசி ரோடு செல்லும் வாகனங்கள், ஒப் பணக்கார வீதியை பயன்படுத்தாமல், உக்கடத்தில் இருந்து வாலாங்குளம், சுங்கம் வழியாக சென்று விடலாம்.

    உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளையம், மருதமலை, தடாகம் செல்லும் வாகனஓட்டிகள், பேரூர் பைபாஸ் ரோடு, செல் வபுரம் ரவுண்டானா, செட்டி வீதி, சலிவன் வீதி, காந்தி பார்க் வழி யாக செல்லலாம்.

    பாலக்காட்டில் இருந்து கோவை மாநகருக்குள் வரும் வாகனங்களில், போத்தனுார், சுந்தரா புரம், பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிக்கு செல்லும் வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் சுண்ணாம்பு காளவாயில் இருந்து இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு, உக்கடம் வழியாக செல்லலாம்.

    உக்கடத்தில் இருந்து கோவைபுதுார், மதுக்கரை, பாலக் காடு செல்லும் வாகனங்கள், பேரூர் பைபாஸ் ரோடு, புட்டுவிக்கி ரோடு வழியில் செல்ல வேண்டும்.

    காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பொருள் வாங்க வருபவர்களை தவிர, ஆர்.எஸ்.புரம், வட வள்ளி, மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள், 100 அடி சாலை, சிவானந்தா காலனி சாலையை பயன்படுத்தி செல்லலாம்.

    காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பொருள் வாங்க வருபவர்கள், மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தையோ அல்லது அந்தந்த கடையின் பார்க்கிங் இடத்தையோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். சனி, ஞாயிறு விடு முறை நாட்களில், கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தை வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்த லாம். சாலையில் வாகனம் நிறுத்தக்கூடாது.

    இவ்வாறு மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பாதசாரிகள் அதிகமாக வந்து செல்லும் தெற்குமாசி வீதி, நேதாஜி ரோடு, மேலக்கோபுரம் தெரு, கீழமாரட் வீதி, கீழஆவணி மூலவீதி, தெற்குஆவணி மூல வீதி ஆகிய பகுதிகளில் நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை வாகனங்கள் நிறுத்த கூடாது.

    தல்லாகுளம், நத்தம்- அழகர்கோவில்-புதூர் செல்லூர் சாலைகள் வழியாக வரும் வாகனங்கள் கோரிப்பாளையம் மினி பஸ் கட்டண நிறுத்தம் மற்றும் தமுக்கம் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

    விரகனூர், காமராஜர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தெப்பக்குளம் சுற்றிய 4 பகுதிகள் மற்றும் சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் நிறுத்த வேண்டும்.

    கீழவெளி வீதி, தெற்குமாரட் வீதி, தெற்கு வெளி வீதியில் இருந்து வரும் வாகனங்கள், சிந்தாமணி ரோட்டில் உள்ள தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

    திருப்பரங்குன்றத்தில் இருந்து வரும் வாகனங்களை மதுரை கல்லூரி மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

    பைபாஸ் ரோடு, எல்லீஸ் நகர், காளவாசல், மேலவெளி வீதியில் இருந்து வரும் வாகனங்களை சேதுபதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்தலாம்.

    வடக்கு வெளி வீதி, சிம்மக்கல், தமிழ்ச்சங்கம் ரோடு, ஒர்க் ஷாப் ரோடு, யானைக்கல் பகுதிகளில் இருந்து தரைப்பாலம் வழியாக வரும் வாகனங்கள், வைகை தென்கரை சாலையில் நிறுத்தலாம்.

    மதுரை நகருக்குள் நாளை (22-ந் தேதி) பகல் நேரத்தில் மட்டும் கீழமாரட், நான்கு மாசி- ஆவணி மூல வீதிகளில் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இரவு 12 மணிக்கு மேல் வரலாம்.

    பைபாஸ் ரோடு, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடி ரோடு, கே.கே. நகர் 80 அடி ரோடு, மூன்று மாவடி சந்திப்பு, புது நத்தம் ரோடு, அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு, கூடல்நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை - ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் டவுன் பஸ்களை தவிர லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு இன்றும் நாளையும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அனுமதி இல்லை.

    மதுரை நகருக்குள் லாரிகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல 23-ந் தேதி அனுமதி இல்லை. அன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்களின் நலன் கருதி நேதாஜி ரோடு, மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, மேல ஆவணி மூல வீதி, கீழஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூல வீதி ஆகிய வீதிகளில் இருசக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பல்வேறு தரப்பினரும் பண்டிகைக்காக பொருள் வாங்க நகரின் கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    • பாதசாரிகள் ரோட்டில் இறங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர்:

    வருகிற 24-ந் தேதி, தீபாவளி கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ள திருப்பூர் நகரில் போனஸ் பெறும் தொழிலாளர்கள் பண்டிகை கொண்டாட புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தவிர பல்வேறு தரப்பினரும் பண்டிகைக்காக பொருள் வாங்க நகரின் கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    முக்கிய கடை வீதிகளில் உள்ள பெரிய, சிறிய கடைகள் மட்டுமின்றி பண்டிகை கால விற்பனையில் தரைக்கடைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் திருப்பூர் நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் தரைக்கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு விற்பனை தூள் பறக்கிறது.

    வெளி மாவட்ட, வெளி மாநில சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, உள்ளூர் பகுதியை சேர்ந்த சாலையோர வியாபாரிகளும் அதிக அளவில் இது போல் கடை விரித்துள்ளனர். இவற்றில் பொதுமக்களும் ஆர்வத்துடன் பொருட்களை விலை பேசி வாங்கிச் செல்கின்றனர்.

    பண்டிகை கால போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் குமரன் ரோடு, காமராஜ் ரோடு பகுதிகளில் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முனிசிபல் ரோடு பகுதியில் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.பாதசாரிகள் ரோட்டில் இறங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்து அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மாநகரில் மக்கள் கூட்டம் பஸ் நிலையங்களில் அதிகமாகவில்லை. மேலும் பிரதான சாலைகளில் வாகன நெரிசலும் பெரிய அளவில் இல்லாததால் போக்குவரத்து மாற்றத்தை நாளை 21-ந் தேதி முதல் அமல்படுத்த மாநகர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க மாநகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் குமரன் ரோட்டில் சாலையோர தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதசாரிகள் நடக்க வசதி செய்யப்பட்டுள்–ளது. இருசக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    அதுபோல் குமரன் ரோட்டில் இருந்து ஊத்துக்குளி ரோடு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு பகுதியில் சாலையோரம் மரக்கட்டைகளுடன் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதசாரிகள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதுபோல் ஜேப்படி ஆசாமிகளை கண்காணிக்க மப்டியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வருகிற 24ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பின்னலாடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கி வருகின்றன. திருப்பூர் மக்கள் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டனர். ஆடை ரகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது என பண்டிகை கால பர்சேசில் ஈடுபட்டுவருகின்றனர்.

    இதனால் வழக்கத்தைவிட பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. மக்களின் பண்டிகை கால பண தேவையை பூர்த்தி செய்ய ஏ.டி.எம்., மையங்களை தயார்நிலையில் வைத்திருக்க மாவட்ட முன்னோடி வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து, மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் அலெக்சாண்டர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 561 வங்கி கிளைகள் உள்ளன. 800க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில் 70 சதவீத ஏ.டி.எம்., மையங்களில், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், 30 சதவீத மையங்களில் அந்தந்த வங்கிகள் மூலம் நேரடியாகவும் பணம் நிரப்பப்படுகிறது.

    தீபாவளி நெருங்கிவிட்டது. பண்டிகை கால பண தேவைகளுக்காக, ஏ.டி.எம்., மையங்களை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சீரான இடைவெளியில் பணம் நிரப்பி ஏ.டி.எம்., மையங்களை தொடர்ந்து இயக்க நிலையில் வைத்திருக்கவேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பண்டிகை காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும். கண்காணிப்பு கேமரா பொருத்தியும், செக்யூரிட்டி நியமித்தும் வங்கிகள் தங்கள் ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராணிப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
    • ஆற்காட்டிற்கு பஸ்கள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் சீக்க ராஜபுரம் அருகே, சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சா லையில் அமைந்துள்ள ெரயில் பாதையை அகலப்படுத்தி, உறு திப்படுத்தும் பணி தொடங்கவுள்ளது. இதற்காக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, பெங்களூர், சித்தூர், காட்பாடி மார்க்கத்தில் இருந்து வரும் வாக னங்கள் 'பெல்' சாலையில் திரும்பி செல்ல வேண்டும். அங்கிருந்து மலைமேடு ெரயில்வே மேம்பாலம் வழியாக சென்று அக்ராவரத்தில் பொன்னை சாலையில் நுழைய வேண்டும். அங்கிருந்து இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி அருகே சென்னை - மும்பை சாலையை அடையலாம். அங்கிருந்து சென்னை செல்லலாம்.

    இதேபோல் சென்னை மார்க்கத்தில் இருந்து ராணிப்பேட்டை வழியாக வரும் வாகனங்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் பொன்னை சாலைக்குள் திரும்ப வேண்டும். அங்கிருந்து அக்ராவரத்தில் 'பெல்' சாலைக்குள் நுழைந்து ெரயில்வே மேம்பாலம் வழியாக சென்று சீக்கராஜபுரம் அருகே சென்னை - மும்பை சாலையில் இணையலாம். அங்கிருந்து காட்பாடி, சித்தூர், பெங்க ளூருக்கு செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றத்தினால் திருவலம், காட்பாடி மார்க்கத்தில் இருந்து சிப்காட், புளியந்தாங்கல் மற்றும் அப்ப குதியில் உள்ள பள்ளிகள், தொழிற்சா லைகளுக்கு வருபவர்கள் பெரும் சிரமத் துக்குள்ளாவார்கள். அவர்கள் கிட்டதட்ட 5 கிமீ சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் காட்பாடி, சித்தூர் மார்க்கமாக செல்லவேண்டிய புளியந்தாங்கல், நரசிங்கபுரம் பகுதியில் வசிப்போரும், சிப்காட் குடியிருப்பு பகு தியில் வசிப்போரும் பஸ் போக்குவரத்து இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே ஆற்காடு, வாலாஜா, ராணிப் பேட்டை மார்க்கத்தில் இருந்து சீக்கராஜ புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரையிலும், அங்கிருந்து ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடுக்கும் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோயில் சந்திப்பிற்கு செல்லலாம்.
    • 3 நாட்களுக்கு காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகிற 21-ந்தேதி அன்று காலை 8 மணிக்கு சென்னை காவல் துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நினைவு நாள் அனுசரிப்பதையொட்டி நாளை (17-ந்தேதி) மற்றும் 19-ந் தேதிகளில் இது தொடர்பான ஒத்திகை நடைபெற இருக்கிறது. ஆகவே மேற்கண்ட 17, 19, 21 ஆகிய 3 நாட்களுக்கு காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி காரணீஸ்வரர் பகோடா தெரு, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை செல்லலாம்.

    சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடது புறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பில் வலது புறம் திரும்பி ராயபேட்டை மெயின் ரோடு இடது புறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலை சென்று அவரவர் இலக்கை அடையலாம்.

    கண்ணகி சிலையில் இருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோயில் சந்திப்பிற்கு செல்லலாம்.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கண்ணகி சிலைக்கும் மற்றும் கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை கலங்கரை விளக்கம் எம்.ஆர்.டி. எஸ் அருகில் இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை சர்வீஸ் ரோடு வழியாக காமராஜர் சாலைக்கும், கடற்கரை சாலை சர்வீஸ் ரோடு வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து 100 அடி ரோடு சப்தகிரி பேக்கரி வரை உள்ள ரோட்டை இருபக்கமும் பயன்படுத்த முடியாது.
    • சிவானந்தா காலனியில் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கோவை,

    சிவானந்தா காலனியில் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று மதியம் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை சிவானந்தா காலனி. டாடாபாத், 100 அடி ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து 100 அடி ரோடு சப்தகிரி பேக்கரி வரை உள்ள ரோட்டை இருபக்கமும் பயன்படுத்த முடியாது.

    மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து ஏ.ஆர்.சி. வழியாக வரும் வாகன ஓட்டிகள் தண்ணீர் தொட்டி ரோடு வழியாக சிவானந்தா காலனி வந்து, டாக்டர்.ராதகிருஷ்ணன் ரோட்டில் இடதுபுறம் திரும்பி 6 முக்கு ரோட்டை அடைந்து டாடபாத் 5 மற்றும் 6 வீதிகள் வழியாக 100 அடி சாலையை அடையலாம்.

    வடகோவை மேம்பாலத்திலிருந்து கீழிறங்கி சிவானந்த காலனி செல்லும் வாகனங்கள் மின்சார வாரிய அலுவலகம், பவர் ஹவுஸ் ஜங்சன், டாக்டர் அழகப்பசெட்டி வீதி வழியாக 6 முக்கு சாலையை அடைந்து, இடதுபுறம் திரும்பி ஹட்கோ வீதி வழியாக சிவானந்தா காலனியை அடையலாம்.

    100 அடி ரோட்டில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வாகனங்கள் 100 அடி சாலை 11 வந்து கிராஸ் கட் ரோடு சென்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் அருகில் வலதுபுறம் திரும்பி பின் இடதுபுறம் டாடாபாத் 7வது வீதி வழியாக 6 முக்கு சாலையை அடைந்து சிவானந்தா காலனியை அடையலாம்.

    டாடாபாத் எக்ஸ்டன்சன், 3 மற்றும் 4-வது வீதிகளிலிருந்து வரும் வாகனங்கள் டாக்டர்.ராதகிருஷ்ணன் சாலை வழியாக வந்து சிவானந்தா காலனியை அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வட சென்னைப் பகுதியில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை நடக்கிறது.
    • இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    சென்னை :

    சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வட சென்னைப் பகுதியில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வதால், வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை வட சென்னைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதன்படி நாளை காலை 8 மணி முதல் ஊர்வலம் வால் டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை,அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த சாலைகளில் பயணிக்க வேண்டிய வாகனங்கள், ஈ.வெ.ரா. பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

    மாலை 3 மணி முதல் ஊர்வலம் பேசின் பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை,அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த வழித்தடங்களில் செல்ல வேண்டிய வாகனங்கள், பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை,ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். ஊர்வலம் மூலகொத்தலம் பகுதியை அடைந்த உடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    ஊர்வலம் பேசின்பாலம் சாலையில் செல்லும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் செல்லும் போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள், வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் செல்லும்போது நாராயண குரு சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    அவதான பாப்பையா சாலையில் ஊர்வலம் செல்லும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.

    ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செல்லும்போது, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் நாராயணகுரு சாலை வழியாக செல்லலாம்.

    ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    இதேபோல ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் செல்லும் போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.

    ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தை அடையும்போது, ஒட்டேரி சந்திப்பு, மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள், ஒட்டேரி சந்திப்பில் இருந்து குக்ஸ் சாலைவழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து வி.பி காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகவும் செல்லலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விளக்குகள் இல்லாமல் இருளில் கிடக்கும் சர்வீஸ் சாலை
    • பைக்கில் செல்பவர்கள் அவதி

    வேலுார்:

    வேலூரில் போக்கு வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி வியாபாரிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாகனங்கள் வந்து செல்வதில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

    வேலுாரில் இருந்து காட்பாடி செல்லும் அனைத்து வாகனங்களும் (4 வீலர், 2 வீலர்) கிரீன் சர்க்கிள் சாலையில் செல் வதை தவிர்த்து, நேஷனல் தியேட்டர் சர்க்கிள் அருகில் இடதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சா லையை அடைந்து, சேண் பாக்கம், ெரயில்வே மேம்பாலத்தின் அடியில் திரும்பி புது பஸ் ஸ்டாண்டு வழி்யாக காட்பாடி, சென்னை மார்க்கமாக செல்ல வேண்டும்.

    சென்னை மார்க்கமாக புது பஸ் ஸ்டாண்டு வரும் வாகனங்கள், காட்பாடி செல்லும் அனைத்து வாகனங்களும் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நுழை வதை தவிர்த்து கிரீன் சர்க்கிளை அடுத்துள்ள சர்வீஸ் லைனில் நுழைந்து, சேண்பாக்கம் ெரயில்வே மேம்பா லத்தின் கீழ் திரும்பி புது பஸ் ஸ்டாண்டு வந்து காட்பாடி வழியாக செல்ல வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது.

    அன்று முதல் அந்த வழியாகத்தான் வாகனங் கள் சென்று வருகின்றன. ஆனால், அங்குள்ள பெட்ரோல் பங்கைத் தா ண்டி சென்றால் போதுமான வெளிச்சம் இல்லை. அங்கு மின் விளக்கு வசதிகள் இல்லாமல் இருட்டாக இருக்கிறது.

    ெரயில்வே மேம் பால பகுதி, ஆட்கள் நட மாட்டம் இல்லாமல் குடி மகன்களின் கூடாரமாக இருந்தது. இப்போதும் அந்நிலைமை நீடிக்கிறது.

    அந்த வழியாகத்தான் இப்போது வாகனங்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கும் போதுமான விளக்கு வெளிச்சத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட் டுள்ளது.

    குறிப்பாக பைக்குகளில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே, அங்கு உடனடியாக போது மான அளவுக்கு விளக்கு வசதிகள் மேற்கொள்ள வேண்டும், போலீஸ் ரோந்து அங்கு அடிக்கடி நடத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம்-மதுரை வழித்தடத்தில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • 41 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரமக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியாா் பஸ்கள் பரமக்குடி நகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் அனைத்தும் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை, சருகனி, காளையாா்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரைக்கு செல்ல வேண்டும்.

    மதுரையில் இருந்து வரும் பஸ்கள் பூவந்தி, சிவகங்கை, காளையாா்கோவில், சருகனி என அதே பாதையில் ராமநாதபுரம் வந்து ராமேசுவரம் செல்ல வேண்டும்.

    பரமக்குடி வருவோா் சொந்த வாகனங்களில் வரவேண்டும் உள்ளிட்ட 11 நிபந்தனைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவின்படி பதாகைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 160 வழித்தடங்கள் தடை செய்யப்பட்டவை ஆகும்.

    அனுதியின்றி பரமக்குடிக்கு 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டத்தில் 131 பகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்ப ட்டுள்ளன. மாவட்ட எல்லையில் 41 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 நாட்கள் செயல்படுத்த படுகிறது
    • சனி, ஞாயிற்றுக்கிழமையில் சோதனை முயற்சி

    வேலூர், செப்.9-

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தி னம் முதல் பெங்களூரு , திருப்பதி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன் காரண மாக கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு வருகிறது.

    இந்தநிலை யில் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமார வேல் பாண்டியன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சூப்பிரண்டு போலீஸ் ராஜேஷ் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர் . ஆய்வுக்கு பின்னர் கலெக் டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

    கிரீன் சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை குறைக்க வேலூர் பழைய பெங்களூரு சாலை மற்றும் ஆரணி சாலையில் இருந்து காட்பாடி நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேஷனல் சர்க்கிள் அருகே உள்ள அணுகு சாலை வழியாக செல்ல வேண்டும்.

    இலகு ரக வாகனங்கள் சிறிய பாலத்தின் வழியாகவும், கனரக வாகனங்கள் ரெயில்வே பாலம் வழியாகவும் புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடிக்கு செல்ல வேண்டும்.

    அதேபோல் சென்னையில் இருந்து வேலூருக்கு வரும் பஸ்கள் அனைத்தும் கிரீன் சர்க்கிளை அடுத்துள்ள அணுகு சாலை வழியாக ரெயில்வே பாலத்தின் கீழ் சென்று புதிய பஸ் நிலையத் திற்கு செல்லவேண்டும்.

    இந்த மாற்றம் போக்குவரத்து குறை வாக காணப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமையில் சோதனை முயற்சி அடிப்படையில் செய்யப்பட உள்ளது.

    இது தொடர்பாக வாகன ஓட்டிகள், பொதுமக் கள் தெரிவிக்கும் கருத்தின் பேரில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை நெல்லை மாவட்டத்திற்கு வருகிறார்.
    • மாநகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் போக்குவரத்தை மாற்றம் செய்து அறிவித்துள்ளார்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை நெல்லை மாவட்டத்திற்கு வருகிறார். வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்குகிறார். நாளை காலை 10.30 மணிக்கு அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    போக்குவரத்து மாற்றம்

    முன்னதாக சுற்றுலா மாளிகையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் அவர் வழி நெடுகிலும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொள்கிறார்.

    இதனையொட்டி மாநகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் போக்குவரத்தை மாற்றம் செய்து அறிவித்துள்ளார்.

    அதன்படி நாளை(வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் அனைத்து கனரக வாகனங்களும், தாழையூத்து சர்வீஸ் ரோடு, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர் ரோடு, ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் சந்திப்பு, சேரன்மகாதேவி ரோட்டில் சுத்தமல்லி விலக்கு, தென்காசி ரோட்டில் கண்டியப்பேரி விலக்கு வழியாக மாநகர பகுதிக்குள் வராமல் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் காலை 8.30 மணி முதல் மற்ற அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்வதற்கான ஏற்பாடுகள் மாநகர காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சீனிவாச நகர் சந்திப்பில் இருந்து ஜங்ஷன் செல்லும் வாகனங்கள், ஐ.ஓ.பி. காலனி, ராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் உள்ள நான்குவழி சாலை பாலத்தின் கீழ் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த பாதையை பயன்படுத்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பாளை பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம். இதேபோல் பாளை பொட்டல் விலக்கில் இருந்து மார்க்கெட் வரும் வாகனங்கள் அனைத்தும் சீனிவாசநகர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். மேலும் சீவலப்பேரி சாலையில் இருந்து சந்திப்பு செல்லும் வாகனங்களும், சந்திப்பு பகுதியில் இருந்து கன்னியாகுமரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் தச்சநல்லூர் வழியாகவும் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பழையபேட்டை கண்டியப்பேரி சாலை வழியாகவும், சுத்தமல்லி விலக்கில் இருந்து கோபாலசமுத்திரம் வழியாக அம்பை ரோட்டுக்கு சென்று வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் மாநகர பகுதிக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து சந்திப்பு பகுதிக்கு செல்ல வேண்டியவர்கள் அண்ணாசாலை, அறிவியல் மையம் வழியாகவும், சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் வாகனங்கள் கலெக்டர் அலுவலக சாலை, மேலப்பாளையம் சிக்னல் வழியாகவும் செல்ல வேண்டும். பாளை பஸ் நிலையத்தில் இருந்து சந்திப்பு செல்லும் வாகனங்கள் வீரமாணிக்கபுரம் சாலை வழியாக மேலப்பாளையம் வந்தடைந்து அங்கிருந்து வடக்கு பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும். பாளை தெற்கு பஜாரில் இருந்து சந்திப்புக்கு செல்லும் வாகனங்களும் மேலப்பாளையம் சிக்னல் வழியாகவே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சாந்திநகரில் இருந்து சந்திப்பு செல்லும் வாகனங்கள் நான்குவழி சாலை வழியாக சென்றடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போக்குவரத்து மாற்ற அறிவிப்பை நாளை ஒருநாள் மட்டும் நடைமுறைபடுத்த போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சீனிவாசன், அனிதா, சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×